சமரசமில்லா முத்தரையர் குல சேர்வைக்காரர்கள்


சமரசமில்லா முத்தரையர் குல சேர்வைக்காரர்கள் 

மதுரை மாநகர் முனுசுபாளையம் பகுதியில் குறிப்பிடும்படியான அளவு முத்தரையர் சமுதாயத்தைச் சார்ந்த மக்கள் வசிக்கின்றனர். இந்த முனுசுபாளையம் பகுதி முத்தரையர் மக்களுக்கு பிரதான பட்டம் சேர்வை ஆகும். இவர்கள் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்ட பகுதியிலிருந்து குறிப்பாக தானமநாடு என்று அழைக்கப்படும் பகுதியில் இருந்து வந்ததாக கருதுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் கடந்த காலங்களில் தானம நாட்டில் இருந்து தென் மாவட்ட பகுதியில் குடியேறிய மற்ற தானம நாட்டு முத்தரையர் மக்களுடன் தான் அதிக மனஉறவு வைத்திருந்தனர்.

மிக முக்கியமாக இந்த முனுசுபாளையம் முத்தரையர் சமூக மக்கள் சுதந்திரத்திற்கு முற்பட்ட காலகட்டத்தில் இருந்தே  'இந்து சேர்வை' என்ற பெயரிலே சாதி சான்றிதழ் உட்பட அனைத்து விதமான அரசு சான்றிதழ்களையும் பெற்று வந்துள்ளனர். ஆனால் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு காலம் காலமாக இந்து சேர்வை என்ற பெயரில் கொடுக்கப்பட்ட சாதி சான்றிதழ் இனி அந்தப் பெயரில் வழங்கப்படமாட்டாது என்று அப்போதைய அரசு அலுவலர்கள் கூறியுள்ளனர். அப்படி என்றால் எங்களுக்கு வேறு எந்த பெயரில் சாதி சான்றிதழ் கொடுப்பீர்கள் என்று முனுசுபாளையம் பகுதி முத்தரையர்கள் அப்போதைய அரசு அலுவலர்களிடம் கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அந்த அரசு அலுவலர்கள் வேண்டுமென்றால் உங்களுக்கு இந்து அகமுடையார் என்ற பெயரில் சாதி சான்றிதழ் வழங்க தயாராக உள்ளோம் என்று கூறியுள்ளனர். இதனை முற்றிலும் மறுத்த மற்றும் எதிர்த்த முனுசுபாளையம் பகுதி முத்தரையர் குல சேர்வைக்காரர்கள் அந்த அரசு அலுவலர்களை எதிர்த்து வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி துறையின் மேல் அதிகாரிகளிடம் மிக முக்கியமாக மதுரை மாவட்ட ஆட்சியரிடமும் எங்களுக்கு இந்து சேர்வை என்ற பெயரிலேயே சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளனர். மேலும் முன்பு எங்களுக்கு இந்து சேர்வை என்ற பெயரில் கொடுக்கப்பட்ட சாதி சான்றிதழ் கொடுக்க முடியவில்லை என்றால் அதற்கு பதிலாக எங்களுக்கு இந்து வலையர் என்ற பெயரில் சாதி சான்றிதழ் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 

கோரிக்கைக்கு பதிலளித்த அரசு அதிகாரிகளோ இனி நாங்கள் எப்போதும் இந்து சேர்வை என்ற பெயரில் சாதி சான்றிதழ் வழங்க முடியாது அதே போல இந்து வலையர் என்ற பெயரிலும் உங்களுக்கு ஜாதி சான்றிதழ் எங்களால் வழங்க இயலாது என்று கூறியுள்ளனர். மேலும் அரசு அலுவலர்கள் உங்களிடம் இருக்கு அனைத்து விதமான ஆவணங்களிலும் உங்களை இந்து சேர்வை சாதி என்று தான் ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றீர்கள். மதுரையை பொறுத்த வரை சேர்வை என்றால் அது அகமுடையார்கள் தான் அதனால் நாங்கள் உங்களுக்கு இந்து அகமுடையார் என்ற ஜாதி சான்றிதழை தவிர வேறு எந்த பெயரிலும் உங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க இயலாது என்று கூறிவிட்டனர். 

இதனை ஏற்காத முனுசுபாளையம் பகுதி முத்தரையர் மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சட்டப் போராட்டம் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்திலும் சரி வருவாய்த்துறையும் சரி உங்களுக்கு இந்து வலையர் என்று சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் நீங்கள் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்பதற்கு ஆதாரமாக ஆவணங்களை கொடுங்கள் அந்த ஆதாரங்களின் அடிப்படையில் உங்களுக்கு நாங்கள் நிச்சயம் இந்து வலையர் என்ற பெயரில் சாதி சான்றிதழ் வழங்குகின்றோம் என்று கூறியுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் முனிசிபாளையம் பகுதியைச் சேர்ந்த முத்தரையர் சமூகம் முன்னோடிகள் அவர்களது இல்லத்தில் இருந்த அனைத்து விதமான ஆவணங்களையும் குறிப்பாக பழைய பத்திரங்களில் தங்களுக்கு ஏதேனும் ஆதாரங்கள் கிடைக்குதா என்று தேடி உள்ளனர். அப்பொழுது ஒரு குறிப்பிட்ட பத்திரத்தில் சுமார் 1947 ஆண்டை சேர்ந்த ஒரு பத்திரத்தில் 'முனியாண்டி சேர்வை மகன் வலையர் ஜாதி முத்துக்கருப்பன் சேர்வை' என்று எழுதப்பட்ட குறிப்பு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அந்த பத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பின் நாட்களில் இந்து வலையர் என்கின்ற பெயரில் சாதி சான்றிதழை முனுசுபாளையம் பகுதியைச் சேர்ந்த முத்தரையர் குல சேர்வைக்காரர்கள் அரசாங்கத்திடமிருந்து பெற்றுள்ளனர்.

இதில் குறிப்பிட்டு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த முனிசிப்பாளையம் பகுதியில் வசிக்கின்ற முத்தரையர்களுக்கு இந்து அகமுடையார் என்கின்ற பெயரில் சாதி சான்றிதழ் கிடைக்க அனைத்து விதமான வாய்ப்பு இருந்த போதிலும் அதனை முற்றிலும் மறுத்து நாங்கள் வலையர்கள் எங்கள் பட்டம் தான் சேர்வை என்று தொடர்ந்து போராடி இறுதியில் இன்று வலையர் என்கின்ற தனது உண்மையான சமுதாயப் பெயரில் சாதி சான்றிதழ் வாங்கிய இந்த முனுசுபாளையம் பகுதி முத்தரையர்கள் உண்மையிலேயே சமரசமில்லா முத்தரையர்கள் தான்.

இவன் : A.K. மகேஷ் பாண்டியர், 
முத்தரையர் படைநிலை.

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்