Posts

வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி!

Image
வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி!  குடியாத்தம் - சித்தூர் சாலையில் குடியாத்தத்தில் இருந்து 10கிமீ தொலைவில் அமைந்துள்ள ஊர் கல்லப்பாடி அவ்வூரின் அருகே வெங்கட்டூரில் ஒரு தனியார் வயலில் மூன்று நடுகற்கள் தற்போது பாதி புதைந்துள்ள நிலையில் காணப்படுகிறது. அவை மூன்றும் ஒரே காலக்கட்டத்தை சேர்ந்ததாக தெரிகிறது. அவை வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரியான ஆதித்த கரிகாலனின் மூன்றாவது (கிபி 958) ஆட்சியாண்டை சேர்ந்தது. மூன்று கல்வெட்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. இவ்வூரில் இருந்து தொறு (பசுக்கள்) கொள்வதற்காக வணிகர்கள் சிலர் அவர்தம் அடியாட்களுடன் திருவூரல் சென்று தொறு மீட்டு திரும்பும்போது கோட்டுபூசலில் சோளனூர் எனும் ஊரழிஞ்சி இறந்திருக்கிறார்கள்.  விக்ரமாதித்தனாகிய தன்ம செட்டி மகன் சாத்தயன் என்பவருக்கு அடியானாக முத்தரை(ய)ன் காரி என்பவரும் உடன்சென்று கோட்டுபூசலில் உயிர்விட்டிருக்கிறார். அவருக்கும் நடுகல் எடுக்கப்பட்டுள்ளது.  கல்வெட்டில் சேங்குன்றத்து 'தூமடைப்பூர்' என குறிப்பிடப்பட்டுள்ளது. சேங்குன்றம் எனும் ஊரானது குடியாத்தத்தில் இருந்து பலமநேர் செல்லும் சாலைய

வலைஞர்

Image
வலைஞர்: ____________ தமிழர்கள் கடலில் சென்று மீன் பிடிக்கும் தொழிலை மிக நெடுங்காலந்தொட்டு செய்து வருகின்றனர். சங்க இலக்கியங்களில் மீன் பிடிக்கும் தொழில் பற்றிய குறிப்புகள் பரவலாகக் காணப் படுகின்றன. கடலில் சென்று மீன்பிடி தொழில் செய்பவர்களை மீனவர் என்று இன்றைக்கு நாம் அழைக்கிறோம். இவர்களைச் சங்க காலத்தில் ‘வலைஞர்’ என்று சுட்டியுள்ளனர். ‘வலைஞர்’ என்பது வலையால் மீன்பிடிப்பவர் எனும் பொருளில் வரும் ஒரு காரணப் பெயராகும். fishermen 600சங்க இலக்கியங்களில் மீன் வகைகள் பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன. மடு, குளம், கழனி போன்ற நீர்நிலைகளிலுமிருந்து மீன் பிடித்த குறிப்புகளும் சங்க இலக்கியங்களில் உள்ளன. ஆனால் ‘மீனவர்’ என்ற சொல் எங்கும் இடம் பெற்றிருக்கவில்லை. அகநானூற்றூப் பாடலொன்று கடலுக்குள் சென்று மீன்பிடிப்போனைத் ‘திமிலோன்’ என்றும் சுட்டுகின்றது. திமில் என்றால் ‘மீன்படகு’ (Tamil Lexicon,, ப.1880) என்பதாகும். ‘திண்டிமில் வன்பரதவர் (புறம். 24) என்று புறநானூற்றுப் பாடலொன்றும் சுட்டுகிறது. ஓங்குதிரைப் பரப்பின் வாங்குவிசைக் கொளீஇ திமிலோன் தந்த கடுங்கண் வயமீன் தழைஅணி அல்குல் செல்

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

Image
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகை 7,21,38,958 ஆகும். தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்தவர்களாவர். தமிழகத்தில் உள்ள சிறுபான்மையின முஸ்லீம்களில் சுமார் 95 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும், சிறுபான்மையின கிறித்தவர்களில் சுமார் 80 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர். பிற்படுத்தப்பட்டேர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்புகளைச் சார்ந்தவர்கள் சமூக, பொருளாதார மற்றும் கல்வி ஆகிய அனைத்துத் துறைகளிலும் சமுதாயத்தின் இதர பிரிவினர்களுக்கு இணையாக முன்னேற்றம் அடையும் பொருட்டு இத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீடானது கல்வி மற்றும் மாநில அரசுத்துறையில் வேலைவாய்ப்பு பெற்று பொர

DNT என்றால் என்ன..??

Image
DNT என்றால் என்ன..?? DNT தேவை ஏன்..?? சலுகைக்காகவா DNT..?? உரிமைக்காகவா DNT..?? 1.சீர்மரபினர் நலச்சங்கம் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்திவருவது எதற்காக? சமூகநீதி பேசுகின்ற தமிழகத்தில் சீர்மரபினர் மக்களுக்கு மட்டும் தொடர்ந்து அநீதியே இழைக்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு அன்னிய அரசு வழங்கிய உரிமைகளும் சலுகைகளும் கூட பறிக்கப்பட்டு விட்டன. எனவே அவர்களின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தியும், சீர்மரபினர் மக்களுக்கு 10% தனி இடஒதுக்கீடு கோரிக்கையை தீவிரமாக வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு தீவிரமான போரட்டங்களை நடத்தி வருகிறது  2, எந்தெந்த சாதி சீர்மரபினர் வகுப்பில் வருகின்றனர்? தமிழகத்தில் சீர்மரபினர் பட்டியலில் 68 சாதியினர் உள்ளனர். அதில் பிரமலைக்கள்ளர், கூத்தப்பர் கள்ளர், பெரியசூரி கள்ளர், கந்தர்வக்கோட்டை கள்ளர் என்ற நான்கு(4) கள்ளர்களும், மறவர், ஆப்பநாடு கொண்டயன் கோட்டை மறவர், செம்ப நாட்டு மறவர், மறவர் என்ற மூன்று(3) மறவர்களும், வலையர், செட்டிநாடு வலையர், வேட்டுவ கவுண்டர், ஊராளி கவுண்டர், சேர்வை, அம்பலகாரர், அம்பலக்காரர், வேட்டைக்காரன் என்ற எட்டு(8) முத்தரையர்களும், போயர

சீர்மரபினர் பட்டியலில் உள்ள 68 சாதிகளில் வலையர், அம்பலக்காரர்

Image
சீர்மரபினர் பட்டியலில் உள்ள 68 சாதிகளில் முத்தரையர் சமூகத்தின் இரண்டு பிரதான பிரிவுகளான "வலையர்" மற்றும் "அம்பலக்காரர்" சாதிகளும் உள்ளடங்கியுள்ளது. இந்த பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு இதுவரை இந்திய மற்றும் தமிழக அரசுகள் செய்திருப்பது என்ன ? இன்னும் செய்ய வேண்டியது என்ன ?  1. வலையர்களுக்கு தனி புனரமைப்பு வாரியம். 2. அம்பலக்காரர்களுக்கு தனி நல வாரியம். 3. அம்பலக்காரர் / வலையர்களுக்கு தனிதனியே 10% தனி இடஒதுக்கீடு. 4. அம்பலக்காரர் / வலையர் மக்கள்தொகை தனி கணக்கெடுப்பு. 5. அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் 10 லட்ச ரூபாய் வரை பொருப்பற்ற‌ கடனுதவி 6. அம்பலக்காரர் / வலையர்களுக்கு தனி நல திட்டங்கள் 7. கல்வி நிலையங்களில் தனி இடஒதுக்கீடு. 8. மருத்துவ படிப்பில் தனி இடஒதுக்கீடு. 9. வீடு, நிலமற்ற வலையர்/ அம்பலக்காரர் பிரிவினருக்கு உடனடி வீட்டுவசதி திட்டங்கள், மற்றும் நிலம் வழங்கும் திட்டங்கள் 10. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு கீழாக சீர்மரபினர் என்பதனை மாற்றி சீர் மரபினருக்கென்று தனித் அரசு துறை. 11. வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை / அரசு வேலைகளில் தனி இட ஒதுக்கீடு / ம

வலையர் வழங்கும் விருந்து

Image
பெரும்பாணாற்றுப்படை ------------------------------------------------- வலைஞர் வழங்கும் விருந்து; பாலை, முல்லை, குறிஞ்சி, மருதம் ஆகிய நிலங்களை, முறையே கடந்து செல்லும் பெரும்பாணன், இறுதியாகக் கடக்க வேண்டிய நெய்தல் நில இயல்பையும், அந்நிலம் வாழ் வலைஞர் வாழ்க்கை முறைகளையும் விளக்கத் தொடங்கினார். வலைஞர் குடில்கள், மெல்லிய மூங்கில்களை வரிசையாகப் பரப்பி, வஞ்சி அல்லது காஞ்சி மரத்தின் வெள்ளிய கொம்புகளை இடை இடையே இட்டுத், தாழை நார்கொண்டு கட்டி, தருப்பைப் புல் வேய்ந்து, பெய்யும் மழையால் நனையாவாறு சுவர்களைக் காத்தற் பொருட்டு, குறிய இறப்பை, நாற்புறங்களிலும் அமையக் கட்டப் பட்டிருக்கும்.. ஓடும் நீரில் எதிர்த்து ஏறும் மீன்களை வாரிக் கொட்டும் பறிகள், மனை முற்றத்தில் காணப்படும். உணவிற்குத் துணைக்கறியாகப் பயன்ப்டவல்ல அவரை, பீர்க்கு, புடலை, பாகல் போலும் காய்களைத் தரும் கொடிகளை வளர்த்து, அவை பெருகப் படர்ந்து பயன் தரற் பொருட்டு, வளைந்து கவிர்த்த புன்னைக் கிளைகளை நட்டுப், போடப் பட்டிருக்கும் பந்தலும் ஆங்கு காணப்படும்... மேலே பந்தல் நிழல் செய்ய, கீழே, மெத்தென்ற மணல் பரந்த அந்த இடம், இருந்து இளைப்பாற

வலையர் - பெரும்பாணாற்றுப்படை

Image
பத்துப் பாட்டு நூல்களில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படையில் பாட்டுடைத் தலைவனாக தொண்டைமான் இளந்திரையனைக் கொண்டாடப் படுகிறது. இந்நூலில் உப்பு வாணிகம் செய்பவர்களின் பயண வழியில் அவர்கள் காணும் ஐந்து நில மக்களின் வாழக்கை முறையை கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியுள்ளார். அதில் வலைஞர்  குல மக்களின் வாழ்க்கை முறையை கூறும்போது, அவர்கள் கள்ளு தயாரித்து உண்ணும்  முறையை கூறுகிறார். எளிய செயல்முறைதான் வீட்டில் செய்து பார்க்கலாம் தயாரிப்பு முறையை கவனியுங்கள்.. உரலில் இட்டுக் குற்றாத கொழியல் அரிசியை(சுத்தம் செய்யாத) களியாகச் சமைத்து அதை கூழாக்க வேண்டும். பின்னர் அந்தக் கூழை அகலமான தட்டில் இட்டு ஆறச் செய்து, நல்ல முளை அரிசியை(பாலை நெல்) இடித்து கூழுடன் சேர்த்து கலக்கி இரண்டு இரவும் இரண்டு பகலும் மூடி வைத்து விட வேண்டும். பின்னர் அந்தக் கூழை வெந்நீரில்  வேகவைத்து வடிகட்டியால் வடிகட்ட வேண்டும். சுவையான கள் தயார். இதற்கு "நறும்பிழி" என்று பெயர்.  இந்தக் கள்ளுக்கு தொட்டுக்க என்ன சுவையாக இருக்கும் ?? வடிகட்டிய கள்ளுடன், பச்சை மீனைப் பிடித்து அதைச் சுட்டு சாப்பிட்டால்  எப்பேர்பட்ட உடல்வலிய