Posts

Showing posts from December, 2023

பாண்டி முத்தரையன் சோழிக அரையன் | பாண்டி முத்தரையன் அரட்டவதி அரையன் | பாண்டிப்பெருந்தேவி

Image
சோழிக அரையன் என்கிற அகணிதன் குளம் வெட்டி தன் பெயரை வைத்துள்ளான் | இதே பகுதியில் பாண்டி முத்தரையர் அரட்டவதி அரையனின் தாயார் பாண்டிப்பெருந்தேவி, பாண்டி முத்தரையன் சோழிக அரையனின் நினைவாக சிவன் கோயில் ஒன்றும் ஏற்படுத்தியிருக்கிறார். பாண்டிப்பெருந்தேவி பாண்டியகுல பெண்ணாக இருக்கலாம்.

ஆரையன் ஆயிரவனான இளஞ்சிங்க முத்தரையன் | ஏக வீர முத்தரையன்

Image
ஆரையன் ஆயிரவனான இளஞ்சிங்க முத்தரையன் போரில் வீர மரணமடைந்தான், அவனுக்காக ஏக வீர முத்தரையன் நடுகல் எடுப்பித்தான்...

நல்லகுட்டி முத்திரியன் | பட்டாமணியம் தம்மணாமுத்திரியன்

Image
லால்குடி தாலுகா ராசாம்பாளையத்திலிருக்கும் நல்லகுட்டி முத்திரியன் மகன் பட்டாமணியம் தம்மணாமுத்திரியன் ராசாம்பாளையம் குடியிருப்பு பகுதியின் ஆலமரத்தடியில் தருமமாக ஒரு சாவடியும் தண்ணீர்ப்பந்தலும் ஏற்படுத்தி அதன் செலவுக்கு வருமானம் கிடைக்கும்படி கொடுக்கப்பட்ட நிலக்கொடையைப் பற்றியது இக்கல்வெட்டு. 

ஆரையன் ஆயிரவன் | இளஞ்சிங்க முத்தரையன்

Image
கொடுமங்கலத்திற்கு பகைவர் ஆநிரைகளை கவர வரும்போது ஆரையன் ஆயிரவன் எதிர்த்து போரிட்டான். அப்போது அவன் தந்தை சடையமரையன் தன்மகன் ஆரையன் ஆயிரவனைக் காப்பாற்ற முன்வந்து போரிட்டு மரணமடைந்தான். மரணமடைந்த தன் தந்தைக்கு மகன் ஆரையன் ஆயிரவன் நடுகல் எடுப்பித்தான் | இந்த ஆரையன் ஆயிரவன் இளஞ்சிங்க முத்தரையன் ஆவான் |

பேரயன் முத்தரையன் காரி | முத்தரையன் தும்பன்

Image
ஏதோ ஒரு போரில், சாத்தயன் என்பவருடன் பேரயன் முத்தரையன் காரி என்பவரும், திருவூறல் என்பவருடன் முத்தரையன் தும்பன் என்பவரும் இறந்துபட்டிருக்கிறார்கள்

தமிழப்பேர் அதியரைசன் (வலையர் அரசன்)

Image
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், வாழைக்குறிச்சி சிவன்கோயில் ஊரணிக்குள் கிடக்கும் பலகைக்கல் 8ம் நூற்றாண்டு கல்வெட்டு | தமிழப்பேர் அதியரையனுக்கு (வலையர் அரசன்) அவன் தாயார் நட்டுவித்த கல் என்ற செய்தியை தருகிறது. இவர் போரில் இறந்துபட்டிருக்கலாம்.

கார்மண்டல சதகம் பாண்டிய நாட்டு முத்தரையர்

Image
இதுவரை வெளிவராத புதிய சதக (கார்மண்டல சதகம்) பாடல். புதிய பல வரலாற்று செய்திகளோடு பாண்டிய நாட்டை ஆண்ட முத்தரையர் வரலாறு 🐬 கீழ்க்காணும் படச்செய்தி 👇 || இவர்கள் மதுரையிலிருந்தபோது பலநூல்கள் தொகுத்ததாகவும் இசைநூல்கள் தோற்றுவித்ததாகவும் கூறப்பட்டுள்ளார். நாலடியாரிலும் முத்தரையர் புகழப்பட்டுள்ளார். இக்குலத்தார் சோழ தேசத்தை 9ம் நூற்றாண்டு வரையில் ஆட்சிபுரிந்ததாகச் சோழ வமிச சரித்திரத்தால் உணரலாகும்; பல்லவ சாசனங்களிலும் இவர்கள் பெயர்கள் காணப் படும். குடுமியாமலை, பொன்னமராவதி முதலிய ஊர்களில் கிடைக்கும் சாசனங்களால் பாண்டி நாட்டின் சில பகுதிகளை இக்குலத்தினர் ஆண்டு வந்தாரெனப் புலப்படுகிறது. நார்த்தாமலைச் - சாசனத்தில் இவர்கள் மதுரையரசர் குலத்தினரென்று கூறப்பட்டுளது. எனவே இவர்கள் ஒருபெருங்குலத்தை சார்ந்தவராய் தொண்டைநாடு முதல் பாண்டிநாடு வரையில் பரவியிருந்தனர் எனப் பெறப்படும். பாண்டிநாட்டை வௌவி அரசாண்டவர் இம் முத்தரையரே எனலாம். இவர்கள் சைன மதத்தைச் சார்ந்தவராயிருப்பதும் முன் கூறிய கருத்தை வலி யுறுத்துகின்றது. களப்பிரர் என்பார் கூலிப்படை வீரரெனக் கருதலாகும். முத்தரையர் இக் கூலிப்படை வீரரைக

வங்காரமுத்தரையர் மகன் கொல்லத்தரையர்

Image
பேரவூர் ஊரவர் கோயிலுக்கு அமுது படைக்கவும் ஒரு நொந்தா விளக்கு ஏற்றவும் இறையிலியாக நிலம் கொடுக்கப்பட்டது. அதேபோல அரசன் தென்னவராயர் மற்றும் வங்காரமுத்தரையரின் மகன் கொல்லத்தரையர் ஆகிய இருவரும் சேர்ந்து நான்கு நந்தா விளக்குகள் எரிக்க இறையிலியாக நிலம் வழங்கினர். அந் நிலங்களை இக்கோயில் முப்பதுவட்டத்துக் காணி உடைய சிவப் பிராமணர்கள் பெற்றுக்கொண்டு விளக்கு எரிக்கவும் நாள்தோறும் திருவமுது படைக்கவும் ஒப்புக்கொண்டமை.

குடமுத்தரையன்

Image
தஞ்சாவூர் மாவட்டம், பொன்விளைந்தான்பட்டி கல்வெட்டு | ___ குடமுத்தரையன் மணவாட்டி ஊர் குளத்திற்க்கும் பள்ளிக்கும் கொடையளித்தமை பற்றி சொல்கிறது.

பரம்பரையான அரசகுலத்தவர்கள் முத்தரையர்கள்

Image
பரம்பரையான அரசகுலத்தவர்கள் முத்தரையர்கள், முத்தரையர்கள் போர்க்குடி கிடையாது என்பதை நம்மவர்கள் உணர வேண்டும், ஆட்சி மாட்றங்களால் வேளாண் தொழில் செய்யும் நிலைக்கு வந்திருக்கிறோமே தவிர நம்முடைய குலத்தொழில் நாடாள்வது தான், மீண்டும் நாடாள்வது ஒன்றே நமது இலக்காக கொண்டு பயணிப்போம்.

பரதவ, செம்படவ, வலைய பாண்டியர்கள்

Image
நெய்தல் நிலத்திற்கு சற்றும் தொடர்பில்லாத பாலை நிலத்தவரும் மருத நிலத்தவரும் நாங்கள் தான் பாண்டியர் என தம்பட்டம் அடித்துக்கொள்ளும் போது, பாண்டியனே மீனவன், மீனவனே தென்னவன், அவனே பரதவ, செம்படவ, வலைய பாண்டியர்கள் என உரக்கச் சொல்வோம். வரும் தலைமுறையேனும் உட்சாதி பிரிவுகளை உடைத்தெறிவோம், உரிமையுடன் வருங்காலம் நாடாள்வோம்.

விடேல் விடுகு முத்தரையர்

Image
விடேல்விடுகு குதிரைச்சேரியில் உள்ள கற்பூரம் முதல் செருப்பு வரை உள்ள பொருள்களை வியாபாரம் செய்பவர்களுக்கு அனுத்தரப் பல்லவரையன் கேட்டுக்கொண்டதற் கிணங்க அரசன் வரிவிலக்குச் செய்து கொடுத்த செய்தி மூன்றாம் நந்திவர்மனின் காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் 18வது ஆட்சியாண்டு கல்வெட்டு  சொல்கிறது. இதில் சொல்லப்படும் விடேல்விடுகு குதிரைச்சேரி, விடேல்விடுகு முத்தரையர் பெயரில் உருவான ஊராகும்.

நாங்கூர் (புதுக்குடி) கல்வெட்டு | நாராயணன் வைகுந்தனான அனந்த கோப முத்தரையன் | பாலைச் சேந்தன் தென்கரை நாட்டு முத்தரையன்

Image
நாங்கூர் (புதுக்குடி) கல்வெட்டு | தன் மைத்துனனான நாராயணன் வைகுந்தனான அனந்த கோப முத்தரையன் நலம்பெற வேண்டி பாலைச் சேந்தன் தென்கரை நாட்டு முத்தரையன் 240 வெள்ளாடுகளை கோவிலுக்கு முதலீடாக கொடுத்த செய்தியை தருகிறது. #மாநில_தகவல்_தொழில்நுட்ப_பிரிவு #தமிழ்நாடு_முத்தரையர்_முன்னேற்ற_சங்கம்

விசையாலய முத்தரையன்

Image
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம் பூதலூரில் விசயாலய சோழ முத்தரையர் எழுந்தருளவித்த குலோத்துங்க சோழ ஈஸ்வரமுடையார் கோயில்...

ஆதித்ததன் உலகனான விசையாலய முத்தரையன்

Image
திருநெடுங்களம் சோமாஸ்கந்தர் கோயில் திருமுன் உள்ள மண்டபத்தை அரையன் மகன் ஆதித்தன் உலகனான விசயாலய முத்தரையன் எடுப்பித்த செய்தி கூறும் கல்வெட்டு...

அமுத முத்தரையன்

Image
சென்னை ஆதம்பாக்கம் நந்தீஸ்வரர் கோவில் கல்வெட்டு | ஆலந்தூர் மகாதேவர்க்கு மூலனாகிய அமுதமுத்தரையன் விளக்கு எரிப்பதற்க்காக தொண்ணூறு ஆடுகளை கொடுத்து நெய் அளிக்க ஏற்பாடு செய்ததையும் குறிப்பிடுகிறது.