சோழரும் நாங்கதான்! முத்தரையரும் நாங்கதான்!
#முத்தரையன் என்ற பட்டம் #சோழ_இளவரசன் பட்டம் என்றும், மன்னரின் இளையவனுக்கு உரியது என்பதனை முதன் முதல் கூறியது நான். அதன்மூலம்தான் #இளங்கோ_முத்தரையனிடமிருந்து தஞ்சையை கைப்பற்றியவன் அவனுடைய மூத்த சகோதரனும் விஜயாலய சோழீஸ்வரத்தை எடுப்பித்தவனும் ஆன விடேல் விடுகு சாத்தன் பூதி இளங்கோ வதியரையன் என்பதனை என்னால் முதலில் உலகுக்கு கூற முடிந்தது.
ஆனால், #முத்துராஜா என்பதன் தமிழ் வடிவம் முத்தரையர் என்று கூறிய #நீலகண்ட_சாஸ்திரி போன்ற வரலாற்று ஆசிரியர்கள் "முத்துராஜா" என்பது #சோழஇளவரசனின் பட்டம் என்று இரண்டு செப்புப்பட்டயம் மற்றும் 12க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் மூலம் முன்னரே உறுதியாக ஆவணப்படுத்தியுள்ளனர்.
சோழரும் நாங்கதான்! முத்தரையரும் நாங்கதான்!
பழைய தமிழக எல்லைப்பகுதியில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் வாழும் #மீனவர்களின்_பாதிபேர் முத்துராஜாக்கள் ஆவர்.
நன்னீரில் #மீன்பிடித்தல் மற்றும் #வேட்டையாடுதல் அவர்களின் குலத்தொழில் என நெல்லூர் சாசனம் தெரிவிக்கிறது.
தமிழகத்தில் வாழும் முத்துராஜா, வலையர், பாளையக்காரர், அம்பலக்காரர் மற்றும் இன்னபிற உட்பிரிவுகளை கொண்ட முத்தரையர் மக்களை #நாட்டு_மீனவர் என தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு இன்று மீண்டும் மனு அனுப்பியுள்ளேன்.
மேலும் முத்தரையர் #நாட்டு_மீனவர் வாரியம் புதிதாக அமைக்கவும் வேண்டி விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
S. ஜெகன்
Comments
Post a Comment