Posts

Showing posts from July, 2023

மாலவல்லியின் தியாகம் | சரித்திர நாவல் | முத்தரையர் பகுதி |

Image
||மாலவல்லியின் தியாகம்|| இரண்டாம் பாகம் - குருக்ஷேத்திரம் அத்தியாயம் 16 - விஷ விருட்சம்      அன்று தஞ்சை மன்னர் மாறன் முத்தரையர் அரண்மனையில், மந்திராலோசனை மண்டபத்தில் ஒரு ரகசியக் கூட்டம் நடக்க ஏற்பாடாகிக் கொண்டிருந்தது.      பெருந்தரத்து அரசாங்க அதிகாரிகளும், போர் முறை நன்கு அறிந்த நிபுணர்களும், கூட்டங் கூட்டமாக மந்திராலோசனை மண்டபத்துக்குள் வந்து அவரவர்களுக்கு என்று நியமிக்கப்பட்டிருந்த ஆசனங்களில் அமர்ந்தனர்.      தஞ்சை அரசர் முத்தரையர் கோபத்தினால் கொதிக்கும் உள்ளத்துடன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். அமைச்சர் புலிப்பள்ளியார் கொடும்பாளூருக்குப் போய்க் கோட்டை ரகசியங்களை அறிந்து கொண்டு வந்த விஷயம் முதலில் ஆரம்பமாகியது.      புலிப்பள்ளியார் கம்பீரமான குரலில் பேசத் துவங்கினார்.      “அரசே, சபையோர்களே! கொடும்பாளூரில் தான் நாம் முதலில் வேரோடு களைந்தெறிய வேண்டிய விஷ விருட்சம் கிளை விட்டுப் படர்ந்திருக்கிறது. அந்த விஷ விருட்சத்தின் நிழலில் தான் பழையாறை நகர் சின்னப் பயல் விஜயன் ஒண்டிக் கொண்டிருக்கிறான். அந்த விஷ விருட்சம் வெட்டப்பட்டு விட்டால், சோழ அரசைப் பற்றிய நினைப்புக்கூட யாரு

வலையர் இன மக்களின் நாட்டுப்புறப் பாடல்கள்

Image
வலையர் இன மக்களின் நாட்டுப்புறப் பாடல்கள்  நாகரிகம் சென்றடையாத கிராமப்புறப் பகுதிகளையே நாட்டுப்புறம் என அழைக்கிறோம். நாட்டுப்புறம் என்ற சொல் சிற்றூர், சிற்றூரைச் சூழ்ந்த இடத்தைக் குறிக்கும் சொல்லாகக் கொள்ளலாம். அங்கு வாழும் மக்களிடையே மலர்ந்து மணம் பரப்பும் பாடல்கள், கதைகள், பழமொழிகள், விடுகதைகள், கதைப் பாடல்கள் போன்றவைகளை நாட்டுப்புற இலக்கியம் எனக் கூறலாம். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த குடி என்று முன்னோரால் போற்றப்படும் தமிழ் மொழியின் தோற்றம் போன்றே இவள் என்று பிறந்தனள் என்று அறியப்படாத இயல்பை பொறுத்த வரையில் நாட்டுப்புற மக்களோடு இரண்டறக் கலந்தவை என்று கூறலாம். அதாவது வாழ்வின் அனைத்துச் சூழல்களிலும் நாட்டுப்புற இலக்கியங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. கள ஆய்வால் சேகரிக்கப் பெற்ற தரவுகளின் அடிப்படையில் முனைவர் சக்திவேல் அவர்கள் இவ்விலக்கியங்களைப் பின்வருமாறு வகைப்படுத்துவார்.  1. நாட்டுப்புறப் பாடல்கள்,  2. கதைகள்,  3. கதைப்பாடல்கள்,  4. பழமொழிகள்,  5. விடுகதைகள்,  6. புராணம் முதலியன.  வாய்மொழி இலக்கியங்களை ஏட்டில் எழுதா இலக்கியங்கள் என வகைப்படுத்துவர் இன்

| வலையர் குடியில் பாண்டிய மன்னர் பழையன் மாறன் |

Image
| வலையர் குடியில் பாண்டிய மன்னர் பழையன் மாறன் | பாண்டிய நாட்டில் பண்டைய காலம் தொட்டு வாழ்ந்து கொண்டு வரும் என் வலையர் இனமே. தென் மாவட்டத்தின் அடையாளமே. வலையர் புகழ் பெரும் அளவில் உள்ளது. அழகர் கோவில், பாரி வள்ளல், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, பாண்டி  முனீசுவரர் கோவில் , ஏழூர் மூப்பர் நாட்டு திருவிழா என பல சொல்லலாம். பாண்டிய நாட்டில் பெரும்பான்மையாக வாழ்ந்து கொண்டு வரும் என் வலையர் மக்கள் பாண்டியர் மரபே சார்ந்தவர்கள் என்கிற உண்மையே மறந்து விட்டார்கள். சங்க காலத்தில் கொற்கை மற்றும் மதுரை பாண்டியர்களின் தலைநகரமாக இருந்தது என்பதை நாம் அறிவோம். அதே கொற்கை மற்றும் மதுரையில் நம் வலையர் இனம் சங்க காலம் தொட்டு இன்று வரைக்கும் வாழ்ந்து கொண்டு வருகிறோம்.  சங்க காலத்தில் பல்வேறு பெயரில் நாம் அழைக்கப்பட்டு வந்தோம்.  வேட்டுவர், பழையர், வலையர்(வ,ஞ).  சங்க காலத்தில் வாழ்ந்த நம் புகழ் பெற்ற மன்னர் தான் பழையன் மாறன் என்பவர். இவர் பாண்டிய மரபே சார்ந்த மன்னர் ஆவார். அதாவது பாண்டியர் குடியே சார்ந்தவர். இவரின் குடி மற்றும் காவல்மரம் வேப்பமரம் ஆகும். இதை நாம் சங்க இலக்கிய பாடலில் காணலாம். அதே போல்

சேந்தங்குடி வலுவாடியார் வலையர் ஜமீன்

Image
இத்தனை ஆதாரங்கள் இருந்தும், எந்த ஆதாரமும் இல்லாமல் வலையர்களை கள்ளர்களாக மாற்றிவிட்டார்கள் அப்பகுதி கள்ளர்கள்...

வலையுழவு, வலையால் கடலில் உழுது உண்ணும் வலையர்கள்

Image
அருந்தவம் செய்து பார்வதியை மகளாகப் பெற்ற வலைஞர் மன்னன், வலையனாக வந்த சிவபெருமானை பார்த்து கேட்கிறார், திருந்திய அழகினையுடைய நம்பி, நீ யார் செப்புக என்று. அதற்க்கு வலையனான சிவபெருமான் சொல்கிறார், மதுரையில் வலையர்க்கெல்லாம் தந்தையைப்போல் சிறந்துள்ள ஓர் தனிவலை உழவனது நல்ல மைந்தன் என்கிறார். இதுல பாருங்க மீனவர்களை வலையுழவர்கள் அதாவது வலையால் கடலில் உழுது உண்பவர்கள் என்று சொல்கிறார் பரஞ்சோதி முனிவர், அதுவும் இல்லாமல் மதுரையில் வீற்றிருக்கும் சொக்கநாதராகிய தன்னையே வலையர்க்கெல்லாம் தந்தை என்கிறார் சிவபெருமான். தமிழை பரஞ்சோதி முனிவரும், வலையரை சிவபெருமானும் வாழ்த்துங்கால் பேரின்பம் என்னையும் ஆட்கொள்கிறது 🙏 "யான்பெற்ற இன்பம்  பெறுக இவ்வையகம்" ||சித்தன் சிவமாரி||

திருச்சி குழுமணி தெய்வத்திரு "மிராசுதாரர்.பரமசிவம் முத்துராஜா"

Image
திருச்சி குழுமணி தெய்வத்திரு "மிராசுதாரர்.பரமசிவம் முத்துராஜா" திருச்சி மாவட்டம் குழுமணி கிராமத்தை சேர்ந்த பெரும் நிலக்கிழார் தெய்வத்திரு "பரமசிவம் முத்துராஜா" அவர்கள் மிகப்பெரிய சிவபக்தர் ஆவார். அய்யா அவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இராமேசுவரம் இராமநாதசுவாமி திருக்கோயிலின் மீது அதிக பக்தியும் பற்றும் உடையவர் ஆவார். முன்பு அய்யா பரமசிவம் முத்துராஜா அவர்கள் தனக்கு குழந்தைவரம் வேண்டி மனம் உருகி இராமேசுவரம் இராமநாதசுவாமி திருக்கோயிலில் வேண்டியிருக்கின்றார். அவர் வேண்டியது போலவே அவருக்கு சில காலங்களிலே ஓர் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. சேதுபதி சீமையில் அமைந்துள்ள இராமேசுவரம் இராமநாதசுவாமி திருக்கோயில் சென்று அவரது வேண்டுதல் நிறைவேறியதனால் அவரது முதல் ஆண் குழந்தைக்கு "சேதுபதி" என்ரே அய்யா பரமசிவ முத்துராஜா அவர்கள் பெயர் வைத்துள்ளார். மற்றும்  இராமேசுவரம் இராமநாதசுவாமி கோவிலுக்கு ஏதாவது பெரிய அளவில் ஓர் திருப்பணி செய்ய அய்யா பரமசிவ முத்துராஜா அவர்கள் எண்ணினார் அவர் அவரது விருப்பத்தை முதலில் கோவிலில் உள்ள தனக்கு தெரிந்த பழக்கப்பட்ட பட்ட

வலை வீசு படலம் வலையர் பகுதிகள்

Image
பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணத்தில், திருவாலவாய்க் காண்டத்தில், வலை வீசு படலத்தில் வரும் வலையர் பகுதிகள்...

வலை வீசின படலம்

Image
தொடக்கம்   2649. மின் திரித்து அன்ன வேணி வேதியன் இடைக்காடன் பின் சென்று மீண்டனை யான் கொண்ட பிணக்கினைத் தீர்த்த                                                           வண்ணம் இன்று உரை செய்து முந்நீர் எறிவலை வீசி ஞாழன் மன்றல் அம் குழலினாளை மணந்து மீள் வண்ணம்                                                           சொல்வாம். 1 உரை     2650. அந்தம் இல் அழகன் கூடல் ஆலவாய் அமர்ந்த நீல சுந்தரன் உலகம் ஈன்ற கன்னிஅம் கயல் கண்ணாள் ஆம் கொந்து அவிழ் அலங்கல் கூந்தல் கொடிக்கு வேறு                                                         இடத்து வைகி மந்தணம் ஆன வேத மறைப் பொருள் உணர்த்தும்                                                         மாதோ. 2 உரை     2651. நாதனின் அருளால் கூறு நான் மறைப் பொருளை எல்லாம் யாது காரணத்தான் மன்னோ அறிகிலை எம் பிராட்டி ஆதரம் அடைந்தாள் போலக் கவலையும் சிறிது தோன்ற ஆதரம் இலள் ஆய்க் கேட்டாள் அஃது அறிந்த அமலச்                                                               சோதி. 3 உரை     2652. அரா முகம் அனைய அல்குல் அணங்கினை நோக்கி