சாத்தன் பழியிலி இளங்கோ முத்தரையரின் அண்ணன் சாத்தன் பூதி இளங்கோ அதியரையன்
முத்துராஜா (முத்தரையன்) என்ற பட்டம் மன்னனின் இளைய மகனுக்கு உரிய பட்டம் ஆகும். மேலும், முத்தரையன் என்பது முத்துராஜா என்ற பட்டத்தின் தமிழ் வடிவம். (ஆதாரம்: எபி இண்டிகா பகுதி 27) சாத்தன் பழியிலி இளங்கோ முத்தரையரின் அண்ணன் சாத்தன் பூதி இளங்கோ அதியரையன் ஆவார் . இளங்கோ முத்தரையரிடமிருந்து எவ்வித எதிர்ப்பும் இன்றி விஜயாலய சோழன் தஞ்சையை கைப்பற்றி நிசும்பசூதனி ஆலயத்தை தஞ்சையில் எடுப்பித்தான். நார்த்தா மலைமேல் பழியிலீஸ்வரம் கோயிலை தம்பி சாத்தன் பழியிலி இளங்கோ முத்தரையன் குடைவித்துள்ளான். அருகே, விஜயாலய சோழீஸ்வரம் கோயிலை அண்ணன் கட்டியுள்ளான். இளங்கோ முத்தரையரிடமிருந்து தஞ்சையை எவ்வித எதிர்ப்பும் இன்றி கைப்பற்றிய விஜயாலய சோழன் யார்? குவாவன் சாத்தன் முத்தரையரின் மூத்தமகனான சாத்தன் பூதி இளங்கோ அதியரையன் தான் பிற்கால சோழ சாம்ராஜ்யத்தை நிறுவியவர் ஆவார். தஞ்சையை எவ்வித எதிர்ப்பும் இன்றி இளைய சகோதரர் இளங்கோ முத்தரையரிடமிருந்து கைப்பற்றி, பிறகு நிசும்பசூதனிக்கு ஆலயம் எடுப்பித்தவரும் அவரே! -ஜெகன்