குன்றாண்டார்கோயில் குகைக்கோயில் முத்தரையர் வரலாறு
முன்னுரை
குன்றாண்டார்கோயில் குகைக்கோவில் தமிழகப் புதுக்கோட்டை
மாவட்டம் குளத்தூர் வட்டத்திலுள்ள குன்றாண்டார் கோயிலில் பாறையைக்
குடைந்து பல்லவ மன்னர்களின் கீழ் ஆட்சி புரிந்த முத்தரையர்
மன்னர்களால் கட்டமைக்கப்பட்ட குடைவரைக்கோவில் இதுவாகும். இது
எட்டாம் நூற்றாண்டில் கட்டமைக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. இதன்
நீட்டிக்கப்பட்ட கட்டிடப்பகுதியானது சாளுவ சோழ மன்னர்கள் மற்றும்
விஜயநகர பேரரசினால் கட்டமைக்கப்பட்டுள்ளது. பிற்கால குடைவரை பிற்கால பல்லவர் மற்றும் சோழர் கலைப்பாணியில் உள்ளது. இங்கு
பிற்கால சோழர்கள், பாண்டியர்கள், மற்றும் விஜயாலயப் பேரரசின்
கல்வெட்டுகளைக் கொண்டிருக்கும் ஒருகற்கோயிலாக உள்ளது.
குன்றாண்டார் கோயில் என்பது குன்று - ஆண்டான் கோயில் என்கிற பொருள் படும் வகையில் குன்றை ஆட்சி செய்யும் இறைவனை முன்னிறுத்தி பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதியை ஏழாம் நூற்றாண்டுத் தொடங்கி ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை பல்லவர்களின் கீழ் முத்தரையர்கள் ஆட்சி செய்துள்ளனர். இதன் பிறகு பிற்காலச் சோழர்களால் கைப்பற்றபட்டுள்ளது.
வரலாறு
குடைவறை கோவிலானது நந்திவர்மன் பல்லவ மல்லன்
என்றழைக்கப்பட்ட இரண்டாம் நந்திவர்மன் பல்லவனின் (கி.பி.710-775)
துணை ஆட்சியாளராக விளங்கிய முத்தரையர் மன்னரால்
கட்டப்பட்டுள்ளது. நந்திவர்மன் மற்றும் அவரதுமகன் தந்திவர்மன்
காலத்தைய முற்காலக் கல்வெட்டுகள் திருவாதிரை வழிபாட்டு நிகழ்வுக்கு
கொடை வழங்கிய செய்திகள் பொறிக்கப்பட்டுள்ளது. சௌந்தரராஜன்
என்பவர் எட்டாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இக்கோவில்
கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று உரைக்கிறார்.
Comments
Post a Comment