முத்தரையர் சிற்பம் :


முத்தரையர் சிற்பம் :

செந்தலை, (படம் 9 a) தஞ்சை மாவட்டம்,

நரசிம்மர் : இவ்வூர் சிவாலயத்தில் உள்ள நரசிம்மர், மேலிரு கரங்களில்
ஆழியும் சங்கமும் பூண்டு, கீழிரு கரங்களை கால்களின் மீது அமர்த்தி அழகாக அமர்ந்திருக்கும் காட்சி ஆணவம் நிறைந்த அவுணனின் உடலை அழித்த திண்மையைத் தெளிவு பெற காட்டும் வகையில் உள்ளது. முத்தரையர்களைப் பற்றிய கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளதாலும், கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சிற்ப அமைதியுடன் விளங்குவதாலும், இச்சிற்பம் முத்தரையர் சிற்பமாக இருக்கக் கூடும்.

திருமால்: (படம் 9 b) மேலிரு கரங்களில் ஆழியும் சங்கும் பூண்டு கீழ் வலக்
கரத்தால் அபயம் அளித்து, இடக்கரத்தைக் குரக்கம் மீது அமர்த்தி அமர்ந்த
நிலையில் காணப்பெறும் திருமாலின் சிலையும் கி.பி. 8-ஆம் நூாற்றாண்டைச்
சார்ந்தது. இவ்வுருவும் முத்தரையர் சிற்பமாக இருக்கக் கூடும்.

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்