இராஜ இராஜ சோழன் முத்தரையர் - அரையன் மகிமாலயன் ஆயின பராந்தக முத்தரையன்.


இராஜ ராஜ சோழன் படத்துக்கு கீழே "அரசி பஞ்சவன் மாதேவி கணவர் - அரையன் மகிமாலயன் ஆயின பராந்தக முத்தரையன்".

அரையன் மஹிமாலயன் ஆயின பராந்தக முத்தரையன் என்பது ராஜராஜ சோழனின் இளவரச பருவ வழங்கு பெயராகும்.

சகோதரனின் கொலைக்கு பிறகு, அவர் சோழ அரச பதவி வேண்டாம் என்று விலகி இருந்த காலம் ஆகும். 

அந்த பெயர் இயற் பெயர் கிடையாது, வழங்கு பெயராகும். 

அரையன் - அரசன் 

மஹிமாலயன் - மஹிமை வாய்ந்த உயர்ந்தவன் 

பராந்தக - பெரும்பாட்டனார் மதுரை கொண்ட பரகேசரி பராந்தக சோழனின் பெயர் 

முத்தரையன் - இளவரசனின் இளையவன் 

கல்வெட்டு வெளியிடப்பட்ட காலம் 
உத்தமசோழன் (கி.பி.970-985)

இராஜ ராஜ சோழனின் மூத்த சகோதரன் ஆதித்ய சோழனின் கொலைக்கு பிறகு, உத்தம சோழன் மன்னராக பதவி ஏற்பார்.

அந்த கால கட்டத்தில் வெளியிடப்பட்ட இக்கல்வெட்டில் அரசி  #பஞ்சவன்_மாதேவி கணவர் அரையன் (அரசர்) மஹிமாலயன் ஆயின பராந்தக முத்தரையன் என்று உள்ளது.

பஞ்சவன் மாதேவியின் கணவர் இராஜராஜ சோழன் ஆவார்.  ஆதித்த கரிகாலன் கொலைக்கு பிறகு அவர் 15 ஆண்டுகள் அரச பதவி வேண்டாம் என்று விலகியிருப்பார். இராஜராஜன் என்ற வழங்கு பெயறால் பிறகுதான் அழைக்கப்பட்டார்.  

-வரலாற்று ஆய்வு -  
S. ஜெகன் தஞ்சாவூர்

2. பராந்தக சோழனுக்கு கட்டுப்பட்ட வேளிர் மஹிமாலய இருக்குவேள் பராந்தக வீர சோழன் என்று கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளது.

அதன் மூலம் மஹிமாலயன் என்பது பராந்தக சோழரின் வழங்கு பெயர் என்பதனை அறியமுடிகிறது. இராஜராஜ சோழன் மன்னராவதற்கு முன்னர் தன் பெயரை "அரையன் மஹிமாலயன் பராந்தக முத்தரையன்" என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய மனைவி "அரசியார் பஞ்சவன் மாதேவி" என அக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
தனது பாட்டனார் பெயரில் விளங்கியதுடன் #முத்தரையன் என்று தன்னை குறிப்பிட்டுள்ளார். முத்தரையன் என்றால் இளையவன் ஆகும். அண்ணன்  ஆதித்த சோழன் ஆவார். 

-ஆய்வு 
S.ஜெகன் சேர்வை

3. அரசியார் பஞ்சவன் மாதேவியார் 12 1/2 கழஞ்சு பொன் வழங்கி "அரையன் மஹிமாலயன் ஆயின பராந்தக முத்தரையன்" மனைவி என்று குறிப்பிட்டுள்ள ஸ்ரீ ஆனந்தீஸ்வரர் ஆலயம்

இறைவன்: ஸ்ரீஆனந்தீஸ்வரர் 
இறைவி: சவுந்திரநாயகி 
கல்வெட்டு: உத்தமர் சோழர் காலம் (கி.பி. 970-985)

மேலும், இராஜராஜ சோழரின் மூத்த சகோதரனை கொன்றவர்கள் பற்றிய முழுத்தகவலையும் அதே ஆலயத்தில்  உள்ள அதே உத்தமர் சோழர் கால கல்வெட்டு விரிவாக கூறுகிறது.

அதன் மூலம், அருண்மொழிவர்மன் மன்னராவதற்கு முன்னர், அவர் அண்ணன் கொலையானபிறகு தன்னை முத்தரையன் என்றே கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார். என்பது எவ்வித ஐயம் இன்றி உறுதியாகிறது.

ஊர்: உடையார்குடி, காட்டுமன்னார் கோயில், சிதம்பரம் தாலுகா
4. அரசியார் பஞ்சவன் மாதேவியால் இராஜ ராஜ சோழன் - #முத்தரையன் என்று  குறிப்பிட்டுள்ள கல்வெட்டு ஆதாரம் 👇

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்