பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகை 7,21,38,958 ஆகும். தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்தவர்களாவர். தமிழகத்தில் உள்ள சிறுபான்மையின முஸ்லீம்களில் சுமார் 95 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும், சிறுபான்மையின கிறித்தவர்களில் சுமார் 80 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர். பிற்படுத்தப்பட்டேர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்புகளைச் சார்ந்தவர்கள் சமூக, பொருளாதார மற்றும் கல்வி ஆகிய அனைத்துத் துறைகளிலும் சமுதாயத்தின் இதர பிரிவினர்களுக்கு இணையாக முன்னேற்றம் அடையும் பொருட்டு இத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீடானது கல்வி மற்றும் மாநில அரசுத்துறையில் வேலைவாய்ப்பு பெற்று பொர