சுதந்திர போராட்ட தியாகி, பாதர்பேட்டை முத்தையா முத்தரையர் Ex.MLA


#_தியாகி_முத்தையா 
#_முத்தரையர்_Ex_MLA…
(பிறந்தநாள் விழா இன்று...)

சுதந்திர போராட்ட தியாகியான இவர் காமராஜரின் பொற்கால ஆட்சியில் இரண்டுமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்...

மேலும் சேலத்தில் இருந்து துறையூர் பகுதிக்கு மின்சாரம் கிடைக்கச் செய்தவர் இவரே ஆவார். இன்றைக்கு பல ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெற பெரிதும் உதவியது இவரின் சீரிய அரசியல் பணி என்றால் அது மிகையாகாது...

மட்டுமின்றி, தன்னுடைய பெயரிலேயே முத்தையா பாளையம் என்ற ஊரையும் உருவாக்கி, தன்னுடைய நிலங்களையெல்லாம் ஏழை எளியர்க்கு தானமாக கொடுத்தவர் தியாகி.முத்தையா முத்தரையர் ஆவார்...

திருச்சி செவத்திலிங்கம் முத்தரையர் பள்ளியின் மேலாளர் அய்யா.செவத்திலிங்கம் முத்தரையர் தலைமையில், அப்பள்ளியின் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது...

அதுபோக, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி பங்கீட்டு தொகையில் அனேக நலத்திட்டங்களை கொண்டுவந்தவரும் இவரே ஆவார்...

சான்றோரின் புகழை
சொல்ல வார்த்தைகள் ஏது..??

அவர்களின் வழிகாட்டுதலின்படி வாழ்ந்து காட்டுவதே, நாம் அவர்களுக்கு செய்யும் நன்றிக்கடனாகும்...

வாழ்க தேசியம்...
வளர்க ஆதி அரையர் இனம்...

இவன்;
சித்தன் சிவமாரி

தகவல் உதவி...
துறையூர் மாஸ் மகேந்திரன்

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்