Posts

மூன்று தரை சோழ முத்தரையர்கள் (21முதல் 25வரை)

Image
நாடாண்ட முத்தரைய மன்னர்கள்: _____________________________________ சோழ முத்தரையர்(கள்) __________________________ 21.அரங்குளவன் கொற்றவன் ---------------------------------------------------- இவனைப்பற்றிய கல்வெட்டு, புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் கோயிலில் வீரபாண்டிய தேவரின் 9வது ஆட்சியாண்டில் (கி.பி.1306)ல் வெட்டப்பட்டுள்ளது. அரங்குளவன் மிகப்பெரிய நிழக்கிழாராகவும், அரசியல் முக்கியத்துவம் பெற்றவனாகவும் விளங்கியுள்ளான். இவனைப்பற்றி பல கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இவனது தம்பி திறையன் வில்ல முத்தரையன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரங்குளவன் கொற்றன் திருவரங்குளம் கோயிலுக்கு தனது தம்பிமார் திரையன் வில்ல முத்தரையனும், அவனது தம்பிமாரும் சேர்ந்து பெரும் நிலப்பரப்பை, மா, புளி இதர மரங்களுடன் 10,000/- பொற்காசுகளுக்கு விற்றுள்ளான். இந்த நிலத்திற்கு எல்லை கூறும்போது பாண்டி  முத்தரையனின் எல்லைக்கு வடக்கு எனக் கூறுகிறது. எனவே இந்நிலம் திருவரங்குளம், திருக்கட்டளை, மாஞ்சன் விடுதிக்கு தெற்கில், வெள்ளாற்றுக்கு உட்பட்ட பெரும் பரப்பாக இருந்ததை அறியலாம். 13ம் நூற்றாண்டில் முத்தரைய

மூன்று தரை சோழ முத்தரையர்கள் (16முதல் 20வரை)

Image
நாடாண்ட முத்தரைய மன்னர்கள்: _____________________________________ சோழ முத்தரையர்(கள்) __________________________ 16.முத்தரையன் ஆரூரு இவனது கல்வெட்டு தென் ஆற்காடு மாவட்டம் திருக்கோவிலூரில், முதலாம் ராஜராஜனின் 19வது ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டில் உள்ளது. திருநாவலூர் திருத்தோனீஸ்வரத்துக் கோயிலில் இக்கல்வெட்டு உள்ளது. இங்குள்ள மலையனுக்காக திருநந்தாவிளக்கு வைத்து எரிக்க, சாவாலும், மூப்பாலும் குறையாது 90 ஆடுகளை இந்த முத்தரையன் ஆரூர் வழங்கியுள்ளான். இக்கல்வெட்டு எண் 986 இதனை தெரிவிக்கிறது. 17.அப்போதி முத்தரையன் இவனது கல்வெட்டு தென் ஆற்காடு மாவட்டம் திருக்கோவிலூரில் 3ம் கிருஷ்ணனின் (கண்ணரதேவரின் 19வது ஆண்டு) திருத்தோண்டீஸ்வரம் கோவிலில் உள்ளது. அப்போதி முத்தரையன் இக்கோவிலில், வயது முதிர்வாலும், இறந்துபடுதல் மூலமாகவும், எப்போதும் குறைவுபடாமல் 90 ஆடுகளை வைத்து நொந்தா விளக்கை எரிக்கும்படி கொடுத்துள்ளான். இச்செய்தி கூறும் கல்வெட்டு எண்.996 இதனை தெரிவிக்கிறது. 18.விசையாலய முத்தரையர் இவனது கல்வெட்டு திருச்சி மாவட்டம், திருநெடுங்கலம், லால்குடி வட்டத்தில், 3ம் குலோத்துங்க ச

மூன்று தரை சோழ முத்தரையர்கள் (11முதல் 15வரை)

Image
நாடாண்ட முத்தரைய மன்னர்கள்: __________________________________ சோழ முத்தரையர்(கள்) _________________________ 11.அபிமான மேரு சோழ முத்தரையன் தொகுதி 17 க.எ.186ல் முதலாம் இராஜேந்திர சோழனின் 8மற்றும் 10வது ஆட்சியாண்டு (கி.பி.1020-1022) குமரிக்குட்டி என்ற சிறப்பு பெயரும் இவனுக்கு உண்டு. மேரு என்றால் இமயம் போல மிக உயந்தது என்ற பொருளை குறிக்கிறது. குமரி என்றாலும், குட்டி என்றாலும் இளமையை குறிப்பதாகும். மிகுந்த நம்பிக்கைக்கு பாத்திரமானதால் குமரிக்குட்டி என சிறப்பிக்கப்பட்டுள்ளான். இவன் திருவக்கரை கோயில் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் திரிபுவன மாதேவிச் சதுர்வேதி மங்கலத்தில் அமைந்துள்ளகோவிலாகும். வீர தீர செயல்களால் புகழப்பட்ட இவன், தெய்வபக்தியும் மிகுந்தவனாக விளங்கியுள்ளான். முத்தரையர் ஆட்சி பிற்கால சோழர்களால் பறிக்கப்படும். ஒரு நூற்றாண்டுக்குள் சோழனுடன் அபிமானத்துடன் இணைந்து சோழ முத்தரையர் என்ற பெயரையும் பெற்றவன். இவன் இக்கோவில் மூலஸ்தானமுடைய மகாதேவர் மீது கொண்ட பக்தி காரணமாக 64 பலம் எடை கொண்ட வெண்கலத் தளிகையும் ஒரு விளக்கையும் தானமாக கொடுத்துள்ளான். இவன் வடபிடாகை ஆற்றுப் பார்க்கத்தை ச

மூன்று தரை சோழ முத்தரையர்கள் (6முதல் 10வரை)

Image
நாடாண்ட முத்தரைய மன்னர்கள்: ____________________________________ சோழ முத்தரையர்(கள்): __________________________ 6.சங்கர நாராயணன் என்ற சோழ முத்தரையன் இவரைப்பற்றிய கல்வெட்டு ஒன்று, திருச்சி மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கோவிந்த புத்தூரில் கோப்பர கேசரியின் 13வது ஆட்சியாண்டு (கி.பி.1025)ல் உள்ளது. இவர் கோவிந்தப்புத்தூரில் ஸ்ரீ கைலாசநாதர் ஆழ்வார் என்ற கோவிலை கட்டியுள்ளார். இக்கோயிலை பராமரிக்கவும், திருச் சென்னடைபுறம், நெய்யமுது, கறியமுது, வெற்றிலை பாக்குப் படையல், அயனச் சங்கராந்தி, இரண்டுக்கும் விசு இரண்டுக்கும் வைகாசி விசாகமும், நீராட்டுதல், பெருந்திருவமுது செய்யவும், திருப்புகையும், திருச்சந்தனமும், திருவிளக்கு போடவும், அதற்குத்தினம் எண்ணெய் நாழியும் ஆழாக்கு இத்தனையும் குறைவரத் தினசரியும் செய்து வர வேண்டும் என்றும் அதற்காக பட்டர்கள் இவரிடம் ஒப்பந்தம் செய்துள்ளனர். இதற்காக வடகுடி கண்மாயில் நில தானம் கொடுத்துள்ளார். இவர் திருச்சி மாவட்டம் மேலப்பழுவூரைச் சேர்ந்தவர் என்று திரு.நடன காசிநாதன் கூறுகிறார். இச்செய்தி தொகுதி.19 க.எ.331ல் கல்வெட்டை காணலாம். 7.வேட்டைக்காரன் சோழ ம

மூன்று தரை சோழ முத்தரையர்கள் (1முதல் 5வரை)

Image
மூன்று தரை முத்தரையர்கள்: ______________________________ சோழ முத்தரையர்(கள்) _________________________ 1.எதிரில்லாதானான சோழ முத்தரையர்: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நாமபுரீஸ்வரர் கோயில் கல்வெட்டில், இக் கோயில் கட்டும்போது பல்வேறு பட்டவர்களுடன் ஆலங்குடி ஊராண்ட "எதிரில்லாதானான சோழ முத்தரையர்" இரண்டு நிலைக் காலைத் தர்மமாக கொடுத்துள்ளதை புதுக்கோட்டை கல்வெட்டு 1037விளக்குகிறது. 2.சேக்கிழான் அரையன்: தென் ஆற்காடு மாவட்டம் காட்டு மன்னார் கோயிலருகிலுள்ள உடையார்குடி கோயில் கல்வெட்டில், கோ ராசகேசரி வர்மனின் 6வது ஆட்சியாண்டில் மேலப்பழுவூரை சேர்ந்த "சேக்கிழான் அரையன் சங்கர நாராயணனாகிய சோழ முத்தரையன்" நிலம் கொடையளித்துள்ளான் என்று கூறுகிறது. 3.சித்தக்குட்டி மாதவன்: மதுரை மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் குருவித்துரை கல்வெட்டில் "சித்தக்குட்டி மாதவனான சோழ முத்தரையன்" கல்வெட்டு உள்ளது இவனைப்பற்றி ஏற்கனவே (சத்ரு பயங்கர முத்தரையன் என்ற தலைப்பில் பார்த்திருக்கிறோம்.) 4.முடிகொண்ட சோழ முத்தரையன்: ஜெயங்கொண்ட சோழபுரம் கல்வெட்டில் ராஜ ராஜனின் 27ஆவது ஆட்சியாண்டி

கோ இளங்கோ முத்தரையர்

Image
நாடாண்ட முத்தரைய மன்னர்கள்: ____________________________________ 6.கோ இளங்கோ முத்தரையர் கோ இளங்கோ முத்தரையர்க்கு *உத்தமதாணி* என்ற சிறப்பு பெயரும் இருந்துள்ளது. இவன் *கோனாளறு முத்தரையன்* என்றும் அழைக்கப்பட்டுள்ளான். இந்த கோனாளறு முத்தரையன் சுயேட்சையாக தனித்து ஆண்டவன். இம்மன்னன் வல்லத்தை நலைநகராக கொண்டு புதுக்கோட்டை பகுதிகளையும் ஆட்சிபுரிந்திருக்க வேண்டும் என கருதப்படுகிறது. இவனது காலம் கி.பி.630-660 ஆகும். "வரத ஸ்ரீ கோனாளறு முத்தரையற்கு யாண்டு பதி மூன்றாவது கீரனூர் உத்தமதாணி ஈஸ்வர வரத்து பெருமானடிகளுக்குத் ............." என்ற கல்வெட்டு தனது யாண்டு குறிக்கப்படுவதிலிருந்து உறுதிப்படுகிறது. இக்கல்வெட்டு புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், கீரனூரில் தன்னால் கட்டப்பட்ட உத்தமதானீஸ்வரர் கோவிலில் உள்ளதாகும். இம்மன்னனின் 13ஆவது ஆட்சியாண்டு வரை இருந்ததற்கு சான்றாக உள்ளது. இந்த கீரனூரில், தனது சிறப்புப் பெயரான "உத்தமதாணி" என்ற பெயரிலேயே இளங்கோவதி முத்தரையன் கோயிலை கட்டி, "உத்தமதானீஸ்வரர்" எனப் பெயரையும் சூட்டியுள்ளான். இந்த கோவில் திருவிழா நடத்த

சத்ரு பயங்கர முத்தரையர்

Image
நாடாண்ட முத்தரைய மன்னர்கள்: ____________________________________ 5.சத்ரு பயங்கர முத்தரையர் சத்ரு பயங்கர முத்தரையர் நெல்லை மாவட்டத்தில் அரசனாக இருந்துள்ளார். இவனது மனைவியை கல்வெட்டுக்கள் அரசி என்றே குறிப்பிடுகின்றன. இவன் பாண்டிய நாட்டில் ஸ்ரீ மாறன், ஸ்ரீ வல்லபனின் கி.பி.811-860 ஆட்சி காலத்தில் அரசியல் தலைவனாக விளங்கியவன். நெல்லை மாவட்டம் செவலப் பேரியிலும், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், எருக்கன்குடியிலும் இவனைப்பற்றிய சான்றுகள் கிடைத்துள்ளன. இந்த சத்ரு பயங்கர முத்தரையனுக்கு "இருப்பைக்குடி கிழவன்" "எட்டிச் சாத்தன்"  என்ற சிறப்பு பெயர்களும் இருந்துள்ளன. இவன் இரண்டாம் வரகுண பாண்டியனின் தந்தையான ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லபன் காலத்தில் செல்வாக்குப் பெற்ற அரசியல் தலைவனாக இருந்துள்ளான். இவனே வரகுண பாண்டியனின் ஆட்சியாளனாக இருந்தவன். நெல்லை மாவட்டம் செவலப்பேரி அழகர் கோயிலின் தென் சுவற்றில் உள்ள கல்வெட்டு எண் 71 (ஏ.ஆர்.எண்421/1906) 👇👇👇👇 1)ஸ்ரீ கோச்சடையர் மாறர்க்கு இயாண்டு இரண்டு இதனெதிர் பத்தொன்பது இவ்வாண்டு (இரிஞ்) சோழ நாட்டு ஆலங் 2)குடி சத்துரு பயங்கர மு