Posts

Showing posts from February, 2019

மாவீரர் சிங்கவலையன்

Image
திருப்பூர் மாவட்டம் பொள்ளாச்சி  ஆனைமலை, பஞ்சாயத்து, பருத்தியூர், கிராமத்தில், சுமார் 850 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த மாவீரன் சிங்கவலையன்  300 ஏக்கர் நிலப்பரப்பில் கோட்டை கட்டி இரண்டு மனைவிகளுடன்,   வாழ்ந்து  வந்துள்ளார் தற்போது அவர் வாழ்ந்த இடம் சிதலமடைந்துள்ளது, மாவீரன் சிங்கவலையன் அவருடைய 2 மனைவிகளுடன், உள்ள சிலை இன்றளவும் பராமரிப்பன்றி இருக்கிறது, , அவர்  கட்டிய ஸ்ரீ, அருள்மிகு கருப்பராயன், கோயில், இன்றளவும், நம் முத்தரையர், சொந்தங்களால், வணங்கப்பட்டு வருகிறது,

வலையர்

Image
வலையர் என்போர் முற்காலத்தில் வலையையும், வளரி(வளைதடி) யையும் முதன் முதலில் அறிந்து முறையே கடலிலும் களத்திலும் வீசிய,வரலாற்று புகழ் உடையவர்கள் அதற்கு ஆயிரம் ஆயிரமாய் இலக்கியச் சான்றுகள் தமிழிலே உண்டு. இம்மக்கள் தமிழகத்தில்.மதுரை, தேனி,சிவகங்கை,ராமநாதபுரம் ,கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பரவி வாழும் ஒரு இனக்குழுவினராவர். இவர்கள் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்.  முன்னைதமிழருள் மூத்தவர் வலையரே தரைதனைக் கடந்து முந்நீர் அளந்தமுத் திரையரே பெருவலை கோல்வலை வரிவலை கொண்டு கலத்தினில் சென்று கடல்தனில்மீனைப் பிடித்தோர் அவரே கடும்போர்க் களத்தினில் வளரியைச் சுழற்றி பகைவனை விரட்டியப் போர்மறவரும் அவரே  அதனாலேபுகழும் பட்டினப்பாலையும் மதுரைக்காஞ்சியும் அன்னோரை பின்னாளில் ஐங்குறுநூறும் அழகாய்ச்சொன்னது. சங்கஇலக்கியங்களில் வலையர் தொகு ”வலைவர்”,”வலைஞர்” இவையாவும் வலையர் என்ற சொல்வழக்கின் செய்யுள் வடிவம் என்பதை நம் அறிவோம்.அதுபோல வலையர் என்பதை “வலைஞர்”,”வலைவர்” என்றே செய்யுள் வழக்கில் இலக்கியங்கள் குறிப்பிடும். பெரும்பாணாற்றுப்படை என்ற தொகை நூலிலிருந்து “கோடை நீடின

மார்பிடுகு பெருங்கிணறு:-

Image
திருவெள்ளறை : மார்பிடுகு பெருங்கிணறு: திருச்சியில் இருந்து 20 கி.மி. தொலைவில், துறையூர் செல்லும் வழித்தடத்தில், மண்ணச்சநல்லூருக்கு அருகில் அமைந்துள்ளது திருவெள்ளறை. இங்கு அருள்மிகு புண்டரீகாஷ பெருமாள் திருக்கோவில் உள்ளது. தாயார் பங்கய செல்வி என்னும் திருநாமம் கொண்டு அருள்கிறார். இத்திருத்தலம் திருவரங்கத்திற்கும் முற்பட்டதாதலால், இது 'ஆதி திருவரங்கம்' என்றும் அழைக்கப்படுகிறது. வெண்பாறைகளால் அமைந்த கோவில் எனப் பொருள்படும் வகையில் 'திருவெள்ளறை' என்று அழைக்கப்படுகிறது. மிகவும் அழகிய கட்டிடக்கலை அமைப்பினைக் கொண்டது இத்திருத்தலம். உயரமான மதிலையும், குடைவரை அமைப்புகளையும், பல்வேறு அழகிய சிற்பங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது திருவெள்ளறை திருத்தலம். இத்திருத்தலத்தில் ஒரு முக்கியமான கல்வெட்டு உள்ளது. பட்டினப்பாலை பாடிய உருத்திரங்கண்ணனாருக்கு , கரிகால சோழர் பதினாறு நூறாயிரம் பொன்னை ஒரு பதினாறு கால் மண்டபத்தில் வைத்து, அம்மண்டபத்தோடு பரிசளித்தார். பிற்காலத்தில் சோழர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, சோழ தேசத்தையே சூறையாடி, தரைமட்டமாக்கி தஞ்சையில் க

தமிழக வரலாற்றில் முத்தரையர்கள், சோழர்கள்...

Image
கிபி6ம் நூற்றாண்டு தொடங்கி 9ம் நூற்றாண்டு இறுதிவரை தஞ்சையை மையமாக கொண்டு முத்தரையர்கள் ஆண்டுவந்தார்கள்....... முத்தரையர் பேரரசர்கள் சேரர் மற்றும் பாண்டியருடன் போரிட்டுள்ளார்கள்,அவற்றில்வெற்றியும் பெற்றுள்ளார்கள்.....இது முத்தரையர்களின் கல்வெட்டுகளில் நாம் அறிந்துள்ளோம் அல்லவா??????ஆம்....... கி.பி 10ம் நூற்றாண்டுக்கு பிறகு தஞ்சையை மையமாக கொண்டு சோழர்கள் ஆட்சி புரிந்தார்கள்....... சோழர்கள் கலை,கோவில் என அனைத்தையும் வளர்த்தார்கள்....அவர்களின் கல்வெட்டுகளில் தங்கள் நாட்டின் சிறப்பை தெளிவாக செதுக்கி வைத்துள்ளார்கள்....எந்த மன்னரை வென்றோம்,யாரிடம் போரிட்டோம் என அனைத்தையும் செதுக்கி வைத்துள்ளார்கள்....இது அனைவரும் அறிந்த ஒன்றே............அப்படி இருக்க அதில் ஒன்றிலாவது முத்தரையர் மன்னர்களை ஒருவரையாவது வென்றதாக கல்வெட்டு இருக்கனும்மா இல்லையா???? யோசிக்க வேண்டிய உண்மை வரலாறு???? முத்தரையர்கள் சோழரை வென்றதாகவும்,அல்லது சோழர்கள் முத்தரையர்களை வென்றதாகவும் ஒரு கல்வெட்டுகளும் கிடையாது........... ஆனால் தமிழ்நாடு சார்பில் தொல்லியல்துறை கூறுவது ""தஞ்சையை முத்

முத்தரையர் கல்வெட்டு 4

Image
முத்தரையர் கல்வெட்டு:- புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா மலையடிப்பட்டியில் இரண்டு குடைவரைக் கோயில்களும், அவற்றிற்குப் பின்னுள்ள குன்றின் ஒற்றைப் பாறையில் சமணக் கோட்டோவியங்களும் உள்ளன. குடைவரைகளில்  ஒன்று ஒளிபதி விஷ்ணு க்ரஹம் எனும் வைணவத்தலம் ஆகும். மற்றொன்று  வாகீஸ்வரர் என்ற சைவத்தலமாகும். இச்சைவத்தலமான வாகீஸ்வரர் கோவிலானது குவாவஞ் சாத்தனேன் என்ற முத்தரையரால் குடையப்பட்டது. முத்தரைய மன்னர்கள் எழுப்பிய சில கோவில்களில் இதுவும் ஒன்று. இச்செய்தியை உரைக்கும் கல்வெட்டானது இக்கோவிலிலுள்ள தூணில்  பொறிக்கப்பட்டுள்ளது. அது தரும் செய்தியிது, 1ஸ்வதிஸ்ரீ கோவிஜய நந்திபர்மருக்கு ஆண்டு பதி 2.னாறாவது விடேல்விடுகு முத்தரையனாகிய 3.குவாவஞ் சாத்தனேன் திருவாலத்தூர் மலை 4.தளியாக குடைந்து............ய்து 5.இத்தளியை........... 6...........கீழ் செய்ங்களி நாட்டு 7........ நாட்டார்க்கு செய்த.... சுமார் ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் பழமையான கோவிலிது.

முத்தரையர் கல்வெட்டு 3

Image
முத்தரையர் கல்வெட்டு:- முத்தரசர் என்ற சொல்லினை முதன்முதலாக பெங்களூர், கோலார்,தலைக்காடு பகுதிகளில் ஆண்ட கங்கர்களின் செப்பேட்டிலே காண்கிறோம். இவர்கள் கொங்கனி கங்கர் என அழைக்கபடுகின்றனர். பொயு 550-600 ன் இடைப்பகுதியில் ஆண்ட துர்விநீதன் என்பவர், முதல்பகுதியை சமஸ்கிருதத்திலும் மறுபகுதியை பழைய கன்னடத்திலும் (பழைய கன்னடம் என்பது பெரும்பாலும் தமிழிலேதான் இருக்கும்) கொண்ட இருமொழிச் செப்பேடு ஒன்றை வெளியிட்டுள்ளார். அச்செப்பேட்டின்  சமஸ்கிருத பகுதியில் அவர் தன்னை "ஸ்ரீமத் கொங்கனி விருத்தராஜேன துர்விநீத நாமதேயன்" எனவும், அதே பகுதியை பழைய கன்னடத்தில் "ஸ்ரீ கொங்கனி முத்தரசரு" எனவும் குறிப்பிடுகிறார். பொயு 7ம் நூற்றாண்டில் ஆண்ட முதலாம்சிவமாறன் என்ற கங்க மன்னனும் இவ்வாறே முத்தரசர் என்று தன்னை அழைக்கிறார். சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படும் வேளிர்களில் கங்கரும் உள்ளனர். அகநானூறில் உள்ள ஒரு பாடலில் "நன்னன் ஏற்றை நறும்பூண் அந்தி துன்னரும் கடுந்திறள் கங்கர் கட்டி"(அகம்.44 ) என சிறப்பித்துக் குறிப்பிடபடுகின்றனர். இதில் குறிப்பிடப்படும் நன்னன் என்ற கங்கர், சோழன் ஒருவரோட

முத்தரையர் கல்வெட்டு 2

Image
முத்தரையர் கல்வெட்டு:- தஞ்சை மாவட்டம் திருகாட்டுப்பள்ளியிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் அந்நாளில் சந்திரலேகை சதுர்வேதிமங்கலம் என்றழைக்கப்பட்ட செந்தலை என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. இங்குள்ள கோவிலில் முத்தரையர், முற்காலச்சோழர் மற்றும் பாண்டியர் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. நாம் இங்கே முத்தரையர் கல்வெட்டுகளின் செய்திகளைக் காண்போம். கோவில் குறித்து மற்றொரு பகுதியில் விரிவாகக் காண்போம். கோவிலின் முன்மண்டபத்திலுள்ள தூண்களில் நான்கு தூண்கள் இக்கோவிலுக்குரியவை அல்ல. அவை  கல்லணை - திருக்காட்டுப்பள்ளி இடையேயுள்ள நியமம் என்ற ஊரிலிருந்த காளாபிடாரிக் கோவிலின் தூண்களாகும். முத்தரைய மன்னன் சுவரன்மாறன் என்னும் பெரும்பிடுகு முத்தரையன் ஆயிரத்தளி எனப்படும் நியமத்திலே காளாபிடாரிக்கு கோயிலொன்று எடுப்பித்தான்.  இன்று கன்னிமார் கோவிலென்றும் பிடாரிக் கோவிலென்றும் ஊர் மக்களால் வழிபடப்படும் வயல்களுக்கிடையே உள்ள சிறிய மேடு தான் அந்நாளில் காளாபிடாரி கோவிலாக இருந்திருக்க வேண்டுமென்று அறிஞர்கள் கருதுகின்றனர். அன்று இங்கிருந்த கோவிலின் தூண்களைத்தான் இன்று செந்தலை சிவன் கோவில் முன்மண்டபத்திலே காண்கிறோம். இத்த

முத்தரையர் கல்வெட்டு 1

Image
மற்றும் ஒரு  முத்தரையர் கலைச்சின்னம்... #புதுக்கோட்டைகுடைவரைகள் புதுக்கோட்டை -பொன்னமராவதி சாலையில் உள்ள வையாபுரி என்ற ஊரினை தாண்டி சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஊர் பூவாலைக்குடி, இங்குள்ள ஏரியினை கடந்துதான் இக்கோவிலுக்கு செல்ல வேண்டும், முறையான பாதையில்லை. மழைகாலத்தில் செல்வது சிரமம்தான். காரையூர் விளக்கு வழியாகவும் இவ்வூரினை அடையலாம். கோவிலின் அமைப்பு: இக்குடைவரை கருவறை, கருவறை முன்சுவர், முகமண்டபம், பெருமண்டபம், முன்பண்டபம் என்ற கூராய் கட்டப்பட்டுள்ளது. மேலும் குடைவரையின் பக்கவாட்டில் சுமார் 3 அடி அகலமும், 2 அடி உயரம் உடைய விநாயகர் சிலையும் அகழப்பட்டுள்ளது. இவரை பூமிப்பிள்ளையார் என அழைக்கின்றனர்.  பெருமண்டபத்தில் அம்மன்கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் குடைவரையிக்கு வெளிநீட்சியாய் உள்ளது.அம்மன் சுந்தரவல்லி என அழைக்கப்படுகிறார். மேலும், பைரவர், சண்டேசர், ஆறுமுகருக்கு தனித்தனியாய்  சன்னதி எழுப்பப்பட்டுள்ளது. குடைவரை அமைப்பு: லிங்கம் தாய்ப்பாறையில் குடையப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் உள்ள அனைத்து குடைவரையிலும் லிங்கத்திருமேனிகள் தாய்ப்பாறையில் அமைந்த

முத்தரையரே எங்கள் முதற்கடவுள்...

Image