வள்ளல் அண்ணாமலை முத்துராஜா
"வள்ளல்_அண்ணாமலை_முத்துராஜா"
வள்ளல் அண்ணாமலை முத்துராஜா, திருச்சி வரகனேரியில் கணபதி முத்துராஜா,பாப்பாத்தி ஆகியோருக்கு 21.8.1902-ஆம் ஆண்டு முத்தரையர் சமுதாயத்தில் பிறந்தார். முத்தரையர் சமுதாயத்தின் விடிவெள்ளியாக உலகிற்க்கு அய்யா அவர்கள் விளங்கினார் . தனது 19-ஆம் வயதில் ஞானாம்பாளை மணம் முடித்தார். தங்களுக்கு குழந்தை இன்மையால் அய்யாதுரை முத்துராஜாவை தத்தாக எடுத்துக் கொண்டார்.
1932 முதல் திருச்சி மாவட்ட வியாபாரிகள் சங்க தலைமை ஏற்று 22 ஆண்டுகள், தான் காலமாகும் வரை தலைவராக இருந்துள்ளார். திருச்சி சமாதான சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். 1953-ல் இருந்து 1955 வரை திருச்சி நகராட்சி துணை தலைவராகவும் 1955-ல் இருந்து 1957 வரை திருச்சி நகராட்சி தலைவராகவும் இருந்துள்ளார்.
1957-ஆம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து அன்றைய "அந்தநல்லூர் சட்டமன்ற தொகுதியில்" வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் ஆனார். இந்த காலக்கட்டங்களில் திருச்சி நகராட்சி பகுதிக்கு இவர் ஆற்றிய தன்னலமற்ற பணிகள் ஏராளம். இவரின் சிறந்த பணிகாரணமாக மூன்று முறை தலைவராக இருந்துள்ளார். நகர வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டார்.
3.10.1955 ஆம் நாள் முன்னால் பாரதபிரதமராக இருந்த நேருஜீயை மாலை அணிவித்து வரவேற்றுள்ளார்.
தமது முன்னோர்கள் நிருவிய "சிதம்பர சுவாமிகள்" மடத்தின் பொறுப்பை ஏற்று அன்றாட, மாத, ஆண்டு பூசைகளையும் அன்னதானம், குருபூசைகளையும் குறைவின்றி நடத்தி வந்தார்.
அக்காலத்திலேயே சட்டமன்ற உறுப்பினராகி நாட்டிற்க்குப் பல சாதனைகளைச் செய்தார். தமது முயற்சியில் "உய்யக் கொண்டான்" ஆற்றில் ஒரு பாலம் அமைத்து கொடுத்தார்.
இல்லையென்று எவர் வந்தாலும் வாரி வழங்கினார். பல பள்ளிக் குழந்தைகளின் படிப்பிற்க்கு பெரிதும் உதவினார், அவர்கள் வாழ்வில் முன்னேற வழிகாட்டியாக ஓர் ஏணி போல உழைத்துள்ளார். முத்தரையர் இன மாணவர்களுக்கு தங்கும் இடம் ,உணவு,உடைகளும் கொடுத்து கல்விக் கண் திறக்கப் பெரும் உதவி புரிந்துள்ளார். அய்யாவின் உதவி பெற்று கல்வியில் முன்னேறியவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.
அவ்வாறு அய்யாவின் உதவி வழிகாட்டுதல் மூலம் கல்வி கற்றவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் பெறவும் உதவிகள் செய்தார். சமுதாய ஒற்றுமைக்கு உழைத்தார். நல்வாழ்வு கூட்டங்களை நடத்தி ஒற்றுமை வளர்த்தார். சமுதாய நலன் காத்தார். மக்கள் பிரதிநிதியாக இருந்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்,வீதி விளக்குகள்,நல்ல பாலங்கள்,குடிநீர் வசதிகள்,தரமிக்க சாலை வசதிகளையும் என பல வசதிகளையும் மக்களுக்கு முன்னின்று நடத்தி கொடுத்துள்ளார். சட்டமன்ற உறுப்பினராக தாம் தமது தொகுதி மட்டும் இன்றி மாவட்டம் முழுவதும் பல உதவிகளை செய்துள்ளார்.
அய்யா அவர்கள் கேட்டோருக்கும் இல்லை என்று சொல்லாமல் வாரி வாரி பொன்னையும், பொருளையும், கல்வியையும் கொடையாக அளித்ததால் அய்யாவால் பலன் பெற்றோர்கள் அய்யாவை "வள்ளல்" என்ரே குறிப்பிட்டு சிறப்பித்துள்ளனர்.
அய்யாவின் புகைப்படம் முன்பு வரை திருச்சி நகராட்சி கட்டிடத்தில் இருந்தது ஆனால் தற்போது இல்லை.
நகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட அன்றைய முதல்வர் காமராஜர் அடிகல் நாட்டியதில் அய்யா பெயர் இருந்தது தற்போது அதுவும் இல்லை.
திருச்சி நகர் சத்திரம் பேருந்து நிலையத்திற்க்கு அய்யா "வள்ளல் அண்ணாமலை முத்துராஜா" அவர்களின் பெயரும் பேருந்து நிலையம் முன்பு அய்யாவின் சிலை வைக்க வேண்டும் என்று கடந்த காலங்களில் நமது முத்தரையர் சங்கத்தினர்கள் கோரிக்கை வைத்தனர்.
(சத்திரம் பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடம் திரு.அண்ணாமலை முத்துராஜா அவர்கள் தானமாக கொடுத்தது)
ஆனால் இன்றைய நிலையில் அக்கோரிக்கை மறக்கப்பட்டு விட்டது ஆக இன்றைய தலைமுறை முத்தரையர்கள் நினைத்தால் நமது பெருமைக்கூரிய முன்னோர் அய்யா "வள்ளல் அண்ணாமலை முத்துராஜா" அவர்களின் பெயரை "திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்க்கு" வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வழியுறுத்தி அதை அரசாங்கத்தை நிறைவேற்ற வைக்க போராடுவோம்...🙏🙏🙏
-பகிர்வு-
Comments
Post a Comment