Posts

சுருதிமான் நக்கன் சந்திரனான இராஜமல்ல முத்தரையன்

Image
இராஜேந்திர சோழனின் படைகளில்  ஓர் படைப்பிரிவுக்கு  படைவீரர்களாக இருந்த #சுருதிமான்களுக்கு #தலைமை வகித்த #இராஜமல்ல_முத்தரையன்  இந்தக் கல்வெட்டு இராசேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தது. "கோப்பரகேசரி பன்மரான உடையார் ஸ்ரீ இராஜேந்திர சோழதேவர்க்கு யாண்டு ங-ஆவது" என்று தொடங்குவதன் மூலம், இது அவரது 3-ஆம் ஆட்சி ஆண்டு (சுமார் கி.பி. 1015) கல்வெட்டு  "வடகரை விழாநாட்டு" - அதாவது காவிரி ஆற்றின் வடகரையில் இருந்த விழாநாடு என்னும் நாட்டுப் பிரிவில் உள்ள ஒரு ஊரைப் பற்றி பேசுகிறது.  "சுருதிமான் நக்கன் சந்திரனான இராஜமல்ல முத்தரையன்"  #சுருதிமான் என்பது இராஜேந்திர சோழரிடம் இருந்த ஓர் படைவீரர் பிரிவை குறிக்கிறது.  #இராஜமல்ல_முத்தரையன் இவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு  சோழ அரசின் படைத்தளபதியாகவோ இருந்திருக்க வேண்டும். சுருதிமான்கள் இருந்த ஒரு  படைபிரிவுக்கு முத்தரையர் தலைமை தாங்கினார்கள் என்பதை இதன் மூலம் அறியலாம். *கடகத்தில் என்பது படைமுகாமை குறிப்பது. அல்லது படை தலைமை இடமாக இருக்கலாம். பதிவு: 3lion stodio's

"அரையன் மஹிமாலயனான பராந்தக முத்தரையன்" கல்வெட்டு

Image
இந்த கல்வெட்டு படியெடுக்கப்பட்டு கிபி 1920 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அக்கல்வெட்டில் உள்ளது அருண்மொழிவர்மன் - அரசியார் பஞ்சவன் மாதேவியார் என்பது ஜனவரி 24, 2026 ம் ஆண்டுதான் கண்டறியப்பட்டது. 106 ஆண்டுகள் எத்தனையோ பேரின் ஆய்வுக்கு உட்பட்டாலும் அது அருண்மொழிவர்மன் என்பது எவர் மனதிலும்  உதிக்கவில்லை. இதற்கு முன்னர் வரலாற்று புதினம் எழுதிய #பாலகுமாரன் அவர்கள் முதலில் கண்டறிந்தாலும் அதனை வெளிப்படையாக தெரிவிக்காமல், அருண்மொழி வர்மன் முத்தரையர் குலத்தில் உதித்தவன் என்று பஞ்சவன் மாதேவியார் மற்றும் அவர் தந்தை பழுவேட்டரையர் அழைப்பது போல் வரிகளை உருவாக்கியிருந்தார். அதற்கு ராஜராஜனை ஏன் முத்தரையர் என்று சொல்லுகிறீர்கள் என்று பலர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். விஜயாலய சோழனே முத்தரையர் மகன் என்பதனை ஆதாரத்துடன் நிரூபித்த பிறகு தற்சமயம் இராஜராஜ சோழன் மன்னராவதற்கு 12 ஆண்டுகள் முன்னர் தமது 25ம் வயதில் இளவரசராக இருந்த சமயம் அவருடைய அரசியார் பஞ்சவன் மாதேவியார் தன் கணவர் பெயர் "அரையன் மஹிமாலயனான பராந்தக முத்தரையன்" என்று கல்வெட்டாக உடையார்குடி அனந்தீவரர் ஆலயத்தில் தெரிவித்துள்ளார் என்ப...

பாண்டி முத்தரையனான அரட்டவதி அரையன்

Image
திருச்சி மாவட்டம் கடவூர் அருகே புதிய முத்தரையர் கல்வெட்டு கண்டுபிடிப்பு

"அரையன் மஹிமாலயன் ஆயின பராந்தக முத்தரையன்"

Image
#உடையார் வரலாற்று புதினமானது கல்வெட்டுகள் அடிப்படையில் உருவானது ஆகும். #பழுவேட்டரையர் மற்றும் அவருடைய மகள்  #பஞ்சவன்_மாதேவி ஆகிய இருவரும் அருண்மொழி மற்றும் குந்தவையை பழுவூர் இல்லத்தில் வரவேற்கும் போது அருண்மொழியை பார்த்து #முத்தரையர் குலத்தில் தோன்றிய இளவரசரே வருக என்றழைப்பர்.  பஞ்சவன் மாதேவி அவர்கள் அருண்மொழி வர்மனை  "அரையன் மஹிமாலயன் ஆயின பராந்தக முத்தரையன்" என்று உடையார்குடி கல்வெட்டில் திருமணமான பிறகு குறிப்பிட்டுள்ளதை அடிப்படையாக கொண்டே  ராஜராஜனை முத்தரையர் என்று பஞ்சவன் மாதேவியின் தந்தை பழுவேட்டரையர் அழைப்பது போல் வரலாற்று புதின ஆசிரியர் எழுதியுள்ளார். - S. ஜெகன்

இராஜ இராஜ சோழன் முத்தரையர் - அரையன் மகிமாலயன் ஆயின பராந்தக முத்தரையன்.

Image
இராஜ ராஜ சோழன் படத்துக்கு கீழே "அரசி பஞ்சவன் மாதேவி கணவர் - அரையன் மகிமாலயன் ஆயின பராந்தக முத்தரையன்". அரையன் மஹிமாலயன் ஆயின பராந்தக முத்தரையன் என்பது ராஜராஜ சோழனின் இளவரச பருவ வழங்கு பெயராகும். சகோதரனின் கொலைக்கு பிறகு, அவர் சோழ அரச பதவி வேண்டாம் என்று விலகி இருந்த காலம் ஆகும்.  அந்த பெயர் இயற் பெயர் கிடையாது, வழங்கு பெயராகும்.  அரையன் - அரசன்  மஹிமாலயன் - மஹிமை வாய்ந்த உயர்ந்தவன்  பராந்தக - பெரும்பாட்டனார் மதுரை கொண்ட பரகேசரி பராந்தக சோழனின் பெயர்  முத்தரையன் - இளவரசனின் இளையவன்  கல்வெட்டு வெளியிடப்பட்ட காலம்  உத்தமசோழன் (கி.பி.970-985) இராஜ ராஜ சோழனின் மூத்த சகோதரன் ஆதித்ய சோழனின் கொலைக்கு பிறகு, உத்தம சோழன் மன்னராக பதவி ஏற்பார். அந்த கால கட்டத்தில் வெளியிடப்பட்ட இக்கல்வெட்டில் அரசி  #பஞ்சவன்_மாதேவி கணவர் அரையன் (அரசர்) மஹிமாலயன் ஆயின பராந்தக முத்தரையன் என்று உள்ளது. பஞ்சவன் மாதேவியின் கணவர் இராஜராஜ சோழன் ஆவார்.  ஆதித்த கரிகாலன் கொலைக்கு பிறகு அவர் 15 ஆண்டுகள் அரச பதவி வேண்டாம் என்று விலகியிருப்பார். இராஜராஜன் என்ற வழங்கு பெயறா...

சாத்தன் பழியிலி இளங்கோ முத்தரையரின் அண்ணன் சாத்தன் பூதி இளங்கோ அதியரையன்

Image
முத்துராஜா (முத்தரையன்) என்ற பட்டம் மன்னனின் இளைய மகனுக்கு உரிய பட்டம் ஆகும். மேலும், முத்தரையன் என்பது முத்துராஜா என்ற பட்டத்தின் தமிழ் வடிவம்.  (ஆதாரம்: எபி இண்டிகா பகுதி 27) சாத்தன் பழியிலி இளங்கோ முத்தரையரின் அண்ணன் சாத்தன் பூதி இளங்கோ அதியரையன் ஆவார் . இளங்கோ முத்தரையரிடமிருந்து எவ்வித எதிர்ப்பும் இன்றி விஜயாலய சோழன் தஞ்சையை கைப்பற்றி நிசும்பசூதனி ஆலயத்தை தஞ்சையில் எடுப்பித்தான். நார்த்தா மலைமேல் பழியிலீஸ்வரம் கோயிலை தம்பி சாத்தன் பழியிலி இளங்கோ முத்தரையன் குடைவித்துள்ளான். அருகே, விஜயாலய சோழீஸ்வரம் கோயிலை அண்ணன் கட்டியுள்ளான்.  இளங்கோ முத்தரையரிடமிருந்து தஞ்சையை எவ்வித எதிர்ப்பும் இன்றி கைப்பற்றிய விஜயாலய சோழன் யார்? குவாவன் சாத்தன் முத்தரையரின் மூத்தமகனான சாத்தன் பூதி இளங்கோ அதியரையன் தான் பிற்கால சோழ சாம்ராஜ்யத்தை நிறுவியவர் ஆவார். தஞ்சையை எவ்வித எதிர்ப்பும் இன்றி இளைய சகோதரர் இளங்கோ முத்தரையரிடமிருந்து கைப்பற்றி, பிறகு நிசும்பசூதனிக்கு ஆலயம் எடுப்பித்தவரும் அவரே! -ஜெகன்

சோழரும் நாங்கதான்! முத்தரையரும் நாங்கதான்!

Image
#முத்தரையன் என்ற பட்டம் #சோழ_இளவரசன் பட்டம் என்றும், மன்னரின் இளையவனுக்கு உரியது என்பதனை முதன் முதல் கூறியது நான். அதன்மூலம்தான் #இளங்கோ_முத்தரையனிடமிருந்து தஞ்சையை கைப்பற்றியவன் அவனுடைய மூத்த சகோதரனும் விஜயாலய சோழீஸ்வரத்தை எடுப்பித்தவனும் ஆன விடேல் விடுகு சாத்தன் பூதி இளங்கோ வதியரையன் என்பதனை என்னால் முதலில் உலகுக்கு கூற முடிந்தது. ஆனால், #முத்துராஜா என்பதன் தமிழ் வடிவம் முத்தரையர் என்று கூறிய #நீலகண்ட_சாஸ்திரி போன்ற வரலாற்று ஆசிரியர்கள் "முத்துராஜா" என்பது #சோழஇளவரசனின் பட்டம் என்று இரண்டு செப்புப்பட்டயம் மற்றும் 12க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் மூலம் முன்னரே உறுதியாக ஆவணப்படுத்தியுள்ளனர். சோழரும் நாங்கதான்! முத்தரையரும் நாங்கதான்! பழைய தமிழக எல்லைப்பகுதியில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் வாழும் #மீனவர்களின்_பாதிபேர் முத்துராஜாக்கள் ஆவர். நன்னீரில் #மீன்பிடித்தல் மற்றும் #வேட்டையாடுதல் அவர்களின் குலத்தொழில் என நெல்லூர் சாசனம் தெரிவிக்கிறது. தமிழகத்தில் வாழும் முத்துராஜா, வலையர், பாளையக்காரர், அம்பலக்காரர் மற்றும் இன்னபிற உட்பிரிவுகளை கொண்ட முத்தரையர் மக்களை #நாட்டு...