Posts

திருமங்கையாழ்வார் முத்தரையர் வேடுபறி திருவிழா அழைப்பிதழ்

Image

வள்ளல் அண்ணாமலை முத்துராஜா

Image
"வள்ளல்_அண்ணாமலை_முத்துராஜா" வள்ளல் அண்ணாமலை முத்துராஜா, திருச்சி வரகனேரியில் கணபதி முத்துராஜா,பாப்பாத்தி ஆகியோருக்கு 21.8.1902-ஆம் ஆண்டு முத்தரையர் சமுதாயத்தில் பிறந்தார். முத்தரையர் சமுதாயத்தின் விடிவெள்ளியாக உலகிற்க்கு அய்யா அவர்கள் விளங்கினார் . தனது 19-ஆம் வயதில் ஞானாம்பாளை மணம் முடித்தார். தங்களுக்கு குழந்தை இன்மையால் அய்யாதுரை முத்துராஜாவை தத்தாக எடுத்துக் கொண்டார். 1932 முதல் திருச்சி மாவட்ட வியாபாரிகள் சங்க தலைமை ஏற்று 22 ஆண்டுகள், தான் காலமாகும் வரை தலைவராக இருந்துள்ளார். திருச்சி சமாதான சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். 1953-ல் இருந்து 1955 வரை திருச்சி நகராட்சி துணை தலைவராகவும் 1955-ல் இருந்து 1957 வரை திருச்சி நகராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். 1957-ஆம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து அன்றைய "அந்தநல்லூர் சட்டமன்ற தொகுதியில்" வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் ஆனார். இந்த காலக்கட்டங்களில் திருச்சி நகராட்சி பகுதிக்கு இவர் ஆற்றிய தன்னலமற்ற பணிகள் ஏராளம். இவரின் சிறந்த பணிகாரணமாக மூன்று முறை தலைவராக இருந்துள்ளார். நகர வளர

பரங்கிரி வேலுப்பிள்ளை முத்தரையர்

Image
பரங்கிரி வேலுப்பிள்ளை முத்தரையர் பிள்ளை சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் பொருளாதாரத்தில் மேன்மை அடைந்த அனைத்து சமுதாய மக்களும் பெயருக்குப் பின்னால் பிள்ளை என்று அழைப்பது வழக்கம் மேலும் 29 பட்டபெயர்களில் பிள்ளை பட்டமும் உண்டு 1906ல் திருச்சிராப்பள்ளி முத்துராஜா மகாஜன சங்கத்தை நிறுவியவர் திருச்சி நீதிமன்றம் அமைந்திருக்கும் இடத்தை தானமாக வழங்கிய 5முத்தரையர்களில் முதன்மையானவர் இன்றளவிலும் திருச்சி கோர்ட் அருகே பரங்கிரிவேலுபிள்ளை முத்தரையர்_பூங்கா அமைந்துள்ளது (இவர் தற்போது குழ.செல்லையா அவர்கள் தோற்றுவித்த தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் தலைவராக இருக்கும் ஐயா.ராமலிங்கம் அவர்களின் பாட்டனார் ஆவார்)  ஆவணம் #சோழநாடு_முத்தரையர்_சங்கம்

வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி!

Image
வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி!  குடியாத்தம் - சித்தூர் சாலையில் குடியாத்தத்தில் இருந்து 10கிமீ தொலைவில் அமைந்துள்ள ஊர் கல்லப்பாடி அவ்வூரின் அருகே வெங்கட்டூரில் ஒரு தனியார் வயலில் மூன்று நடுகற்கள் தற்போது பாதி புதைந்துள்ள நிலையில் காணப்படுகிறது. அவை மூன்றும் ஒரே காலக்கட்டத்தை சேர்ந்ததாக தெரிகிறது. அவை வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரியான ஆதித்த கரிகாலனின் மூன்றாவது (கிபி 958) ஆட்சியாண்டை சேர்ந்தது. மூன்று கல்வெட்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. இவ்வூரில் இருந்து தொறு (பசுக்கள்) கொள்வதற்காக வணிகர்கள் சிலர் அவர்தம் அடியாட்களுடன் திருவூரல் சென்று தொறு மீட்டு திரும்பும்போது கோட்டுபூசலில் சோளனூர் எனும் ஊரழிஞ்சி இறந்திருக்கிறார்கள்.  விக்ரமாதித்தனாகிய தன்ம செட்டி மகன் சாத்தயன் என்பவருக்கு அடியானாக முத்தரை(ய)ன் காரி என்பவரும் உடன்சென்று கோட்டுபூசலில் உயிர்விட்டிருக்கிறார். அவருக்கும் நடுகல் எடுக்கப்பட்டுள்ளது.  கல்வெட்டில் சேங்குன்றத்து 'தூமடைப்பூர்' என குறிப்பிடப்பட்டுள்ளது. சேங்குன்றம் எனும் ஊரானது குடியாத்தத்தில் இருந்து பலமநேர் செல்லும் சாலைய

வலைஞர்

Image
வலைஞர்: ____________ தமிழர்கள் கடலில் சென்று மீன் பிடிக்கும் தொழிலை மிக நெடுங்காலந்தொட்டு செய்து வருகின்றனர். சங்க இலக்கியங்களில் மீன் பிடிக்கும் தொழில் பற்றிய குறிப்புகள் பரவலாகக் காணப் படுகின்றன. கடலில் சென்று மீன்பிடி தொழில் செய்பவர்களை மீனவர் என்று இன்றைக்கு நாம் அழைக்கிறோம். இவர்களைச் சங்க காலத்தில் ‘வலைஞர்’ என்று சுட்டியுள்ளனர். ‘வலைஞர்’ என்பது வலையால் மீன்பிடிப்பவர் எனும் பொருளில் வரும் ஒரு காரணப் பெயராகும். fishermen 600சங்க இலக்கியங்களில் மீன் வகைகள் பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன. மடு, குளம், கழனி போன்ற நீர்நிலைகளிலுமிருந்து மீன் பிடித்த குறிப்புகளும் சங்க இலக்கியங்களில் உள்ளன. ஆனால் ‘மீனவர்’ என்ற சொல் எங்கும் இடம் பெற்றிருக்கவில்லை. அகநானூற்றூப் பாடலொன்று கடலுக்குள் சென்று மீன்பிடிப்போனைத் ‘திமிலோன்’ என்றும் சுட்டுகின்றது. திமில் என்றால் ‘மீன்படகு’ (Tamil Lexicon,, ப.1880) என்பதாகும். ‘திண்டிமில் வன்பரதவர் (புறம். 24) என்று புறநானூற்றுப் பாடலொன்றும் சுட்டுகிறது. ஓங்குதிரைப் பரப்பின் வாங்குவிசைக் கொளீஇ திமிலோன் தந்த கடுங்கண் வயமீன் தழைஅணி அல்குல் செல்

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

Image
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகை 7,21,38,958 ஆகும். தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்தவர்களாவர். தமிழகத்தில் உள்ள சிறுபான்மையின முஸ்லீம்களில் சுமார் 95 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும், சிறுபான்மையின கிறித்தவர்களில் சுமார் 80 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர். பிற்படுத்தப்பட்டேர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்புகளைச் சார்ந்தவர்கள் சமூக, பொருளாதார மற்றும் கல்வி ஆகிய அனைத்துத் துறைகளிலும் சமுதாயத்தின் இதர பிரிவினர்களுக்கு இணையாக முன்னேற்றம் அடையும் பொருட்டு இத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீடானது கல்வி மற்றும் மாநில அரசுத்துறையில் வேலைவாய்ப்பு பெற்று பொர

DNT என்றால் என்ன..??

Image
DNT என்றால் என்ன..?? DNT தேவை ஏன்..?? சலுகைக்காகவா DNT..?? உரிமைக்காகவா DNT..?? 1.சீர்மரபினர் நலச்சங்கம் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்திவருவது எதற்காக? சமூகநீதி பேசுகின்ற தமிழகத்தில் சீர்மரபினர் மக்களுக்கு மட்டும் தொடர்ந்து அநீதியே இழைக்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு அன்னிய அரசு வழங்கிய உரிமைகளும் சலுகைகளும் கூட பறிக்கப்பட்டு விட்டன. எனவே அவர்களின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தியும், சீர்மரபினர் மக்களுக்கு 10% தனி இடஒதுக்கீடு கோரிக்கையை தீவிரமாக வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு தீவிரமான போரட்டங்களை நடத்தி வருகிறது  2, எந்தெந்த சாதி சீர்மரபினர் வகுப்பில் வருகின்றனர்? தமிழகத்தில் சீர்மரபினர் பட்டியலில் 68 சாதியினர் உள்ளனர். அதில் பிரமலைக்கள்ளர், கூத்தப்பர் கள்ளர், பெரியசூரி கள்ளர், கந்தர்வக்கோட்டை கள்ளர் என்ற நான்கு(4) கள்ளர்களும், மறவர், ஆப்பநாடு கொண்டயன் கோட்டை மறவர், செம்ப நாட்டு மறவர், மறவர் என்ற மூன்று(3) மறவர்களும், வலையர், செட்டிநாடு வலையர், வேட்டுவ கவுண்டர், ஊராளி கவுண்டர், சேர்வை, அம்பலகாரர், அம்பலக்காரர், வேட்டைக்காரன் என்ற எட்டு(8) முத்தரையர்களும், போயர