Posts

Mutharaiyar Videos

Image

உலகமுத்திரையர் பெரிய பெருமாள் புத்திரன் புர உலகன்

Image
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம் கடலூர் கிராமத்தைச் சேர்ந்த நல்லூர் வயலில் உள்ள பழைய சிவன் கோவில் வடபுறச் சுவற்றில் உள்ள 17ம் நூற்றாண்டு கல்வெட்டு | வனநாதர் ஊரணியை உலகமுத்திரையர் பெரிய பெருமாள் புத்திரன் புர உலகன் வெட்டியமை

இந்திய சுதந்திர போராட்ட தியாகி அ.அய்யாச்சாமி அம்பலம்

Image
இந்திய சுதந்திர போராட்ட தியாகி அ.அய்யாச்சாமி அம்பலம் பிறந்த ஊர் : இராமேஸ்வரம். தந்தை : அய்யப்பன் அம்பலம் தாய் : முத்து பேச்சியம்மாள்  தேசப்பணிகள் : 🟠1931 இல் கள்ளுக்கடை மறியல், சுபாஷ் சந்திர போஸ், நேரு இளைஞர் மன்றம் தோற்றுவித்து நடத்துதல் . 🟠1933 -இல் தனுசுகோடி #காங்கிரஸ் கமிட்டி காரிய தரிசி. 🟠ஆகஸ்ட் புரட்சியில் தனிநபர் சத்தியாகிரகம் . இராமேஸ்வரம் இந்து தர்ம சேவா சங்கத்தை தோற்றுவித்து தலைவரானார். 🟠தமிழ்நாடு ஆலயபாதுகாப்பு கமிட்டி செயலாளர் ,கிஜன சேவா சங்க செயலாளர் . 🟠1933 இல் கள்ளுக்கடை மறியலினால் சிறையில் ஆங்கிலேயர் அடைத்தனர் . 🟠1937 -இல் வலையர் முன்னேற்ற சங்கத்தை தொடங்கி 1952 -இல் கண்ணப்பர்குல வலையர் சங்கமாக நடக்க தொடங்கியது. இந்து தர்மசேவா சங்கத்திற்கு தலைவரானார். 🟠தமிழ்நாடு மீனவர் சங்கம்,விசைப்படகுக்காரர்கள் சங்கம் ,கல்வி ,பொது நலத்துக்கு தலைமையேற்று சேவை செய்தார். 🔴இராமேஸ்வரத்தில் தன்னால் தொடங்கப்பட்ட கண்ணப்பர் குல வலையர் சங்கத்தை தமிழ்நாடு முத்தரையர் சங்கத்துடன் இணைத்தார் .இவரது மிகசிறந்த சேவையால் 07.09.1980  இல் மாநில முத்தரையர் சங்கத்திற்கு பொதுச்செயலாளராக தேர

முத்தரையர் சுதந்திர போராட்ட தியாகி VKA ஆதினமிளகி அம்பலம்

Image
பெயர் : VKA ஆதினமிளகி அம்பலம் ஊர் : மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் சருகுவலையப்பட்டி தேசப்பணிகள் : 🟠1943 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டதால் மூன்று வருடம் கர்நாடக மாநில பெல்லாரி சிறை தண்டனை பெற்றவர். 🟠மேலூரின் மற்றொரு தியாகி கக்கனின் நெருங்கிய நண்பராவர்.அவரோடு இணைந்து பல சுதந்திர போராட்டங்களை முன்னெடுத்தவர். 🟠இவரால் சருகுவலையப்பட்டி கிராமத்திற்கு பள்ளிக்கூடம்,அஞ்சலகம் கொண்டு வரப்பட்டது. 🟠விவசாய சங்க தலைவராக பணியாற்றினார். 🟠ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சட்ட மற்றும் வழக்கு பிரச்சினைகளுக்கு பேருதவி புரிந்தார்.

சுதந்திர போராட்ட தியாகி, பாதர்பேட்டை முத்தையா முத்தரையர் Ex.MLA

Image
#_தியாகி_முத்தையா  #_முத்தரையர்_Ex_MLA… (பிறந்தநாள் விழா இன்று...) சுதந்திர போராட்ட தியாகியான இவர் காமராஜரின் பொற்கால ஆட்சியில் இரண்டுமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்... மேலும் சேலத்தில் இருந்து துறையூர் பகுதிக்கு மின்சாரம் கிடைக்கச் செய்தவர் இவரே ஆவார். இன்றைக்கு பல ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெற பெரிதும் உதவியது இவரின் சீரிய அரசியல் பணி என்றால் அது மிகையாகாது... மட்டுமின்றி, தன்னுடைய பெயரிலேயே முத்தையா பாளையம் என்ற ஊரையும் உருவாக்கி, தன்னுடைய நிலங்களையெல்லாம் ஏழை எளியர்க்கு தானமாக கொடுத்தவர் தியாகி.முத்தையா முத்தரையர் ஆவார்... திருச்சி செவத்திலிங்கம் முத்தரையர் பள்ளியின் மேலாளர் அய்யா.செவத்திலிங்கம் முத்தரையர் தலைமையில், அப்பள்ளியின் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது... அதுபோக, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி பங்கீட்டு தொகையில் அனேக நலத்திட்டங்களை கொண்டுவந்தவரும் இவரே ஆவார்... சான்றோரின் புகழை சொல்ல வார்த்தைகள் ஏது..?? அவர்களின் வழிகாட்டுதலின்படி வாழ்ந்து காட்டுவதே, நாம் அவர்களுக்கு செய்யும் நன்றிக்கடனாகும்... வாழ்க தேசியம்

முத்தரையர் சுதந்திர போராட்ட தியாகி VKA ஆதினமிளகி அம்பலம்

Image
பெயர் : VKA ஆதினமிளகி அம்பலம் ஊர் : மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் சருகுவலையப்பட்டி தேசப்பணிகள் : 🟠1943 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டதால் மூன்று வருடம் கர்நாடக மாநில பெல்லாரி சிறை தண்டனை பெற்றவர். 🟠மேலூரின் மற்றொரு தியாகி கக்கனின் நெருங்கிய நண்பராவர்.அவரோடு இணைந்து பல சுதந்திர போராட்டங்களை முன்னெடுத்தவர். 🟠இவரால் சருகுவலையப்பட்டி கிராமத்திற்கு பள்ளிக்கூடம்,அஞ்சலகம் கொண்டு வரப்பட்டது. 🟠விவசாய சங்க தலைவராக பணியாற்றினார். 🟠ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சட்ட மற்றும் வழக்கு பிரச்சினைகளுக்கு பேருதவி புரிந்தார்.

ரணசிங்க முத்தரையன்

Image
இன்று கந்தர்வகோட்டை அருகில் உள்ள நொடியூர் கிராமத்திற்கு ஒரு வேலையாக சென்றிருந்த போது அங்கே மிகப்பழமையான சிவாலயம் ஒன்று இருப்பதை காண நேர்ந்தது, பராமரிப்பே இல்லாமல் இருந்த அந்த சிவாலயத்தை காணும் போதே மனம் மிகவும் வேதனையடைந்தது, நம்முடைய மூதாதையர்கள் எத்தனை சிரமப்பட்டு இதுபோன்ற காலத்தால் அழியாத காவியங்களை நமக்காக செய்து வைத்திருந்தார்கள், நம்மால் அதை பாதுகாக்கக்கூட முடியாமல் போனது வேதனையின் உச்சம்... இந்த ஊரில் கிடைத்த மருதன் ஏரிக்கு குமிழி அமைத்த ரணசிங்க முத்தரையன் கல்வெட்டே இப்பகுதியில் கிடைத்த காலத்தால் முந்திய முதல் கல்வெட்டாகும் அதன் காலம் சுமார் 1100 ஆண்டுகள் பழமையானது... நம்மால் இனி புதுமையாக எதையும் நம்முடைய முன்னோர்களைப்போல வலிமையாக படைத்துவிட முடியாது, ஆகையால் அவர்கள் படைத்து நமக்களித்த பொக்கிஷங்களையாவது பாதுகாக்க முயல்வோம்...