வலையர்

வலையர் என்போர் முற்காலத்தில் வலையையும், வளரி(வளைதடி) யையும் முதன் முதலில் அறிந்து முறையே கடலிலும் களத்திலும் வீசிய,வரலாற்று புகழ் உடையவர்கள் அதற்கு ஆயிரம் ஆயிரமாய் இலக்கியச் சான்றுகள் தமிழிலே உண்டு.

இம்மக்கள் தமிழகத்தில்.மதுரை, தேனி,சிவகங்கை,ராமநாதபுரம் ,கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பரவி வாழும் ஒரு இனக்குழுவினராவர்.

இவர்கள் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

 முன்னைதமிழருள் மூத்தவர் வலையரே தரைதனைக் கடந்து முந்நீர் அளந்தமுத் திரையரே பெருவலை கோல்வலை வரிவலை கொண்டு கலத்தினில் சென்று கடல்தனில்மீனைப் பிடித்தோர் அவரே கடும்போர்க் களத்தினில் வளரியைச் சுழற்றி பகைவனை விரட்டியப் போர்மறவரும் அவரே

 அதனாலேபுகழும் பட்டினப்பாலையும் மதுரைக்காஞ்சியும் அன்னோரை பின்னாளில் ஐங்குறுநூறும் அழகாய்ச்சொன்னது.

சங்கஇலக்கியங்களில் வலையர் தொகு

”வலைவர்”,”வலைஞர்” இவையாவும் வலையர் என்ற சொல்வழக்கின் செய்யுள் வடிவம் என்பதை நம் அறிவோம்.அதுபோல வலையர் என்பதை “வலைஞர்”,”வலைவர்” என்றே செய்யுள் வழக்கில் இலக்கியங்கள் குறிப்பிடும்.

பெரும்பாணாற்றுப்படை என்ற தொகை நூலிலிருந்து

“கோடை நீடினும் குறைப்பட வறியாத் தோடாழ்குளத்துக் கோடுகாத்திருக்கும் கொடுமுடி ‘வலைஞர்’ ”

பாடலின் பொருள்;கோடை நீடித்தாலும்,குறையாத ஆழமுள்ள குளத்தின் கரையினிலே மீன்பிடிக்கக் காத்திருக்கும் வலைஞர்/வலையர்.

மதுரைக் காஞ்சியிலிருந்து
“வண்டிரை கொண்ட கமழ்பூம் பொய்கை கம்புட் சேவல் இன்துயில் இரிய ‘வல்லை நீக்கி வயமீன் முகந்து கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர்’ “

பாடலின் பொருள்;வண்டுகள் தங்கிய பூமணம் பொருந்திய பொய்கையிலே படர்ந்திருக்கும் வள்ளைக்கொடியைக் கம்புள் சேவலின் இனிய தூக்கம் களையும்படி நீக்கிவிட்டு வலையை விரித்து கொழுத்த மீன்களை பிடித்து விற்கும் வலைஞர்/வலையர்.

ஐங்குறுநூறின் அம்மூவனார் பாடிய நெய்தல் திணையில் வரும் பாடல்

“சிறுநணி வரைந்தனை கொண்மோ பெருநீர் ‘வலைவர்’ தந்த கொழுமீன் வல்சிப் பறைதடி முதுகுருகு இருக்கும் துறைகெழு தொண்டி அன்னவிவள் நலனே”

பாடலின் பொருள்;தலைவனோடு காதல் கொண்ட தலைவி,பறத்தலை கைவிட்டு தம்மை விரைந்து மணம் செய்துகொள்ளுமாறு அவனிடத்தே வற்புறுத்துகிறாள்.அதற்குச் சான்றாய் ‘கடலுக்குச் சென்று வலையைக் கொண்டு மீன் பிடிக்கும் மக்கள்,அம்மீன்களை கரைக்கு கொண்டுவந்தவுடன் அதனை வாங்குவதற்கு பலரும் போட்டியிடுவர்’.அதுபோல பருவ வயதினளாகியத் தம்மை மணம் முடிக்க பலரும் முயன்று வருவதாகவும்,அதை உணர்ந்து தம்மை விரைந்து மணக்குமாறும் அவனிடத்தே சொல்லுகின்றாள். இதன் மூலம் ஐங்குறுநூறு இயற்றப்பட்ட காலத்திலேயே வலையர்கள் வாழ்ந்ததும்,அவர்கள் மீன்பிடித் தொழிலைச் செய்ததும் தெளிவாகத் தெரியவருகின்றது.

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்