கள்வர் கள்வன் - வரலாற்று ஆசிரியர்கள் பார்வையில்

 

கள்வர் கள்வன்; சில விளக்கங்கள்
________________________________________

‘கள்வர் கள்வன்’ என்ற பட்டப் பெயர் பலராலும் பல விதமாகப் பொருள் காணப்பட்டது. டி.ஏ. கோபிநாதராவ் முதலான சில வரலாற்று ஆசிரியர்கள் இச்சொல்லுக்கு களப்பிரர்களின் தைலவன் என்றே பொருள் கண்டனர். அவ்வாறு பொருள் கண்டதன் விைளவாக சுவரன்மாறன் என்ற முத்தைரயர் மன்னனும் களப்பிரர் இனத்தவன் என்ற முடிவுக்கு வந்தனர். இரா. இராகைவய்யங்கார் போன்றோர் களப்பிரர்களும் முத்தைரயர்களும் வெவ்வேறு இனத்தவர் என்றே கூறினர். முத்தைரயர் என்னும் நூலில் நூலாசிரியர் கள்வர் கள்வன் என்பதற்கு கள்வர்களுக்கு கள்வன், கள்வர்களின் எதிரி என்று பொருள்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அைத மறுக்கும் வைகயில் ‘கள்வர் கள்வன்’ எனும் சொல்லை களப்பிரர்களுக்கெல்லாம் களப்பிரனாக விளங்கினான் எனப் பொருள் காணேவண்டும் என்றும், மன்னாதி மன்னன் சூராதி சூரன், வில்லாதி வில்லன் ஆகிய சொற்களுடன் இைத ஒப்பிட்டு பார்த்திடல் வேண்டுமன்றும் இராசேசகர தங்கமணி எழுதியுள்ளார். (ம. இராசேசகர தங்கமணி, பாண்டியர் வரலாறு, பக்கம்-194)

இவர் எடுத்துக் கூறியுள்ள ஒப்பீட்டுச் சொற்கள் மன்னாதி மன்னன், சூராதி சூரன், வில்லாதி வில்லன் ஆகிய மூன்றும் அவரது வாதத்துக்கு சற்றும் பொருத்தம் இல்லாதைவ. மன்னாதி மன்னன் எனின் மன்னர்களுக்கெல்லாம் மன்னன் என்றும் சூராதி சூரன் எனின் சூரர்களுக்ெகல்லாம் சூரன் என்றும், வில்லாதி வில்லன் என்றால் ஏனைய வில்லாளிகைளெயல்லாம் வெல்லக்கூடிய ஆற்றல் பெற்றவன் என்றும் பொருளாகிறது. அவ்வாெறனில் கள்வர் கள்வன் என்பைத
கள்வர்கைளெயல்லாம் வெல்லக்கூடிய கள்வன் என்றுதாேன பொருள்கொள்ள வேண்டும். கால காலன் என்றொரு சொல் உண்டு. அதைன எமைனெயல்லாம் நடுங்கச் செய்யும் எமன் என்றுதாேன பொருள் கூறுகின்றனர். அதுேபான்று கண்டர் கண்டன் என்று சொல்லுக்கு கண்டர்கைள எல்லாம் வென்று
அடக்கியவன் என்று தாேன வரலாற்றாசிரியர்கள் பொருள் புகலுகின்றனர் என்று கூறுகிறார் நடன காசிநாதன் தமது களப்பிரர் என்றநூலில்.

இனி இராசேசகர தங்கமணி பொருள் கொள்வது போல, கள்வர் கள்வன்
என்ற சொற்றொடர் கள்வரின் தைலவன் என்று ஆகிவர எவ்வித இலக்கண நியாயமும் புலப்பட வில்லை. அவ்வாறு ஓர் வழக்கம் இருந்திருப்பின் ஏனைய அரசர்களும் தங்கள் தலைமைத் தன்மையை பறைசாற்ற சோழர், சோழன் என்றோ பாண்டிய பாண்டியன் என்றோ பல்லவர் பல்லவன் என்றோ எங்கேனும்
குறிப்பிட்டிருத்தல் வேண்டும். ஆனால் அதுேபான்ற ெசய்தி இதுவைர எங்கும்
கிடைத்தபாடில்லை. ஆதலால் திரு. தங்கமணியாரின் கூற்று எவ்வைகயிலும்
ஏற்கக் கூடியதாக இல்லை. களப்பிரர்களும், முத்தைரயரும் வெவ்வேறானவர் என்ற செய்திக்கு ஆதாரமாக மற்றுேமார் ஆதாரத்ைத இங்குக் குறிப்பிட வேண்டும். முதலாம்
நரசிம்மவர்மன் களப்பிரர்கைள வென்றான் என்ற செய்தி பல்லவர் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது. அேதேநரம் முத்தைரயர்கள் பல்லவ அரசுக்குக் கட்டுப்பட்ட சிற்றரசாக பல்லவ அரசின் தைலைமக்கு அடங்கியவராக இருந்து வந்துள்ளனர் என்ற செய்தியும் காணக்கிைடத்துள்ளன. (டாக்டர் இரா. நாகசாமி, செங்கம் நடுகற்கள்)

மேலும் இரண்டாம் நந்திவர்ம பல்லவ மல்லைனக் காஞ்சிபுரத்தில் பல்லவர்தம்
அரியாசனத்தில் அமர்த்த துைண புரிந்தவர்களில் ஒருவன் எனக் காடக
முத்தைரயன் என்பவன் குறிக்கப்படுகிறான் (S.I.I. vol. IV. No 135, Section 1) ஆனால் பல்லவர்களின் செப்பேடுகளில் ஒன்றான பட்டத்தாள மங்கலச் செப்பேட்டில் (பட்டயம்) நந்திவர்ம பல்லவ மன்னனின் கால்களில் வீழ்ந்து வணங்குவதற்குரிய வாய்ப்பை எதிர்ப்பார்த்து காத்திருந்தவர்களில் களப்பிரனும் ஒருவன் என்று குறிக்கப்பட்டுள்ளது. இவ்வைக செய்தி களிலிருந்து, களப்பிரர்கள் எப்போதும் பல்லவர்களின் எதிரிகள் என்பதும், முத்தைரயர்கள் தொடக்க காலம்
முதல் பல்லவர்களுக்கு உதவும் நட்புக்குரிய சிற்றரசர்களாகவும் இருந்திருக்கின்றனர் என்பதும் அதனால் களப்பிரர்களும், முத்தைரயர்களும் வெவ்வேறானவர்கள் ஒருேபாதும் ஓரினத்தாரல்ல என்பதும் உறுதியுடன் உைரக்க முடிகிறது. இதுதவிர கருநாடகத்தில் கிைடத்துள்ள கல்வெட்டுகள் சிலவற்றில் கலிகுலன்,
கலி தேவன் போன்ற பெயர் குறிப்புக்கள் இடம்பெற்றிருப்பதால் களப்பிரர்கள்
கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்கின்ற திடமான நம்பிக்கை வலுக்கின்றது.  களப்பிரர்களும், கலியரசர்கள் என்று அழைக்கப்பட்டதற்கான சான்றுகள்
இருப்பதால் இது மேலும் வலு சேர்க்கின்றன. எனினும் இன்றைக்கு (களப்பைறயர்கள் என்று அழைக்கப்படுபவர்களே அந்நாளில் களப்பிரர் எனப்பட்டனர் எனக் கருதுேவாரும் உண்டு (தமிழக வரலாறும் பண்பாடும் By செல்லம் வே.தி.) அது தவிர இவர்கள் கோசர்கள் வழிவந்தவர்கள் என்றும்,  (பண்டைத் தைடயம் பகுதி கோசர்தான் களப்பிரேரா, நடன காசிநாதன்,  மா.சுந்தரமூர்த்தி) உழவர் வழி வந்தவர்கள் என்றும், (கலப்பையால் உழுவதால் உழவர்கள் கலமர் என அைழக்கப்பட்டு அதுவே களமர் எனத் திரிந்து பின்பு களப்பிரர் என மருவியது. பின்னர் களப்பைறயர் என்றாயிற்று) பல்வேறு கருத்துகள் இங்கே உலவியேபாதும் களப்பிரர்கள் கன்னட மண்ணின் வழித்தோன்றல்கள் திராவிட இனஞ்சார்ந்த, அதேசமயம் தமிழரல்லாத வேற்றுப் பகுதிையச் சேர்ந்தவர்கள். அவர்கள் இங்கே வந்தேறி சில நூற்றாண்டுகள் (கி.பி. 250 அல்லது அதற்கு சில காலம் பின்பு) தமிழ் மண்ணை முழுைமயாகவும், பின்னர்
சில நூற்றாண்டுகள் ஆங்காங்கே சிதறுண்டும் ஆட்சிபுரிந்தனர். இதுேவ எவ்வைகயிலும் ஏற்கக்கூடிய உண்மை என்பேத இதுவைரப் பார்த்த குறிப்புகள் உணர்த்தக் கூடியைவ.

நூல்: தமிழக வரலாற்றில் களப்பிரர்கள்

தொடரும்...

தமிழ்நாடு முத்தரையர்
முன்னேற்ற சங்கம்..🔥🔥

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER