ஓலைச்சுவடி மற்றும் செப்புப் பட்டயங்களில் முத்தரையர்
ஓலைச்சுவடி மற்றும் செப்புப் பட்டயங்களில் முத்தரையர் ____________________________________________ வரலாற்றை அறிய செப்புப்பட்டயங்கள் மிகவும் உதவியாக உள்ளன இதேபோல கல்வெட்டுகளும் ஓலைச்சுவடிகளும் வரலாற்றை நமக்கு தெரிவிக்கின்றன புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்தகைய பல செப்பேடுகளும் மேலும் பகுதிகளிலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் முத்தரையர் வரலாறு கூறும் செப்பேடுகள் பல உள்ளன அவை முத்தரையரைப் பற்றிக் கூறும் செய்திகளைக் காண்போம் 1.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பேரூராட்சி அம்பலகாரர் திரு.மயிலப்பன் முத்தரையர் அவர்களிடம் கீழ்க்காண்ட ஒன்பது செப்பு ஏடுகள் உள்ளன. அவைகளில் சாலியவாகன சகாப்தம் 1400க்கு கிபி 1478க்கு மேல் செல்லாயி நின்ற நந்தன வருடம் வைகாசி மாதம் 9ஆம் தேதி வழங்கப்பட்ட செப்புப் பட்டயங்களில், ஆலவள நாட்டிக்கு வந்தவர்கள் பேய் வெட்டி மயிலாடி ஆவான் முத்திரியர், அமரன் முத்திரியர், ஆலமங்காட்டார் சொரிய முத்திரியர் ஆக நாலு வகை முத்திரியர் பற்றிக் கூறுகிறது. 2.இவரிடமே உள்ள சாலிவாகன சகாப்தம் 1400 க்கு மேல் செல்லா நின்ற விஜய வருடம் ஐப்பசி மாதம் 10ம் தேதி குறிப்பிடும் செப்புப் பட்டயத்தில், பேய் வெட்டி மய