கொள்கை வேந்தன் எம்.ஆர்.கோவேந்தன் முன்னால் அமைச்சர்

புகழ் வணக்கம் 
---------------------------------------

புரட்சித் தலைவர் 
மக்கள் திலகம்
 பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களால் கொள்கை வேந்தன் என்று கொண்டாடப்பட்டவர்.

விடாமுயற்சியும் அதற்கான உழைப்பும் தன்னம்பிக்கையும் இருந்தால் சாதாரண மனிதனும் சக்கரவர்த்தியாக முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் .

ஏழ்மையும், வறுமையும் சாதிப்பதற்கு ஒரு தடையில்லை என்பதை எங்களுக்கு பாடமாக போதித்து விட்டு சென்றவர் .
ஊராட்சி மன்ற உறுப்பினர் ,
ஊராட்சி மன்ற தலைவர் ,
ஒன்றிய துணை பெருந்தலைவர்,
 மூன்று முறை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் 
ஏழு ஆண்டுகள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர்  .என்று ஏற்றுக் கொண்ட பணிகளை சிறப்பாக செய்து முடித்தவர் .

செல்வாக்கிலும் பதவியிலும் கோலோச்சி இருந்த காலத்தில் ,தன் சொந்த ஊரான முடச்சிக்காட்டில்  தனக்கென்று ஒரு வீடு கூட கட்டிக் கொள்ளாமல் பேராவூரணியை கட்டியெழுப்புவதிலும் பேராவூரணி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதிலும் முழு கவனம் செலுத்தியவர் .

பேராவூரணி தொகுதியில் மருத்துவமனை விரிவாக்கம் ,புதிய பேருந்து வழித்தடம், பேருந்து பணிமனை, அரசு மாணவர் விடுதிகள், புதிதாக நடுநிலைப் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள் தீயணைப்பு நிலையங்கள், என்று பல்வேறு கட்டமைப்பு பணிகளை செய்து பேராவூரணியை
வளர்ச்சியை நோக்கி அழைத்துச் சென்றவர் .

பேராவூரணியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தை அமைப்பதற்கு தடைகள் வந்தபோது அதை தகர்த்தெறிந்து காலத்தை கடந்து இன்றும் வானளாவ உயர்ந்து நிற்கிற கட்டிடத்தை கட்டி  திறந்து வைத்தவர் .அக் கட்டிடம் இன்றும் அவர் பெயர் தாங்கி நிற்கிறது .

சாதி மதம் பாராமல் பலருக்கும் அரசு வேலை பெற்றுத் தந்து பெருமிதம் அடைந்தவர்..வாழ்நாளின் இறுதி வரை கையூட்டு ஊழலை கனவிலும் என்னாமல் கரை படியாத கரத்துக்கு சொந்தக்காரர் வாழ்ந்தவர் .

பேராவூரணி அரசியலில் ,அதிகாரம் என்று கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாதவர்களுக்கு பல்வேறு பதவிகளை வழங்கி சமூக நீதியை நிலை நாட்டியவர் .

பணி செய்து கிடப்பதே என்கடன் என்று ஓடோடி உழைத்த மகன் உறங்கச் சென்ற நாள் இன்று .என் அன்புத் தாத்தா மறைந்து இன்றுடன் பத்தொன்பது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன .ஆனாலும் அனுதினமும் மக்கள் போற்றி கொண்டாடுகிற மாமனிதராக வரலாற்றில் நிலைத்து நிற்கிறார் .

மானத்தமிழ் குடியில் பிறந்து மாண்புமிகு அமைச்சராக  மக்கள்
 மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும்    எம் ஆர் கோவேந்தன் அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை இட்டு நிரப்புவதற்கு அவர் பேரப்பிள்ளைகள் நாம் சபதம் ஏற்போம் .

இருள் சூழ்ந்து கிடக்கிற பேராவூரணி மக்களின் வாழ்வில் ஒளியேற்ற ஒவ்வொருவரும் எம்.ஆர்.கோவேந்தனாக கொள்கை முழக்கம் இடுவோம் .

எங்கள் அன்பானவரே  நீங்கள் எமக்குப் போதித்த விடாமுயற்சியும், சமரசமில்லாமல் சண்டையிடும் வீரமும் எவரிடத்திலும் தலைகுனியா பேராண்மையும் ,மக்களோடு மக்களாக வாழ்ந்த மாண்பும் எங்களை வழிநடத்தும் .

உங்கள் நினைவை சுமந்து எங்களின் கனவை நோக்கி பயணிக்கிறோம் .உங்களுக்கு என்றும் மரணமில்லை .சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞனின் மனதிலும் இலட்சிய தீபமாய் எரிந்து கொண்டிருக்கிறீர்கள் .

இந்நாளில் உங்களின் ரத்த உறவு பேரன்கள் என்ற பெருமிதத்தோடும், திமிரோடும் உமக்கு எங்கள் புகழ் வணக்கத்தை செலுத்துகின்றோம் .

கோவேந்தன் ஐயா ,
நீங்கள் கோடி மனிதருக்கு நிகர் என்றால் பொய்யா .
நீங்கள் படமல்ல எங்களுக்கு பாடம் .

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்