வெங்கலநாட்டு ( கொங்கு நாடு ) பட்டக்காரரான காக்காவாடி பட்டக்காரர் வெங்கடாசல நல்லெண்ண கவுண்ட முத்துராஜா பட்டயம்

வெங்கலநாட்டு ( கொங்கு நாடு ) பட்டக்காரரான காக்காவாடி பட்டக்காரர் வெங்கடாசல நல்லெண்ண கவுண்ட முத்துராஜா பட்டயம் . சாதி. : முத்துராஜா பட்டம் : கவுண்டர் குறுகுல வம்சமான ஷத்திரியர் , கண்ணப்பர் நாயனார் வழிவந்த வேட்டுவ சாதியிலே முத்துராஜாக்கள் ( முத்தரையர்கள் ) பேர் புகழ் பெற்றவர்களாய் பட்டக்காரர்களாய் ( நாட்டு தலைவனாய் ) இருந்த போது நடந்த நிகழ்வு . ஆண்டு : கி.பி 14 ஆம் நூற்றாண்டு அரசர் : பாண்டிய தேசாதிபதியான சுந்தர பாண்டியர் . சேர , சோழ , பாண்டிய நாட்டின் ராச்யாதிபதிகளான காரியஸ்தர்கள் மூன்று பேர் மக்களுக்கு பிரச்சினைகளையும் , ஆக்கிரமிப்பும் செய்துள்ளனர் . இதனை தாங்கிக்கொள்ள முடியாமல் சில பிராமண செட்டியார்கள் பாண்டிய மன்னரிடம் முறையிட்டனர். இதனை கேட்டறிந்த பாண்டிய மன்னர் நாட்டு தலைவனான நல்லண முத்துராஜா கவுண்டரிடம் ஆணையிட்டான் . மன்னன் ஆணையிட்டதால் அக்கிரமம் செய்த மூன்று பேரையும் வெற்றிகொண்டான் நல்லண முத்துராஜா. நல்லண முத்துராஜா வெற்றி பெற்றதால் பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியர் பட்டம் கொடுத்து , பல்லக்கு , சுறுட்டி , வெட்டுப்பாவடை , பட்டப்பெயர் விளங்குபடியான விருதுகளும் கொடுத்து கௌரவித்தார். பட்டக்காரர் என்பது அரசு நிர்வாகப் பொறுப்பு. அரசன் பார்த்து நியமிப்பது. அரசனின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவது, வரிவசூல், தானிய-விதைநெல் இருப்பு, நீராதாரம், ஆண்-பெண் விகிதாச்சாரம் எல்லை பாதுகாவல் போன்றவை கடமைகள். ஒரு நாட்டின் பட்டக்காரர் என்றால் அவர் அந்நாட்டின் எல்லா மக்களுக்குமே தலைவர்; அரச பிரதிநிதி போல.

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்