Posts

Showing posts from September, 2020

முத்தன் பள்ளம் (நாவல்)

Image
முத்தன் பள்ளம்: முத்தனின் முன்னோர்கள் திருக்காட்டுப்பள்ளி, செந்தலையை  தலைநகராக்கி ஆட்சி புரிந்தவர்கள் , ஆட்சி மாறுதலுக்குப் பிறகு நாயக்கர், மராட்டியர் காலத்தில் வயிற்றுப் பிழைப்புக்காக அவர்கள் காவல்பணி செய்வதாக ஒப்புக்கொண்டு  வெவ்வேறு கிராமங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றார்கள் . அப்படித்தான் திருக்காட்டுப்பள்ளியிலிருந்த முத்தனையும்  ' தோப்புவிடுதி' பெருந்தலை தனக்கும், ஊருக்கும் காவகாக்க வேண்டுமென்று சொல்லி அழைத்துவந்து  ஊருக்குக் கிழக்காக இடம் ஒதுக்கி தங்க வைத்தார்... தோப்புவிடுதிக்கு இடம்பெயர்ந்து வரும்போது , முத்தன்  தன் குலதெய்வமான காவக்  கருப்பையும் சேர்த்தே பிடிமண்ணில் சுமந்து வந்தான்.ஊரின் கிழக்காலே முத்தனும்,  ஊருக்கு மேற்காலே  அடர்த்த பத்தைக்குள் அவன் குலசாமியான கருப்பசாமியும்  குடியேறிக் கொண்டனர். முத்தனுடைய கருப்பசாமி தோப்புவிடுதிக்கு வந்து சேருவதற்கு முன்னாள் அந்த ஊருக்குள் பெண் தெய்வங்கள் மட்டும்தான் இருந்தது. கருப்பசாமி வந்த பின்னால் பெண் தெய்வங்களோடு காவக்கருப்பும் சேர்ந்து கொண்டதாகவும், கருப்பு சேர்ந்த பின்னாடி தாய்த் தெய்வங்களுக்கும் சக்தி கூடிப்போச்சு என்று ஊர

மடிக்கேரி (முத்துராஜகேரி)

Image
  பாபமெல்லாம் போக்கும் பரமேஸ்வரன்: ---------------------------------------------------------------------------- மடிக்கேரி (முத்துராஜகேரி) --------------------------------------------------- கர்நாடக மாநிலத்திலுள்ள  கொடகு மாவட்டத்தின் தலைநகர் மடிக்கேரி. இப்பகுதியை ஆண்ட முத்துராஜா மன்னர்களின்  நினைவாக இந்நகரம் முத்துராஜகேரி (முத்துராஜாவின் நகரம்) என்று அழைக்கப்பட்டு அந்தப் பெயரே நாளடைவில் மடிக்கேரி என்று ஆகியிருக்கிறது. மடிக்கேரியை ஆங்கிலேயர் மெர்க்காரா என்று அழைத்தனர். முத்துராஜா மன்னர்கள் வம்ச வழியைச் சேர்ந்த லிங்கராஜேந்திர மன்னர் ஒருமுறை அனாவசியமாகக் கோபம் கொண்டு பக்திமானும் ஒழுக்கத்தில் சிறந்தவருமான ஓர் அந்தணரைக் கொன்று விடுகிறார். அந்த அந்தணர் பிரம்மராட்சசனாக மாறி மன்னருக்குத் தொந்தரவு கொடுத்தாராம். நிம்மதியிழந்த மன்னர் ஜோதிடர்களின் அறிவுரைப்படி காசியிலிருந்து சிவலிங்கம் ஒன்றைக் கொண்டு வந்து ஆலயம் கட்டி அதில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அதன் பின்னரே மன்னரின் பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியானதாக தலபுராணம் தெரிவிக்கிறது. இவ்வாறு 1820ம் ஆண்டு மன்னர் பிரதிஷ்டை செய்த இந்த சிவா

நாயக்கர் / போயர் / NAYAK / NAYAKAR / NAIDU / BOYAR / BHOYA / BHOI / BHOIR

Image
நாயக்கர் / போயர் / NAYAK / NAYAKAR / NAIDU / BOYAR /BHOYA / BHOI /BHOIR நாயக்கர் போயர் ----------------------------------- நாயக்கர் / போயர் / NAYAK / NAYAKAR / NAIDU / BOYAR /BHOYA / BHOI /BHOIR போயர்(Boyar) அல்லது போய நாயுடு என்று அழைக்கப்படுவோர் இந்தியாவில் உள்ள ஒரு சாதிப் பிரிவினர். 1909 இல், சென்னை மாகாணத்திற்காக மக்கள் தொகைக் கணக்குகளை ஆய்வு செய்த எட்கர் துர்ச்டன், அரசுக்கு சமர்ப்பித்த அறிக்கையில், நாயுடு என்ற அடைமொழியை பயன்படுத்திய சாதியினர் பலிஜா, பேஸ்த, போயர், எக்காரி, கவரா, கொல்ல, கலிங்கி, காப்பு, முத்துராஜா மற்றும் வேலம ஆகியோர் எனக் கூறியுள்ளார். மேலும் துர்ஸ்டன் நாயுடு தமிழில் நாயக்கர் அல்லது நாயக்கன் என்றழைக்கப்படும் எனவும் கூறியுள்ளார். பொருளடக்கம் -------------------------------- 1 போயர் (Boyar) என்றழைக்கப்படும் (Bedar) வேட்டுவ சாதி மக்கள் 1.1 மகாராஷ்டிராவில் போயர்கள் 1.2 தெனிந்தியாவில் போயர்கள் 2 வரலாறு --------------------- 2.1 இந்தியாவின் மத்திய மாகாணங்களில் போய நாயக்கர்களின் வரலாறு 3 முக்கியமான அரசியல் மற்றும் வரலாற்று நிகழ்வுகள் 4 குறிப்பிடத்தக்க போய நாயக்க

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்

Image
  வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம் ------------------------------------------------------------ வேட்டுவரின் பூர்வீகம் குறித்து அறிஞர்களிடையே பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. வேட்டுவர், பிரம்மனால் படைக்கப்பட்ட ஆதி வம்சத்தினர் என்று வேளாளர் புராணம் குறிப்பிடுகிறது. சோழன் பூர்வ பட்டயம், வேட்டுவ கவுண்டர்களைக் கொங்கு நாட்டின் ஆதிகுடிகள் என்று சுட்டுகின்றது. சில பட்டயங்களில் வேட்டுவர், முத்தரையரின் வழித்தோன்றல்கள் என்று செப்புகின்றன. வேட்டுவ கவுண்டரும் முத்தரையரும் கண்ணப்ப நாயனாரைத் தமது குல தெய்வமாகக் கொண்டு வழி படுகின்றனர். எட்கார் ஃதர்ஸ்ட்டன் (Edgar Thurston) அவர்கள் முத்தரையர், வேட்டுவர், வலையர் ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ளார். இருப்பினும் வேட்டுவரின் பூர்வீகம் குறித்து நான்கு முக்கிய கொள்கைகள் (கருத்துக்கள்) உள்ளன. அவை     1.வேட்டுவர் நாகர் இனத்தவர்.     2.குரு குலத்தவர்.     3.கண்ணப்ப நாயனாரின் கால்வழியினர்.     4.கொங்கு நாட்டின் பூர்வீகக் குடிகள். இக்கொள்கைகளின் உண்மைத் தன்மையை இங்கே ஆய்வோம். நாகர் --------- வேட்டுவர் நாகர் இனத்தவரே என்று கனகசபைப்பிள்ளை[

HISTORY OF VETTUVA GOUNDER

Image
  HISTORY OF VETTUVA GOUNDER --------------------------------------------------------- கொங்கு நாட்டுச் சமுதாய வரலாற்றில் வேட்டுவர் முக்கியமானதோர் இடத்தை வகிக்கின்றனர். இவர்கள் வேட்டையாடுதலை தமது முதன்மைத் தொழிலாகக் கொண்டிருந்தனர். கொங்கு நாட்டின் பூர்வ குடிகளான வேட்டுவர். வேடன், வெற்பன், சிலம்பன், எயினன், ஊரான், வேட்டுவதியரையன், ஊராளி, நாடாழ்வான், முதலான பெயர்களாலும் அழைக்கப்பட்டனர். வரலாற்று காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே இவர்கள் கொங்கு நாட்டில் வாழ்ந்து வந்தனர் என்பதனைச் சங்க இலக்கியங்களால் அறிகிறோம். கொங்கு வேட்டுவக்கவுண்டர் வீர வரலாறு ஆதாரங்கள்கல்வெட்டுக்கள், செப்பேடுகள், புராணங்கள், இலக்கியங்கள் ஆகியவற்றின் துணை கொண்டு வேட்டுவரின் வரலாறு பற்றி அறிந்து கொள்கிறோம்.  திருவெஞ்சமாக் கூடல். கரூவூர், வெங்கம்பூர், திருச்செங்கோடு, ஈரோடு, ஏழூர், மூக்குத்திபாளையம், பருத்திபள்ளி, வாழவந்தி அருகில் உள்ள குட்லாம்பாறை, அவினாசி, திருமுருகன் பூண்டி, இரும்பறை, பழமங்கலம், அந்தியூர், சங்ககிரி முதலான ஊர்களில் உள்ள கல்வெட்டுக்களும் தென்னிலை, ஊசிப்பாளையம், திருச்செங்கோட்டுச் செப்பேடுகளும்,சோழன் பூர

சான்டில்யனின் மோகனசிலை நாவலில் முத்தரையர் பகுதி

Image
22. அவர் சொன்ன கதை ------------------------------------------ கண்கள் சில விநாடிகள் பஞ்சடைந்தபோதிலும், கடைசி கடமையை நிறைவேற்றவேண்டிய காரணத்தால் உணர்ச்சிகளை மீட்டுக்கொண்டு மெள்ள மெள்ள தன் மனத்தில் புதைந்து கிடந்த ரகசியத்தை அவிழ்க்கலானார் மாரவேள். அவர் கண்களை அடுத்து சொற்கள் நிதானமாகவும் ஓரளவு திட மாகவும்கூட வெளிவந்தன. ''குழந்தைகளே! கேளுங்கள் பாக்கியமிழந்த ஒரு பரதேசியின் கதையை வளம்பெற்ற தமிழகத்தின் வீழ்ச்சியைப் போன்றது என் கதை. தமிழகம் முழுவதும் வீழ்ந்தது களப்பிரர் கொடுமையால். அவர்கள் அடுத்த தலைமுறையான முத்தரையரால் அழிந்தது சோழநாட்டு வாழ்வு. இத்தனைக்கும் முத்தரையர் வலிகுன்றி சிற்றரசர்களாகிவிட்ட காலம். அந்தக் காலத்தில் சிறப்பெய்தியிருந்தது சந்திரலேகா அல்லது செந்தலை எனும் ஊர். தஞ்சையைப்போல் அது பேரூராகவில்லை. இருப்பினும், தஞ்சையை இன்னும் ஆண்டு வரும் முத்தரையர் செந்தலையையே தங்கள் தலையூராகக் கொண்டனர். அந்த சந்திரலேகாவில் இப்பொழுதும் இருக்கின்றான் * இரண்டாவது பெரும்பிடுகு முத்தரையன். அவனுக்கு ஒரு மகனும் உண்டு. பெயர் மாறன் பரமேசுவரன். தனது தந்தையின் பெயரை இவனுக்குச் சூட்டினான் பெரும

நடுகல்லில் முத்தரையர்

Image
நடுகல்லில் முத்தரையர் : _______________________________ ஒரு வீரன் தன்னெருமைகளைக் காத்து நின்றான். அப்புறத்தே கள்ளன் நுழைந்தான். வீரன் இறந்தான். அவனுடைய நாய் கள்ளனைக் கடித்து தன் தலைவன் அருகே நின்றது. அவ்வீரனுக்கு நட்ட நடுகல்லில் அந்நாயின் உருவையும், அதன் பெயரையும் 1300 ஆண்டுக்கு முன்னர் குறித்துள்ளனர். “ கோவிசைய மயிந்த பருமற்கு ஐப்பத்து நான்காவது வாணகோ அரைசரு மருமக்கள் பொற் றொக்கை ஆர் இளமகன் கருந் தேவக் கத்தி தன் னெருமைப்பு றத்தே வாடிப்பட்டான் கல். கோவி வன்னென்னுந் நாய் இரு கள்ளனைக் கடித்து காத்திரு ந்த வாறு"  என்று அக்கல்வெட்டில் உள்ளது. நூல் கல்லும். சொல்லும் பக். 186. முனைவர்.ஆர். நாகசாமி.

பழனி மடப் பட்டையம்

Image
  பழனி மடப் பட்டையம்: __________________________ கி.பி 1674. ஆனந்த வருடம் தை மாதம் 3ஆம் தேதி, ஆதி காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து செப்புத் தகட்டில் எழுதி வைத்தார்கள். கோவில், குடிகளின் வரலாற்றை இவை தெரிவித்தன. அக்காலத்தில் நடைபெற்ற செயல்களை அறிந்து கொள்ள ஓலைச் சுவடிகள், கல்வெட்டுக்கள் நமக்குப் பயண்படுகின்றன. தமிழகத்தில் முத்தரையர்களிடம் இத்தகைய பட்டையங்கள் ஏராளமாக உள்ளன. ஆரம்பகாலத்தில் மூத்த அரையர்களாகிய முத்தரையர்கள், ஊர், நாடு, நகரங்களுக்கும் தலைவர்களாகவும் கோவில் குளங்களைக் காப்பவர்களாவும், நாட்டை அரசாள்பவர்களாகவும் இருந்தனர். அக்காலத்தில் கோயிலில் இம் முத்தரையர் செய்துள்ள நல்ல காரியங்களைச் செப்பேட்டில் எழுதி வைத்தனர். இவ்வாறு பழனி கோயிலில் பொது மடம் ஒன்றைக் கட்டிப் பராமரித்து, அதற்கான ஆக்கபூர்வமான செய்திகளையும் பட்டையமாக வழங்கியுள்ளனர். இந்தச் செப்புப் பட்டையம் 27 செ.மீ. க்கு 36 செ.மீ அளவில் தயாரித்துள்ளனர். இந்தப் பட்டையத்தில் முன்பக்கம் 78 வரிகளும் பின்பக்கம் 79 வரிகளையும் கொண்டுள்ளது. இப்பட்டையத்தில் பட்டைய வாசகங்களாக 40 வரிகள் எழுதப்பட்டுள்ளன. சுருக்கமான விளக்