Posts

Showing posts from May, 2023

பொன்விளைந்தப்பட்டி குவாவன் கல்வெட்டு:

Image
பொன்விளைந்தப்பட்டி குவாவன் கல்வெட்டு: தஞ்சை மாவட்டம் பொன்விளைந்தப்பட்டி குளத்தில் ஒரு கல்வெட்டு கிடைத்தது. இது இரண்டாம் நந்திவர்மன் கால கல்வெட்டாகும். இதில் குவாவனது மனைவி பள்ளிச்சந்தமாய் நிலதானம் அளிக்கிறார். இவருக்கு பெரும்பிடுகு முத்தரையன் என்ற பட்டம் உண்டு. புகழ்பெற்ற இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையனான சுவரன் மாறனின் பாட்டனார் இவர்.இவருக்கு இரு மகன்கள்  1.குவாவன் மாறன் 2.குவாவன் சாத்தன் குவாவன் மாறன் தஞ்சையை சுற்றியுள்ள பகுதியிலும் குவாவன் சாத்தன் புதுக்கோட்டை பகுதியிலும் சமகாலத்தில் ஆள்கின்றனர். இக்கல்வெட்டு மொத்தம் 39 வரிகளில் வெட்டப்பட்டுள்ளது,பெரும்பான்மையான எழுத்துகள் அழிந்துள்ளதால், இக்கல்வெட்டின் முழுமையான பொருளை அறியமுடியவில்லை. நன்றி: யாஊயாகே 

எட்டுக்குடி திரு முருகன் ஆலயம்

Image
எட்டுக்குடி திரு முருகன் ஆலயம்--- எட்டுக்குடி திரு முருகன் ஆலயம். இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப் பூண்டியிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிராவட்டம் பாலத்தடியிலிருந்து வடக்கில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் காணப்படுகிறது. சிறிய கிராமம் என்றாலும், இங்கு முருகன் கோயில் பெரியதாக உள்ளது.  இத்திருக்கோயில் அமைய வரலாறு ஒன்று உள்ளது. முத்தரையன் எனும் குறுநில மன்னன் ஒருவன் எட்டிக்குடியை ஆட்சி செய்தான். அவன் தன ் ஆளுமைக்குட்பட்ட பகுதியில் அந்தணர்களையும், வேளாண் மக்களையும் குடியேற்றினான். இந்நகரிலேயே விசுவ பிராமண குலத்தைச் சேர்ந்த கலைத்திறன் கொண்ட சிறுவனும் வாழ்ந்து வந்தான். அவன் முருகப்பெருமான் மீது அளவு கடந்த பக்தி வைத்திருந்தான். அவன் திருமுருகனின் உருவம் ஒன்றை அழகுற செய்து அதனை எழுந்தருளச் செய்து வழிபட வேண்டுமென்று விருப்பினான். அதன்படி சிக்கல் கோயிலில் ஐம்பொன்னாலான சிலையொன்றை வடித்தான். அவ்வாறு நிறுவிய அவன், முருகனது மூலத் திருமேனியொன்றை செய்ய விரும்பினான். அவன் அதற்குரிய கல்லைத் தேடியலைந்து இறுதியில் எல்லா அம்சங்களும் நிறைந்து காணப்பட்ட கல்லொன்றில் சில

முத்தரையர் சிற்பம் :

Image
முத்தரையர் சிற்பம் : செந்தலை, (படம் 9 a) தஞ்சை மாவட்டம், நரசிம்மர் : இவ்வூர் சிவாலயத்தில் உள்ள நரசிம்மர், மேலிரு கரங்களில் ஆழியும் சங்கமும் பூண்டு, கீழிரு கரங்களை கால்களின் மீது அமர்த்தி அழகாக அமர்ந்திருக்கும் காட்சி ஆணவம் நிறைந்த அவுணனின் உடலை அழித்த திண்மையைத் தெளிவு பெற காட்டும் வகையில் உள்ளது. முத்தரையர்களைப் பற்றிய கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளதாலும், கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சிற்ப அமைதியுடன் விளங்குவதாலும், இச்சிற்பம் முத்தரையர் சிற்பமாக இருக்கக் கூடும். திருமால்: (படம் 9 b) மேலிரு கரங்களில் ஆழியும் சங்கும் பூண்டு கீழ் வலக் கரத்தால் அபயம் அளித்து, இடக்கரத்தைக் குரக்கம் மீது அமர்த்தி அமர்ந்த நிலையில் காணப்பெறும் திருமாலின் சிலையும் கி.பி. 8-ஆம் நூாற்றாண்டைச் சார்ந்தது. இவ்வுருவும் முத்தரையர் சிற்பமாக இருக்கக் கூடும்.

குன்றாண்டார்கோயில் குகைக்கோயில் முத்தரையர் வரலாறு

Image
முன்னுரை குன்றாண்டார்கோயில் குகைக்கோவில் தமிழகப் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்திலுள்ள குன்றாண்டார் கோயிலில் பாறையைக் குடைந்து பல்லவ மன்னர்களின் கீழ் ஆட்சி புரிந்த முத்தரையர் மன்னர்களால் கட்டமைக்கப்பட்ட குடைவரைக்கோவில் இதுவாகும். இது எட்டாம் நூற்றாண்டில் கட்டமைக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. இதன் நீட்டிக்கப்பட்ட கட்டிடப்பகுதியானது சாளுவ சோழ மன்னர்கள் மற்றும் விஜயநகர பேரரசினால் கட்டமைக்கப்பட்டுள்ளது. பிற்கால குடைவரை பிற்கால பல்லவர் மற்றும் சோழர் கலைப்பாணியில் உள்ளது. இங்கு பிற்கால சோழர்கள், பாண்டியர்கள், மற்றும் விஜயாலயப் பேரரசின் கல்வெட்டுகளைக் கொண்டிருக்கும் ஒருகற்கோயிலாக உள்ளது. குன்றாண்டார் கோயில் என்பது குன்று - ஆண்டான் கோயில் என்கிற பொருள் படும் வகையில் குன்றை ஆட்சி செய்யும் இறைவனை முன்னிறுத்தி பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதியை ஏழாம் நூற்றாண்டுத் தொடங்கி ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை பல்லவர்களின் கீழ் முத்தரையர்கள் ஆட்சி செய்துள்ளனர். இதன் பிறகு பிற்காலச் சோழர்களால் கைப்பற்றபட்டுள்ளது. வரலாறு குடைவறை கோவிலானது நந்திவர்மன் பல்லவ மல்லன் என்றழைக்கப்பட்ட இ

கோ இளங்கோ முத்தரையர் எடுப்பித்த கீரனூர் சிவன் கோயில்

Image
சோழர்_காலத்திற்கு_முன்பு...! நம்முடைய வரலாற்றினை, தொன்மையினை, முன்னோர்களின் சிறப்பினை அறிந்து கொள்ள, நாம் கையிலெடுக்க வேண்டிய மிக இன்றியமையாத கருவி #கல்வெட்டுக்கள் ஆகும். கல்வெட்டுக்களின் வாயிலாகத்தான் நாம் சான்றுகளுடன் கூடிய நமது பண்டைய வரலாற்றினை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் நமது கீரனூர் சிவன் கோவில் பல்வேறு காலக்கட்டங்களில் எழுதப்பட்ட #பன்னிரண்டு_கல்வெட்டுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த கல்வெட்டுக்கள் அனைத்தும் படியெடுக்கப்பட்டு கி.பி 1929 ம் ஆண்டிலேயே ( 91 வருடங்களுக்கு முன்னரே) புதுக்கோட்டை சமஸ்தான அரசின் ‌ஒரு அங்கமான #பிரகதாம்பாள்_அரசு_அச்சகத்தினால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது (Inscriptions (Texts) of The Pudukottai State).  ஆக நாம் புதிதாக ஒன்றும் கண்டுபித்து கூறவில்லை. 91 ஆண்டுகளுக்கு முன்பு படியெடுத்து ஆவணப்படுத்தப்பட்ட நமது சிவன் கோவில் கல்வெட்டுகளை கொண்டு நமது தொன்மையின் சிறப்புக்களை நினைவுகூர போகிறோம் அவ்வளவே..!  நமது சிவன் கோவிலின் கல்வெட்டுக்களிலே காலத்தால் மூத்தது, #முத்தரைய_மன்னனின் #பழைய_தமிழ் கல்வெட்டு ஆகும். இந்த கல்வெட்டு கோவிலில், ஈசன் சன்னதிக்கு வட

வல்லமாண்டார், வல்லத்தரசு, முத்தரையர்

Image
வல்லமாண்டார், வல்லத்தரசு, முத்தரையர்  வல்லம் என்ற ஊர் முத்தரையர்களின் தலைநகர்களுள் ஒன்றாக விளங்கியது. வல்லத்தில் இருந்து ஆட்சி செய்த முத்தரையர் "வல்லமாண்டார்" ( வல்லம்+ஆண்டார்) என அழைக்கப்பட்டனர். வல்லமாண்டார் மரபினரே "வல்லத்தரசு" (வல்லம்+ அரசு) என்று தற்போது வழங்கப்படுகின்றனர்.

இலக்கியங்களில் முத்தரையர்

Image
இலக்கியங்களில் முத்தரையர்: பெரும்பாணாற்றுப்படை 👇 பட்டினப்பாலை 👇 மதுரைக்காஞ்சி 👇 ஐங்குறுநூறு 👇 நாலடியார் 👇

கழுக்காணி முட்டம் செப்பேடு:

Image
கழுக்காணி முட்டம் செப்பேடு: விஜயாலய சோழன் கம்பவர்மனிடம் இருந்து தான் தஞ்சையை கைப்பற்றினான், முத்தரையர்களிடம் இருந்து அல்ல ஏனென்றால் விஜயாலய சோழனே முத்தரையர் வம்சத்தவன் தான்... விஜயாலய சோழன் முத்தரையர்களிடம் இருந்து தான் தஞ்சையை கைப்பற்றினான் என்பதெல்லாம் தன் சமூகத்திற்கு சாதகமாக வரலாறு எழுதும் கீழ்த்தர என்னம் கொண்டவர்களின் சுய இன்பமே தவிர ஆய்வியல் ரீதியில் எந்த சான்றுகளும் இல்லை என்பதே நிதர்சனம்...

வெங்கலநாட்டு ( கொங்கு நாடு ) பட்டக்காரரான காக்காவாடி பட்டக்காரர் வெங்கடாசல நல்லெண்ண கவுண்ட முத்துராஜா பட்டயம்

Image
வெங்கலநாட்டு ( கொங்கு நாடு ) பட்டக்காரரான காக்காவாடி பட்டக்காரர் வெங்கடாசல நல்லெண்ண கவுண்ட முத்துராஜா பட்டயம் . சாதி. : முத்துராஜா பட்டம் : கவுண்டர் குறுகுல வம்சமான ஷத்திரியர் , கண்ணப்பர் நாயனார் வழிவந்த வேட்டுவ சாதியிலே முத்துராஜாக்கள் ( முத்தரையர்கள் ) பேர் புகழ் பெற்றவர்களாய் பட்டக்காரர்களாய் ( நாட்டு தலைவனாய் ) இருந்த போது நடந்த நிகழ்வு . ஆண்டு : கி.பி 14 ஆம் நூற்றாண்டு அரசர் : பாண்டிய தேசாதிபதியான சுந்தர பாண்டியர் . சேர , சோழ , பாண்டிய நாட்டின் ராச்யாதிபதிகளான காரியஸ்தர்கள் மூன்று பேர் மக்களுக்கு பிரச்சினைகளையும் , ஆக்கிரமிப்பும் செய்துள்ளனர் . இதனை தாங்கிக்கொள்ள முடியாமல் சில பிராமண செட்டியார்கள் பாண்டிய மன்னரிடம் முறையிட்டனர். இதனை கேட்டறிந்த பாண்டிய மன்னர் நாட்டு தலைவனான நல்லண முத்துராஜா கவுண்டரிடம் ஆணையிட்டான் . மன்னன் ஆணையிட்டதால் அக்கிரமம் செய்த மூன்று பேரையும் வெற்றிகொண்டான் நல்லண முத்துராஜா. நல்லண முத்துராஜா வெற்றி பெற்றதால் பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியர் பட்டம் கொடுத்து , பல்லக்கு , சுறுட்டி , வெட்டுப்பாவடை , பட்டப்பெயர் விளங்குபடியான விருதுகளும் கொடுத்