முத்தரையர் வழிபட்ட கொற்றவை பிடாரி

*வெற்றி தருவாள்*
*கொற்றவை நல்லாள்...*
____________________________

கொற்றவை என்றால்
எதிரியின் கொட்டத்தை
அடக்குபவள் என்று பொருளாகும்...

இவள் ஐந்திணையில் பாலை நிலத்துக்குறியவளாக காணப்பட்டாலும், திருமுருகாற்றுப்படை இவளை முருகனின் தாய் என்று சொல்வதால் இவள் குறிஞ்சி நிலத்தவளாக இருந்து பின்னர் பாலை நிலத்தின் கடவுளாக வழிபட்டிருக்கலாம்...

மறவர்களின் (மறவர் என்பதை இங்கே போர் வீரர்கள் எனலாம்) போர் தெய்வமாக அறியப்படும் இவள் ஒரு பேய் என்றும் சுட்டப்படுகிறாள்...

அதாவது சொல்வழக்கில் "கொற்றவையே பேய், கொற்றவைக்கே பேய் பிடிக்குமா என்ன" என்பன போன்ற பழமொழிகள் கிராமங்களில் இன்றும் வழக்கில் உள்ளன...

*பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்:*
_____________________________________

இவரைப்பற்றி நாம் நிறைய அறிந்திருந்தாலும், தன்னுடைய வாழ்நாளில் தோல்வியே காணாமல், வெற்றியை மட்டுமே கைக்கொண்டு பெரும் பேரரசராக திகழ்ந்த இவர்...

தன்னுடைய வெற்றிகள் அனைத்திற்கும், தான் வழிபட்ட "கொற்றவை பிடாரியே" காரணம் என்று தன்னுடைய கல்வெட்டுகளில் பொறித்துள்ளார்...

இவரே தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட முதல் தமிழ் மன்னன் என்பதும் குறிப்பிடத்தக்கது...

*நேமம் அல்லது நியமம்:*
_________________________

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தோகூர் செல்லும் சாலையில் சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்தில்  இயற்கை எழில் சூழ, காவிரியின் தென்கரையில் அமைந்த அழகான சோழர்களின் ஊர் இது...

எங்கு நோக்கினும் வயல்வெளிகள், பசுமை போர்த்திய சோலைகள் என நம்மை உள்ளார ஒரு இன்ப நிலைக்கு தள்ளிவிடும் ஆற்றல் இவ்வூருக்கு உண்டு எனலாம்...

இவ்வூரின் சிவன் ஆலயத்திற்கு
தெற்கே தான் நம் கதையின் நாயகி
வசிக்கும் வயல்வெளி உள்ளது...

இவ்விடம் தற்போது வயல்வெளியாக காணப்பட்டாளும் நம்முடைய பெரும்பிடுகு முத்தரையர் காலத்தில் இது பல ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய கோட்டையாகவும், அதன் நான்கு பக்கமும் காவல் தெய்வமாக கொற்றவை அன்னையே வீற்றிருந்தாள் என்பதையும் நம்மாள் இன்றும் காண முடிகிறது...

இங்கு தான் மன்னர் அமைத்த ஆயிரத்தளியும் இருந்திருக்க வேண்டும், பின்னாளில் இயற்கை சீற்றத்தாலோ அல்லது பிற மன்னர்களின் படையெடுப்பிலோ இக்கோட்டை சிதைந்திருக்க வேண்டும்...

இவ்வளவு பலம் பொருந்திய பேரரசாக விளங்கிய, பெரும்பிடுகு முத்தரையரின் வெற்றிகளுக்கெல்லாம் முழுமுதற் காரணமாக இருந்த, நம்மை இன்றும் வழிநடத்தும் கொற்றவை பிடாரி அன்னையை தரிசிக்க, இன்று அடுத்தவர் வயலின் வரப்புகளில் பயணிக்க வேண்டிய அவலமும் இருக்கவே செய்கிறது...

ஒருவரின் குலம் செழித்தோங்கி வாழ அவர்களின் குடிதெய்வம் வலிமையோடு இருத்தல் அவசியமாகும். அவ்வாறு நமக்கு காவல் அரணாகவும், நம்மை காக்கும் குல தெய்வமாகவும் விளங்கும் கொற்றவை பிடாரி அன்னைக்கு ஆலயம்  எழுப்பி வழிபாட்டுக்கு கொண்டு வருவது நம்முடைய ஒவ்வொருவரின் தலையாய கடமை மட்டுமல்ல இது எழுதப்படாத சட்டமும் ஆகும்...

கொற்றவை பிடாரியானவள் மட்டும் வழிபாட்டுக்கு வந்துவிட்டாள், நிச்சயம் மீண்டும் ஆட்சி அதிகாரம் நமக்கு கிடைத்தே தீரும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு...

தொடர்வோம்....

என்றும் அன்புடன்...
உங்கள் ((((( *சிவமாரி* )))))

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER