முத்தரையர் குல தெய்வம்

போர்க்கள குருதி வெள்ளத்தில், தந்தையின் வியர்வை வாசத்தில், வெற்றியோடு வீர கர்வமும் மேலோங்க, கம்பீரத்தோடு தன் மனையாளை இறுக அணைத்தான் ஒரு போர்வீரன்...

கணவனின் வீர தீர பராக்கிரமங்களை கண்டு மெய்சிலிர்த்தாள் பாவை பெண்ணொருத்தி, உன் உடலும் சிலிர்த்தது, அப்போது நீ கருவில் இருந்தாய்...

கருவிலேயே போர்க்குணம்
கொண்ட நீதான் ஏனோ இப்போதெல்லாம் அடிமை
வாழ்வையே அதிகம் விரும்புறாய்...

காரணம் தேடினேன்..😳😳
இதோ கிடைத்துவிட்டது..🔥🔥

ஆம் முத்தரையா, நம் பாட்டன் வழிபட்ட போர் தெய்வமான, வெற்றியே நாளும் அருளும் கொற்றவை பிடாரி அன்னை.

பேரினமாய் தன் குழந்தைகள் பாரெங்கும் பரவி வாழ்ந்தாலும்,

அனாதை இல்லத்தில் விடப்பட்ட நாதியற்றவள் போல, தனிமையில் கேட்பாரற்று கிடக்கிறாளே.உன் குலம் காத்த உத்தமி, உன் மனமென்ன கல்லா..??

உன் அடிமை குணத்திற்கு காரணம், அவள் உன்மீது பார்வையற்று இருப்பதனால் தான் என்பதை அறிந்திடாமல் போய்விட்டோமே...

எத்தனை நூறாண்டுகள் சிற்றரசர்களாகவும், பலம் பொருந்திய பேரரசர்களாகவும் முடிசூடி நாடாண்டோம், ஆனால் இன்று நூறு ரூபாய் கொடுத்தால் கொலையும் செய்யும் கொடூரர்களாக, அடுத்தவேளை சோற்றுக்கு அல்லாடும் பரதேசிகளாக, கட்டளையிட்டால் பணிந்து நடக்கும் கைப்பாவையாக செயல்படும் நிலை நமக்கா வர வேண்டும்...

இன்றே சபதமேற்போம் முத்தரையா, அன்னைக்கோர் ஆலயம் செய்வோம், அய்யனுக்கோர் ஆலயம் செய்வோம்,

மன்னர் வம்சம் ஆலயம் அமைப்பதென்றால் செங்கள் கட்டுமான கோவிலா..?? இல்லவே இல்லை நிச்சயமாக கற்றளி கோவில் தான் அமைப்போம்...

சமுதாய தலைவர்கள் பெருமளவில் நிதி தருவதாக சொல்கிறார்கள், நாமோ இன்னும் சங்க சண்டைகளிலேயே முழு கவனம் செலுத்துகிறோம் பச்சிளம் குழந்தைகள் போலவே...

சமதமேற்போம் இந்த 2020லயே ஆலயம் அமைப்போம், வெற்றிக் கடவுளான கொற்றவை பிடாரியவள் நம்மை நிச்சயம் உயர்த்தி காட்டுவாள்...

அன்புடன் ((((( *சிவமாரி* )))))

Comments

Post a Comment

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்