வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி!

வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி! 

குடியாத்தம் - சித்தூர் சாலையில் குடியாத்தத்தில் இருந்து 10கிமீ தொலைவில் அமைந்துள்ள ஊர் கல்லப்பாடி அவ்வூரின் அருகே வெங்கட்டூரில் ஒரு தனியார் வயலில் மூன்று நடுகற்கள் தற்போது பாதி புதைந்துள்ள நிலையில் காணப்படுகிறது. அவை மூன்றும் ஒரே காலக்கட்டத்தை சேர்ந்ததாக தெரிகிறது. அவை வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரியான ஆதித்த கரிகாலனின் மூன்றாவது (கிபி 958) ஆட்சியாண்டை சேர்ந்தது. மூன்று கல்வெட்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. இவ்வூரில் இருந்து தொறு (பசுக்கள்) கொள்வதற்காக வணிகர்கள் சிலர் அவர்தம் அடியாட்களுடன் திருவூரல் சென்று தொறு மீட்டு திரும்பும்போது கோட்டுபூசலில் சோளனூர் எனும் ஊரழிஞ்சி இறந்திருக்கிறார்கள்.  விக்ரமாதித்தனாகிய தன்ம செட்டி மகன் சாத்தயன் என்பவருக்கு அடியானாக முத்தரை(ய)ன் காரி என்பவரும் உடன்சென்று கோட்டுபூசலில் உயிர்விட்டிருக்கிறார். அவருக்கும் நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. 

கல்வெட்டில் சேங்குன்றத்து 'தூமடைப்பூர்' என குறிப்பிடப்பட்டுள்ளது. சேங்குன்றம் எனும் ஊரானது குடியாத்தத்தில் இருந்து பலமநேர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. சேங்குன்றத்தில் இருந்து நேர்கிழக்கில் 5 கிமீ சுற்றளவில் தான் கல்லப்பாடி (வெங்கட்டூர்) அமைந்துள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. சேங்குன்றத்தில் இராஜராஜன் மற்றும் இராஜேந்திர சோழர் காலத்து கல்வெட்டுகளும் அவ்வூர் 'ஜெயங்கொண்ட சோழீஸ்வரர்' ஆலயத்தில் அமைந்துள்ளது.  குடியாத்தம் அருகே இருக்கும் வெங்கட்டூர் எனும் 'தூமடைப்பூரி'ல் இருந்து தக்கோலம் எனும் திருவூரல் சுமார் 120கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சுமார் ஆயிரமாண்டுகளுக்கு முன்பு இத்தனை கிமீ தூரம் தொறு மீட்க சென்றிருப்பது தெரிகிறது. இவ்விரு இடங்களுக்கும் பழைய பாலாறு ஒரு தொடர்பை ஏற்படுத்துகிறது. அதுவும் பழைய பாலாறு சரியாக ஆயிரமாண்டுகளுக்கு முன்பு தான் திசைமாறி காஞ்சிபுரத்தினூடாக பிரிந்திருப்பதாக தெரிகிறது. இக்கல்வெட்டின் காலத்தை கணக்கில் கொண்டு ஆராய முற்பட்டால் பழைய பாலாற்றின் கரை வழியே வணிக போக்குவரத்து நிகழ்ந்திருக்கலாம் என அறிய முடிகிறது. 

பி.கு: கல்வெட்டு பாடங்கள் படத்தின் கீழே தரப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER