வலையன் கடியாறனுக்காக வாணராய முத்தரையன் பெருவெம்பூர் நாட்டு அரசிலி தேவர்க்கு நொந்தா விளக்கு எரிக்கா நாற்பத்தைந்து ஆடுகள் கொடுத்த செய்தி கூறும் கல்வெட்டு.
DNT என்றால் என்ன..?? DNT தேவை ஏன்..?? சலுகைக்காகவா DNT..?? உரிமைக்காகவா DNT..?? 1.சீர்மரபினர் நலச்சங்கம் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்திவருவது எதற்காக? சமூகநீதி பேசுகின்ற தமிழகத்தில் சீர்மரபினர் மக்களுக்கு மட்டும் தொடர்ந்து அநீதியே இழைக்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு அன்னிய அரசு வழங்கிய உரிமைகளும் சலுகைகளும் கூட பறிக்கப்பட்டு விட்டன. எனவே அவர்களின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தியும், சீர்மரபினர் மக்களுக்கு 10% தனி இடஒதுக்கீடு கோரிக்கையை தீவிரமாக வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு தீவிரமான போரட்டங்களை நடத்தி வருகிறது 2, எந்தெந்த சாதி சீர்மரபினர் வகுப்பில் வருகின்றனர்? தமிழகத்தில் சீர்மரபினர் பட்டியலில் 68 சாதியினர் உள்ளனர். அதில் பிரமலைக்கள்ளர், கூத்தப்பர் கள்ளர், பெரியசூரி கள்ளர், கந்தர்வக்கோட்டை கள்ளர் என்ற நான்கு(4) கள்ளர்களும், மறவர், ஆப்பநாடு கொண்டயன் கோட்டை மறவர், செம்ப நாட்டு மறவர், மறவர் என்ற மூன்று(3) மறவர்களும், வலையர், செட்டிநாடு வலையர், வேட்டுவ கவுண்டர், ஊராளி கவுண்டர், சேர்வை, அம்பலகாரர், அம்பலக்காரர், வேட்டைக்காரன் என்ற எட்டு(8) முத்தரையர்களும், ...
வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம் ------------------------------------------------------------ வேட்டுவரின் பூர்வீகம் குறித்து அறிஞர்களிடையே பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. வேட்டுவர், பிரம்மனால் படைக்கப்பட்ட ஆதி வம்சத்தினர் என்று வேளாளர் புராணம் குறிப்பிடுகிறது. சோழன் பூர்வ பட்டயம், வேட்டுவ கவுண்டர்களைக் கொங்கு நாட்டின் ஆதிகுடிகள் என்று சுட்டுகின்றது. சில பட்டயங்களில் வேட்டுவர், முத்தரையரின் வழித்தோன்றல்கள் என்று செப்புகின்றன. வேட்டுவ கவுண்டரும் முத்தரையரும் கண்ணப்ப நாயனாரைத் தமது குல தெய்வமாகக் கொண்டு வழி படுகின்றனர். எட்கார் ஃதர்ஸ்ட்டன் (Edgar Thurston) அவர்கள் முத்தரையர், வேட்டுவர், வலையர் ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ளார். இருப்பினும் வேட்டுவரின் பூர்வீகம் குறித்து நான்கு முக்கிய கொள்கைகள் (கருத்துக்கள்) உள்ளன. அவை 1.வேட்டுவர் நாகர் இனத்தவர். 2.குரு குலத்தவர். 3.கண்ணப்ப நாயனாரின் கால்வழியினர். 4.கொங்கு நாட்டின் பூர்வீகக் குடிகள். இக்கொள்கைகளின் உண்மைத் தன்மையை இங்கே ஆய்வோம். ...
Comments
Post a Comment