பாண்டியர்களின் முன்னோர்கள் பரவர்கள்
🎏#பாண்டியர்'களின் முன்னோரான பரவர்கள்: உலகப்புகழ் பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளரும், வரலாற்றாசிரியருமான "ஹென்றி ஹெராஸ்" சிந்து சமவெளியில் கிடைத்த கல்வெட்டுகளை ஆராய்ந்து தமது நூலில் கூறியதாவது.... "சிந்து சமவெளியில் கிடைத்த கல்வெட்டுகளில் #சந்திரகுல பரவர்கள் அங்கு நாடு, நகரங்கள் அமைத்து வாழ்ந்ததையும், அவர்களின் அரசர்கள் #மீனவன் என்ற பட்டமும், #இரட்டைமீன் சின்னத்தை தங்களது கொடியிலும் கொண்டிருந்ததை பற்றி கூறுகிறது" என்று பதிவு செய்கிறார். மேலும் "ஹென்றி ஹெராஸ்" கூறுகையில்.... இதேபோல தென்னகத்திலும் "மீனவன்" என்ற ஒரு அரசமரபு இருக்கிறார்கள், இவர்கள் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் ஆவர். இவர்களுடைய இலச்சினையாகவும் இரட்டைமீன் சின்னமே உள்ளது. பாண்டியர்கள் தென்னகத்தில் கட்டிய கோவில்கள், அவர்கள் வெளியிட்ட காசுகள், இதுபோக சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள அதிவீரராம பாண்டியரின் புதுக்கோட்டை செப்பேடுகள் மற்றும் இலங்கையின் திருகோணமலை நகரில் "ஃப்ரடெரிக்" கோட்டையின் வாயில் மீதும் சரி, இரட்டைமீன் சின்னமே பாண்டியர்களின் இலச்சி