முத்தரையர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்கள் தொகுப்பு




மிகமுக்கியமான வரலாற்று தொகுப்பு, முத்தரையர் வரலாற்றை அறிய இந்த புத்தகங்களை தேடி படியுங்கள்

நமது முத்தரைய சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் நமது வரலாறை தெளிவாக தெரிந்து வைத்துகொள்ளாதால் வந்த விளைவுகளை நாம் இன்று அறுவடை செய்து கொண்டு இருக்கின்றோம்.நமது தலைவர்கள் நம்மை நம் வரலாறை படிக்க தூண்டினார்களா என்று தெரியவில்லை...அப்படி எந்த தலைவராவது சொல்லி இருந்தால் நாம் அவர்களுக்கு வாழ்த்துக்களை இந்த அருமையான வேலைல சொல்லிக்கொள்ளலாம்.

நமது பதிவு பெற்ற சங்கங்களின் அலுவலகங்களில் எத்தனை சங்கங்களில் நமது இன தொடர்பான புத்தகங்களை வைத்து நூலகங்களை வைத்து இருக்கின்றார்கள். அப்படி நூல்களை வைத்து நூலகம் அமைத்து இருந்தால் நாம் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.

சரி கடந்தது கடந்தாக வைத்து கொள்வோம் இனியும் நாம் வரலாறை படித்து வரலாறாய் வாழாவிட்டால் முடிவை நாம் சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறோம் ...

நம் இன சொந்தங்கள் நிறைய படிக்க வேண்டும் அதோட மட்டும் அல்லாமல் சொந்தங்களையும் படிக்க வையுங்கள் சில புத்தங்களை மட்டும் வரிசை படுத்தி இருக்கின்றோம்  முடிந்த அளவு வாங்கி படியுங்கள்.

பழம்பெருமை பேசி ஒரு பயனும் இல்லை என்று சொல்லும் அறிவாளிகளை ?????? ஒதுக்கி வைத்துவிட்டு படியுங்கள்...நம் மூதாதையர்கள்..எப்படி வாழ்ந்தார்கள் நாம் எப்படி வீழ்ந்தோம் என்று தெரிந்து கொள்ளுங்க...உறவுகளே..

மாற்று சமுதாய நண்பர்கள் நம்மை மதிக்க வேண்டும் எனில் அறிவில் சிறந்த சமுதாயமாக வர வேண்டும் என்றால் ..நிறைய படியுங்கள்.சமூக ஊடகங்களில் வாய்க்கு வந்ததை பேசாமல் ஆக்க பூர்வமான செயலில் ஈடு படுங்கள் வன்முறை கருத்துக்களை விதைக்க வேண்டாம் வளர்ச்சிக்கு ஆக்க பூர்வமான முறையில் சிந்தித்து செயல் படுங்கள்.

புறநானுறு 

அகநானுறு

க .ப .அறவானன்  புரட்சிப்பொறிகள்

தமிழ்  நாவலர்  சரிதை

யாப்பருங்கலம்

கூற்றுவநாயனார்  புராணம்

இரா .நாகசாமி -செங்கம்  நடுகற்கள்

திரு .கே .ஜி.கிருஷ்ணன்  தமிழகம்  ,முத்தரையர்

செந்தமிழ்  செல்வம் -முத்தரையர்  வரலாறு

நாலடியார்

தா .புண்ணியமூர்த்தி  செட்டியார் -முத்தரையர்  வரலாற்று  களஞ்சியம் (2003)

நடன .காசிநாதன் -வன்னியர்  மாட்சி (2006)

இரா .திருமலைநம்பி ,புதுக்கோட்டை  மாவட்ட  சமுதாய  ஆவணங்கள்  (2001)

நடன .காசிநாதன் , தொன்மை  தடயம் ”திருச்செங்கோடு  வேட்டுவர்  செப்பு   பட்டயம்  (2003)

கல்வெட்டுகளும்  ,தமிழ்ச்சங்க  வரலாறும்  டாக்டர்  ராசமாணிக்கனார்

கொங்கு  நாட்டு  வரலாறு -கோ .மா .ராமச்சந்திரன்  செட்டியார்

கொங்கு  நாட்டு  வரலாறு -மயிலை -சீனி  வெங்கடசாமி

கொங்கு  நாட்டு  வரலாறு -யா .லட்சுமி  நாராயணன்

கொங்கு  தேச  ராசாக்கள் -கோவைக்கிழார்

சங்ககால  தமிழக  வரலாறு - மயிலை -சீனி  வெங்கடசாமி

சோழர்  வரலாறு -மா -ராஜமாணிக்கம்

சோழர்  கால செபேடுகள் -டாக்டர்  மு .ராஜேந்திரன்

தமிழ்நாடு  முத்தரையர்  சமூக  சங்க  100 ஆண்டு  வரலாறு -கு .ம .சுப்பிரமணியன்

தமிழ்  பேரரசுகளின்  சரிவும்  வீழ்ச்சியும் -டாக்டர்  ராமசாமி

தலைக்கட்டு  கங்கர்

தாய்  நிலா  வரலாறு -பேராசிரியர்  கோ .தங்கவேலு

தென்னாட்டு  போர்க்களங்கள் -டாக்டர்  கா .அப்பாதுரையார்

தொல்காப்பியம்

நரசிம்மவர்மன் -மயிலை  சீனி  வேங்கடசாமி

பல்லவர்  வரலாறு -டாக்டர்  மா .ராசமாணிக்கனார்

பல்லவர்  வரலாறு -டாக்டர்  ந .க .மங்கள  முருகேசன்

பிற்கால  சோழர்  வரலாறு  சரித்திரம் -தி .வ .சதாசிவ  பண்டாரத்தார்

முத்தரையச்சோழர்  வரலாறு -சி.சுந்தரராஜன்  சேர்வை

வரலாற்றில்  முத்தரையர்  பெயர்  களஞ்சியம் -இரா .திருமலை  நம்பி

சீராளன் -முத்தரையர்  வரலாறு

முத்தரையர்  வரலாறு -க .செந்தமிழ்ச்செல்வன்

பாண்டியர்கள் -தி .வ .சதாசிவ  பண்டாரத்தார்

பாண்டியர்  வரலாறு -ம .ராஜசேகர  தங்கமணி

தமிழக  வரலாற்றில்  புதிய  ஒளி - ம .ராஜசேகர  தங்கமணி

முத்தரையர்  வரலாறு -புலவர்  க .மருதமுத்து

பெரும்பிடுகு  முத்தரையனான   சுவரின்  மாறன்  தமிழ்க்கோட்டம்  புதுக்கோட்டை(2015)

புதுக்கோட்டை  மாவட்ட  முத்தரைய  மன்னர்கள்  பு .சி .தமிழரசன்

டாக்டர் -பன்னீர்செல்வம்  தமிழ்நாடும் களப்பிரர்  ஆட்சியும்

இரா .நாகசாமி  முத்தரையர்  ,கட்டுரை  .தினமணி -28.10.1988

டாக்டர் .கே . கே .பிள்ளை ,தமிழக  வரலாறும்  பண்பாடும் .

ச .கிருஷ்ணமூர்த்தி -வரலாற்றில்  வல்லம்

வெ .வேதாச்சலம் -திருவெள்ளறை

வ .வேணுகோபாலன் -தஞ்சை   மன்னரும்  சரஸ்வதி  நூலகமும்  ஆயிரம்  ஆண்டு  கால  வரலாறும் .

சோ .சாந்தலிங்கம் -குடுமியான்  மலை

சே.ராசு -கொங்கு  நாடு  சமுதாய   ஆவணங்கள்

கொங்கு  நாட்டு  வேட்டுவ  கவுண்டர்கள்  வீர  வரலாறு

அன்னூர்  வரலாறு -க .அ.புவனேஸ்வரி

பட்டினப்பாலை

குறுந்தொகை

பெரியபுராணம்

கொங்குமண்டல  சரிதம்

தமிழறியும்  பெருமாள்  கதை

தமிழக  வரலாற்றில்  களப்பிரர்  காலம் -டி.கே  ரவீந்திரன்

தமிழக  வரலாற்றில்  ஒளிர்வது  களப்பிரர்  காலம் -துளசி .ராமசாமி .

களப்பிரர்  ஆட்சியில்  தமிழகம் -மயிலை -சீனி  வேங்கட  சாமி

விடியலை  நோக்கி  களப்பிரர்  வரலாறு -அ .சவரிமுத்து

முத்தத்தில்  முகிழ்த்த  முத்தரையர் -நடன  காசிநாதன்

சேர  வேட்டுவ  குல  அரசர்  வரலாறு -கொல்லிமழவர்  ப .ஆனந்தகுமார்

கொங்கு  வேந்தர்  வெஞ்சமன்  & வெஞ்சமாக்கூடல்  வரலாறு -பெ .ராமலிங்கம் 

மாமன்னன் -கரிகால்  சோழன் -தஞ்சை  எழிலன்

வேட்டுவர்  சமுதாயம்  ஒரு  பார்வை - ம .ராஜசேகர  தங்கமணி

மன்னன்  வெஞ்சமன்  வரலாறு - ம .ராஜசேகர  தங்கமணி

சில  இதழ்கள்

1.தினமலர்  20.01.74 புதுக்கோட்டை  மாவட்ட  துவக்க  விழா

2.தினமணி  31-10-82 பெ .ந .ராமச்சந்திரன்  –கல்வெட்டுகளில்  அரையன்

3. தினமணி  26.10.88 ரா .நாகசாமி  “முத்தரையர் ” கட்டுரை

4.தமிழ்நாடு  முத்தரையர்  ஜூலை  1991 மண்ணை  சுந்தரராஜன் 

“முத்துராஜாக்கள்  ஆட்சி ”

5.முத்தரையர்  முரசு  15.02.1975 செந்தமிழ்ச்செல்வம் ”சாளுக்கிய  கண்டா  (முத்தரையர்  நாடு ) திரை  ராஜ்ஜியம் .

6.முத்தரையர்  முழக்கம்  15.04.1976

7.ஆவணம்  ஜூலை  1993

8.ஆவணம்  ஜனவரி   1994

9.திருச்சிராப்பள்ளி  ஜில்லா  முத்துராஜா  மகாஜன  சங்கம்  50 வைத்து  ஆண்டு  போன்  விழா -38 வாழ்த்து   மாநாடு  மலர்  27-1957

10.பேரரசர்   பெரும்பிடுகு  முத்தரையர்  1317 வது   ஆண்டு  விழா   மலர்  தஞ்சாவூர்  23.05.1992.

11. பேரரசர்  பெரும்பிடுகு  முத்தரையர் 1318 வது  ஆண்டு  விழா  மலர்  1993-சென்னை

12.ம .ராஜசேகர  தங்கமணி -முத்தரையரின்  குடைவரைக்  கோயில்கள் -கட்டட   கலைத்துறைக்கு  கருத்தரங்கம் .

இந்த செய்தியை அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்...முடிந்த வரை ஷேர் பண்ணுங்க....உறவுகளே...

அடுத்த பதிவில் இன்னும் புத்தகங்களின் பெயர்களை பதிவிடுகிறேன்.


தொகுப்பு : பழனிவேல் சங்கிலிதேவன்

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER