முத்தரையர் கல்வெட்டு 4

முத்தரையர் கல்வெட்டு:-

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா மலையடிப்பட்டியில் இரண்டு குடைவரைக் கோயில்களும், அவற்றிற்குப் பின்னுள்ள குன்றின் ஒற்றைப் பாறையில் சமணக் கோட்டோவியங்களும் உள்ளன. குடைவரைகளில்  ஒன்று ஒளிபதி விஷ்ணு க்ரஹம் எனும் வைணவத்தலம் ஆகும். மற்றொன்று  வாகீஸ்வரர் என்ற சைவத்தலமாகும். இச்சைவத்தலமான வாகீஸ்வரர் கோவிலானது குவாவஞ் சாத்தனேன் என்ற முத்தரையரால் குடையப்பட்டது. முத்தரைய மன்னர்கள் எழுப்பிய சில கோவில்களில் இதுவும் ஒன்று. இச்செய்தியை உரைக்கும் கல்வெட்டானது இக்கோவிலிலுள்ள தூணில்  பொறிக்கப்பட்டுள்ளது. அது தரும் செய்தியிது,

1ஸ்வதிஸ்ரீ கோவிஜய நந்திபர்மருக்கு ஆண்டு பதி

2.னாறாவது விடேல்விடுகு முத்தரையனாகிய

3.குவாவஞ் சாத்தனேன் திருவாலத்தூர் மலை

4.தளியாக குடைந்து............ய்து

5.இத்தளியை...........

6...........கீழ் செய்ங்களி நாட்டு

7........ நாட்டார்க்கு செய்த....

சுமார் ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் பழமையான கோவிலிது.

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER