Posts

நார்த்தாமலை கல்வெட்டு

Image
நார்த்தாமலை கல்வெட்டு / திருச்சிராப்பள்ளி முத்துராஜாமகாஜன தண்ணீர்பந்தல் செ.தம்புராண்முத்துராஜா வரகநேரி பிள்ளையார்கோயில் தெரு என்பவரால் 1909ம் ஆண்டு தொடங்கப்பட்டு முப்பதாவது ஆண்டில் இந்த கல்வெட்டு நிறுவப்பட்டுள்ளது.

பெரும்பாண முத்தரைசர்

Image
புருசவர்மனின் பத்தாம் ஆட்சியாண்டில் பெரும்பாண முத்தரைசர் என்பவர் கங்க நாட்டை ஆண்டுவர, பாகற்றூர் என்ற ஊரில் கள்வர்கள் ஆநிரைகளை கவர்ந்தனர். நொச்சி சாத்தன் என்பவர் ஆநிரைகளை மீட்டபோது இறந்துபட்டான், அந்த வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் கல்வெட்டு.

தென்னவன் இளங்கோ முத்தரையர்

Image
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சோற்றுத்துறை மகாதேவர்க்கு உத்தமதானி என்னும் பெயர் கொண்ட திருவிளக்கு ஒன்றினை இரவும் பகலும் எரிப்பதற்க்காக -தென்னவன் இளங்கோ முத்தரையர்- இருபத்தைந்து கழஞ்சு பொன் கொடுத்ததை தெரிவிக்கும் கல்வெட்டு.

சாத்தன் மாறன் முத்தரையர்

Image
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், மதியநல்லூர் பெரியகுளத்து மேலமடைத்தூண் முத்தரையர் மன்னன் கல்வெட்டு | சாத்தன் மாறன் முத்தரையர் குமிழி அமைத்ததை சொல்கிறது.

முத்தரையர் கல்வெட்டுகள்

Image
1.முத்தரையர் மன்னர்களில் தன்னாட்சி புரிந்த பெரும் வேந்தன், தென்னவன் இளங்கோ முத்தரையர், இவர் எடுப்பித்த புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பிரகதம்பாள் உடனுறை உத்தமநாத சுவாமி சிவன் கோயில் கல்வெட்டுகள். 2.முதலாம் பராந்த சோழனின் மகன் அரிகுல கேசரி முத்தரையர் கல்வெட்டு | மகள் அனுபமா கொடும்பாளூர் முத்தரையரை மணந்திருக்கிறார். 3.குவாவன் சாத்தன் என்கிற விடேல் விடுகு முத்தரையர் தன் பெயரிலேயே, விடேல் விடுகு மங்கலம் என்கிற ஊரையும், விடேல் விடுகுக் கல் என்கிற பொன்னை அளக்கும் கல்லையும் நிறுவியிருக்கிறார் | இதேபோல முத்தரையர்களின் நில அளவை முறையே முந்திரிகை என வழங்கப்பட்டுள்ளது.

வேட்டை எங்கள் மரபுரிமை

Image
பழந்தமிழர் மரபு என்பதே வேட்டையில் இருந்து தான் தொடங்குகிறது, அதை தொன்றுதொட்டு பின்பற்றிவரும் வேட்டுவ வலையர்கள் தமிழகம் முழுக்கவே பரவி வாழும் இனக்குழு ஆவார்கள்... என்னுடைய சிறுவயதில் என் தந்தையரோடு ஒருசில முறை வேட்டையாட செல்வதுண்டு, பெரும்பாலும் கூட்டிச்செல்ல மாட்டார். இவைகளை அடுத்த தலைமுறைக்கு கடத்த கூடாது என்பது அவரது என்னம்... வேட்டையாட பின்னாலில் இளைஞர்களோடு போவதுண்டு, அப்போதெல்லாம் நம்முடைய வேட்டை நாய்கள் குறுக்கும் நெடுக்கும், முன்னும் பின்னுமாக ஓடும், சிலநேரம் காலுக்கடியில் ஓடி நம்மை சாய்த்துவிடவும் கூடும் அப்படி ஒரு நேரற்ற தன்மையுடையது நாய்கள்... இதை முத்தரையப் பாவலர் சேக்கிழார் பெருமான் எத்தனை உன்னிப்பாக கவனித்து அழகுற ஆய்ந்து பாடல் புனைந்திருக்கிறார் என்று என்னும் போது தமிழாய்ந்த சான்றோர் கண்ணில் நீர் ததும்புதல் இயல்பேயாகும்... மண்ணையும் மரபையும் காப்பதும், வேட்டையாடி வீரம் சொறிவதும் மலையரான வேட்டுவர் மரபு என்பதை தெள்ளத் தெளிவாக சொல்லியிருக்கிறார் சேக்கிழார் பெருமான், மேலும் வேட்டுவர்களை மறவர் என்றும் மள்ளர் என்றும் குறிப்பிடுகிறார். அதாவது மறவர் என்பதும் மள்ளர் என

சேடப்பட்டி செப்பேடு

Image
மதுரை மாவட்டம் சேடப்பட்டி  மடத்தில் கண்டறியப்பட்ட  அம்பலக்காரர் செப்பேடு...