சீர்மரபினர் பட்டியலில் உள்ள 68 சாதிகளில் வலையர், அம்பலக்காரர்
சீர்மரபினர் பட்டியலில் உள்ள 68 சாதிகளில் முத்தரையர் சமூகத்தின் இரண்டு பிரதான பிரிவுகளான "வலையர்" மற்றும் "அம்பலக்காரர்" சாதிகளும் உள்ளடங்கியுள்ளது. இந்த பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு இதுவரை இந்திய மற்றும் தமிழக அரசுகள் செய்திருப்பது என்ன ? இன்னும் செய்ய வேண்டியது என்ன ?
1. வலையர்களுக்கு தனி புனரமைப்பு வாரியம்.
2. அம்பலக்காரர்களுக்கு தனி நல வாரியம்.
3. அம்பலக்காரர் / வலையர்களுக்கு தனிதனியே 10% தனி இடஒதுக்கீடு.
4. அம்பலக்காரர் / வலையர் மக்கள்தொகை தனி கணக்கெடுப்பு.
5. அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் 10 லட்ச ரூபாய் வரை பொருப்பற்ற கடனுதவி
6. அம்பலக்காரர் / வலையர்களுக்கு தனி நல திட்டங்கள்
7. கல்வி நிலையங்களில் தனி இடஒதுக்கீடு.
8. மருத்துவ படிப்பில் தனி இடஒதுக்கீடு.
9. வீடு, நிலமற்ற வலையர்/ அம்பலக்காரர் பிரிவினருக்கு உடனடி வீட்டுவசதி திட்டங்கள், மற்றும் நிலம் வழங்கும் திட்டங்கள்
10. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு கீழாக சீர்மரபினர் என்பதனை மாற்றி சீர் மரபினருக்கென்று தனித் அரசு துறை.
11. வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை / அரசு வேலைகளில் தனி இட ஒதுக்கீடு / முதல் மற்றும் இரண்டாம் நிலை அரசு பணிகளில் உரிய வாய்ppu
12. காவல்துறை உதவி ஆய்வாளருக்கு நிகரான பதவிகளில் கட்டாய பதவிகள் (உரிய சதவீதத்தில்)
13. உள்ளாட்சி பதவிகளில் அம்பலக்காரர் / வலையர் எண்ணிக்கை பெரும்பாண்மைக்கேற்பவோ அல்லது உள்ளாட்சி பெரும்பாண்மைகேற்பவோ ஒதுக்கீடுகள்.
14. சட்டமன்ற / நாடாளுமன்ற தொகுதிகளில் எண்ணிக்கைகேற்ப தனி தொகுதிகள்.
15. நாடாளுமன்ற மேலவைக்கு வலையர் மற்றும் அம்பலக்காரர் பிரிவுகளுக்கு நிரந்த உறுப்பினர் வாய்ப்பு தமிழகத்திலிருந்து.
16. வலையர் / அம்பலக்காரர் பிரிவுகளை இணைத்து தனி கல்வி நிறுவனங்கள் (பள்ளி/ கல்லூரிகள்)
17. பாதிக்கப்படும் அப்பாவி மக்களுக்கான சட்டபாதுகாப்பு / தனி சட்டம்.
இதுவெல்லாம் இந்த சாதிகளின் குறைந்தபட்ச தேவைகள், இதையெல்லாம் அரசாங்கங்கள் நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டியவை, கேட்காத எதுவும் கிடைக்காது (சில நேரம் கேட்டாலும் கிடைக்காது :) ) இப்போதாவது கேட்டு வைப்போம், கிடைத்தால் சந்தோசப்படுவோம்.
மிகமுக்கிய பின்குறிப்பு : வலையர் / அம்பலக்காரர் பிரிவுகளை சேர்ந்தவர்கள் தங்கள் தங்களுடைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு நேரில் சென்று "மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தில்" சீர்மரபினருக்கான வாரியத்தில் தங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுங்கள், நிறைய பலன்கள் இப்போதே இருக்கிறது, மேலே கேட்டிருக்கும் பலன்களும் ஒருவேளை கிடைத்தால் பதிவு கட்டாயம் தேவைப்படும், இதற்க்கு எந்த கால அளவும் கிடையாது எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாம்.
Comments
Post a Comment