வலையர் - பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டு நூல்களில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படையில் பாட்டுடைத் தலைவனாக தொண்டைமான் இளந்திரையனைக் கொண்டாடப் படுகிறது. இந்நூலில் உப்பு வாணிகம் செய்பவர்களின் பயண வழியில் அவர்கள் காணும் ஐந்து நில மக்களின் வாழக்கை முறையை கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியுள்ளார். அதில் வலைஞர்  குல மக்களின் வாழ்க்கை முறையை கூறும்போது, அவர்கள் கள்ளு தயாரித்து உண்ணும்  முறையை கூறுகிறார். எளிய செயல்முறைதான் வீட்டில் செய்து பார்க்கலாம்


தயாரிப்பு முறையை கவனியுங்கள்..

உரலில் இட்டுக் குற்றாத கொழியல் அரிசியை(சுத்தம் செய்யாத) களியாகச் சமைத்து அதை கூழாக்க வேண்டும். பின்னர் அந்தக் கூழை அகலமான தட்டில் இட்டு ஆறச் செய்து, நல்ல முளை அரிசியை(பாலை நெல்) இடித்து கூழுடன் சேர்த்து கலக்கி இரண்டு இரவும் இரண்டு பகலும் மூடி வைத்து விட வேண்டும். பின்னர் அந்தக் கூழை வெந்நீரில்  வேகவைத்து வடிகட்டியால் வடிகட்ட வேண்டும். சுவையான கள் தயார். இதற்கு "நறும்பிழி" என்று பெயர். 

இந்தக் கள்ளுக்கு தொட்டுக்க என்ன சுவையாக இருக்கும் ?? வடிகட்டிய கள்ளுடன், பச்சை மீனைப் பிடித்து அதைச் சுட்டு சாப்பிட்டால்  எப்பேர்பட்ட உடல்வலியும் காணமல் போய்விடும் எந்த பக்க விளைவுகளுமின்றி..

வாசிக்கும்போதே மண்டை கிருகிருக்குதே !! போதை எரிப்போசோ ??!!


பாடல் இதுதான்

அவையா வரிசி யங்களித் துழலை
மலர்வாய்ப் பிழாவிற் புலரவாற்றிப்
பாம்புபுறை புற்றிற் குரும்பி யேய்க்கும்
பூம்புற நல்லடை யளைஇத் தேம்பட
எல்லையு மிரவு மிருமுறை கழிப்பி
வல்வாய்ச் சாடியின் வாழைச்சர விளைந்த
வெந்நீர் அரியல் விரலை நறும்பிழி
தண்மீன் சூட்டோடு தளர்தலும் பெறுகுவீர் !!  

 

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER