Posts

Showing posts from February, 2026

முத்தரையர் பெயர்களின் ஒப்பீட்டில் வெளிப்படும் அரசிலி கோயில் கல்வெட்டு பிழை

Image
கி.பி. 12 ம் நூற்றாண்டில் அரசிலி ஆளுடையார் கோயிலில் கல்வெட்டை படியெடுத்தவர்கள் "நாந" என்பதனை "காக" என்று வாசித்துள்ளனர். "வலையன் கடியாறநாந வாணராய முத்தரையன்" என்பதனை "வலையன் கடியாரானுகாக வாணாராய முத்தரையன் வைத்த நொந்தா விளக்கு" என்று கூறி வலையனின் உறவினர் வாணராய முத்தரையன் என்று விளக்கம் கொடுத்துள்ளனர். சமகாலத்தில் மற்ற பெயர்களை நோக்கும்போது  1, இவ்வூர் வலையரில் சூற்றிச் சேந்தனான பெரிய நாட்டு முத்தரையன்  2, வலையன் #கடியாறநாந வாணராய முத்தரையன் 3, அரையன் மஹிமாலயனான பராந்தக முத்தரையன் போன்ற பெயர்கள் மூலம் அப்பிழையை அறிய முடிகிறது. S.  ஜெகன் தஞ்சை

வலையர் படைப்பற்று

Image
வலையர் படைப்பற்று "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றி மூத்த குடி" என்பது தமிழரின் மிக நீண்ட வரலாற்றையும், தொன்மையையும் உணர்த்தும் புறப்பொருள் வெண்பாமாலை வரிகள் (35-வது பாடல்) ஆகும். இந்தப் பாடலுக்கு ஏற்ப தமிழர் நிலத்தின் #பூர்வக்குடியாகவும், #மறக்குடியினராகவும், #நிலவுடைமை சமூகமாகவும் வாழ்ந்தவர்கள் #வலையர்கள் என்பது நாம் அறிவோம்.  இந்த செந்தமிழ் நாட்டில் பிரிக்கப்பட்ட 12 பகுதிகளில் ஒன்றான #பன்றி_நாடு என்று அழைக்கப்பட்ட இன்றைய #புதுக்கோட்டை  #கானாடு, #கோனாட்டில் பூர்விக #மறக்குடியினர் வாழ்ந்த பகுதியில் #வலையர்_படைப்பற்று ஊரான #மேலைக்குருந்தண்பிறையில் வாழ்ந்த #வலையர் #மூவன்காடப்பிள்ளை என்பவர் #திருமயம் வட்டத்திலுள்ள பிரமதேயமான #பேரையூரில் #பாடிக்காவல் முறையை ஏற்ற14-ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு 😍  மேலும் இந்த பகுதியில் வலையர் குடியினர் #போர்ப்படை தொழில் செய்தும் #காவல் தொழில் செய்தும் வாழ்ந்துளனர்

திருவானைக்கோயில் முத்தரையர் காவலும் காவற்காணியும்

Image
சோழ நாடு மூன்றாம் ராஜராஜ சோழனின் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள திருவானைக்கோயிலில் கிடைத்த கல்வெட்டு அரிய வரலாற்று செய்தியை தருகிறது. கிபி 1236 ஆம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு ராஜராஜ வளநாட்டு பாச்சில் கூற்றத்தில் கீழ்பாலாற்றை சேர்ந்த காரிச்சாத்தன் துறையில் காணி உரிமை பெற்றிருந்த தாமணித்தேவன் மற்றும் அவரது சகோதரர்கள் திருவானைக் கோயிலுக்கு நிலவிற்பனை செய்த தகவலை தருகிறது.  இவர்கள் நில விற்பனை செய்ததற்கு ஒப்புதலாக திருவானைக் கோயிலின் சார்பாக பெருமான் அழகனான மணவாள முத்தரையன் என்பவர் கிழிப்புணைத் தீட்டாக நாலாயிரம் காசுகளைப் பெற்று நிலத்தினை விற்றவர்களுக்கு அளித்துள்ளார்.  திருப்பெருந்துறை கோயிலின் மிக பொறுப்பில் விளங்கிய மணவாள முத்தரையன் ராஜேந்திர சோழ மங்கலத்தின் காவல் பொறுப்பினை  ஏற்று அதற்காக சோழ அரசர்களால் காவல் காணி எனப்படும் சிறப்பு உரிமைகள் அளிக்கப்பட்டு சிறப்புற்று இருந்ததை கல்வெட்டு உணர்த்துகிறது. பெருமான் அழகனான மணவாள முத்தரையனை  " ராஜேந்திர சோழ மங்கலத்து காணியுடைய  கள்ளரில் பெருமான் அழகனான மணவாள முத்தரையன் "...

முத்தரையரும் சோழரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்

Image
வரகுணா பெருமானார் #சோழனின்_சகோதரி என்று சுந்தர சோழரின் அன்பில் ஆவணமும், வரகுணாட்டி பெருமானார் #முத்தரையர்_மகள் என்று மற்றொரு கல்வெட்டும் தெரிவிக்கிறது. முத்தரையரும் சோழரும் வேறு என்ற கருத்தில் மூழ்கியிருந்த வரலாராசிரியர்கள் இருவரும் வேறாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். முத்தரையரும் சோழரும் ஒரே குடும்பம் என்பது வரகுணாட்டி மூலம் மேலும் உறுதி செய்யப்படுகிறது. S. ஜெகன்

அரையன் மஹிமாலயனான பராந்தக முத்தரையன்” : ஒரு கல்வெட்டு சொல்லும் சோழ வம்ச ரகசியம்

Image
உத்தம சோழரின் தந்தையான கண்டராதித்த சோழரின் 5ம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 955) கொடும்பாளூர் அரசரான "மஹிமாலய இருக்குவேள் பராந்தக வீரசோழன்" பழுவேட்டரையரின் திருப்பழுவூர் ஆலயத்துக்கு நிலம் நிவந்தமாக கொடுத்துள்ளார். பழுவேட்டரையர் மற்றும் இருக்குவேளார் ஆகியோர் சோழனுடன் மன உறவில் இருந்தவர்கள் ஆவர். அதே போல் கிபி 972 ம் ஆண்டு கண்டராதித்தரின் மகனான உத்தம சோழர் 3 ம் ஆட்சி ஆண்டில் பழுவேட்டரையரின் மகளான அரசியார் பஞ்சவன் மாதேவியார் தனது கணவரான அருண்மொழிவர்மனின் பெயரை உடையார்குடி கல்வெட்டில் "அரையன் மஹிமாலயனான பராந்தக முத்தரையன்" என்று குறிப்பிட்டுள்ளார். அப்பெயரானது, அருண்மொழிவர்மனின் இருக்குவேளிர் உறவையும் பராந்தக சோழனின் வாரிசு என்பதனை எடுத்துரைப்பதாக உள்ளது. மேலும், மஹிமாலய இருக்குவேளிரின் பழுவூர் கல்வெட்டு உடையார்குடி கல்வெட்டை வெளியிட்டது பழுவேட்டரையர் மகளும் இராஜராஜனின் மனைவியுமான அரசியார் பஞ்சவன் மாதேவி என்பதனை மேலும் உறுதி படுத்துகிறது. S. ஜெகன்

சுருதிமான் நக்கன் சந்திரனான இராஜமல்ல முத்தரையன்

Image
இராஜேந்திர சோழனின் படைகளில்  ஓர் படைப்பிரிவுக்கு  படைவீரர்களாக இருந்த #சுருதிமான்களுக்கு #தலைமை வகித்த #இராஜமல்ல_முத்தரையன்  இந்தக் கல்வெட்டு இராசேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தது. "கோப்பரகேசரி பன்மரான உடையார் ஸ்ரீ இராஜேந்திர சோழதேவர்க்கு யாண்டு ங-ஆவது" என்று தொடங்குவதன் மூலம், இது அவரது 3-ஆம் ஆட்சி ஆண்டு (சுமார் கி.பி. 1015) கல்வெட்டு  "வடகரை விழாநாட்டு" - அதாவது காவிரி ஆற்றின் வடகரையில் இருந்த விழாநாடு என்னும் நாட்டுப் பிரிவில் உள்ள ஒரு ஊரைப் பற்றி பேசுகிறது.  "சுருதிமான் நக்கன் சந்திரனான இராஜமல்ல முத்தரையன்"  #சுருதிமான் என்பது இராஜேந்திர சோழரிடம் இருந்த ஓர் படைவீரர் பிரிவை குறிக்கிறது.  #இராஜமல்ல_முத்தரையன் இவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு  சோழ அரசின் படைத்தளபதியாகவோ இருந்திருக்க வேண்டும். சுருதிமான்கள் இருந்த ஒரு  படைபிரிவுக்கு முத்தரையர் தலைமை தாங்கினார்கள் என்பதை இதன் மூலம் அறியலாம். *கடகத்தில் என்பது படைமுகாமை குறிப்பது. அல்லது படை தலைமை இடமாக இருக்கலாம். பதிவு: 3lion stodio's

"அரையன் மஹிமாலயனான பராந்தக முத்தரையன்" கல்வெட்டு

Image
இந்த கல்வெட்டு படியெடுக்கப்பட்டு கிபி 1920 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அக்கல்வெட்டில் உள்ளது அருண்மொழிவர்மன் - அரசியார் பஞ்சவன் மாதேவியார் என்பது ஜனவரி 24, 2026 ம் ஆண்டுதான் கண்டறியப்பட்டது. 106 ஆண்டுகள் எத்தனையோ பேரின் ஆய்வுக்கு உட்பட்டாலும் அது அருண்மொழிவர்மன் என்பது எவர் மனதிலும்  உதிக்கவில்லை. இதற்கு முன்னர் வரலாற்று புதினம் எழுதிய #பாலகுமாரன் அவர்கள் முதலில் கண்டறிந்தாலும் அதனை வெளிப்படையாக தெரிவிக்காமல், அருண்மொழி வர்மன் முத்தரையர் குலத்தில் உதித்தவன் என்று பஞ்சவன் மாதேவியார் மற்றும் அவர் தந்தை பழுவேட்டரையர் அழைப்பது போல் வரிகளை உருவாக்கியிருந்தார். அதற்கு ராஜராஜனை ஏன் முத்தரையர் என்று சொல்லுகிறீர்கள் என்று பலர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். விஜயாலய சோழனே முத்தரையர் மகன் என்பதனை ஆதாரத்துடன் நிரூபித்த பிறகு தற்சமயம் இராஜராஜ சோழன் மன்னராவதற்கு 12 ஆண்டுகள் முன்னர் தமது 25ம் வயதில் இளவரசராக இருந்த சமயம் அவருடைய அரசியார் பஞ்சவன் மாதேவியார் தன் கணவர் பெயர் "அரையன் மஹிமாலயனான பராந்தக முத்தரையன்" என்று கல்வெட்டாக உடையார்குடி அனந்தீவரர் ஆலயத்தில் தெரிவித்துள்ளார் என்ப...