Posts

Showing posts from August, 2020

முத்தரையர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்கள் தொகுப்பு

Image
மிகமுக்கியமான வரலாற்று தொகுப்பு, முத்தரையர் வரலாற்றை அறிய இந்த புத்தகங்களை தேடி படியுங்கள் நமது முத்தரைய சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் நமது வரலாறை தெளிவாக தெரிந்து வைத்துகொள்ளாதால் வந்த விளைவுகளை நாம் இன்று அறுவடை செய்து கொண்டு இருக்கின்றோம்.நமது தலைவர்கள் நம்மை நம் வரலாறை படிக்க தூண்டினார்களா என்று தெரியவில்லை...அப்படி எந்த தலைவராவது சொல்லி இருந்தால் நாம் அவர்களுக்கு வாழ்த்துக்களை இந்த அருமையான வேலைல சொல்லிக்கொள்ளலாம். நமது பதிவு பெற்ற சங்கங்களின் அலுவலகங்களில் எத்தனை சங்கங்களில் நமது இன தொடர்பான புத்தகங்களை வைத்து நூலகங்களை வைத்து இருக்கின்றார்கள். அப்படி நூல்களை வைத்து நூலகம் அமைத்து இருந்தால் நாம் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம். சரி கடந்தது கடந்தாக வைத்து கொள்வோம் இனியும் நாம் வரலாறை படித்து வரலாறாய் வாழாவிட்டால் முடிவை நாம் சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறோம் ... நம் இன சொந்தங்கள் நிறைய படிக்க வேண்டும் அதோட மட்டும் அல்லாமல் சொந்தங்களையும் படிக்க வையுங்கள் சில புத்தங்களை மட்டும் வரிசை படுத்தி இருக்கின்றோம்  முடிந்த அளவு வாங்கி படியுங்கள். பழம

ஆன்மீகத்தில் முத்தரையர்

Image
  ஆன்மீகத்தில் முத்தரையர்கள் -திருப்பதி சுவாமிகள் திருப்பதி சுவாமிகள்  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் திருப்பதி சுவாமிகள் திரு .மு.சுப்ரமணிய முத்தரையருக்கும் ,வெள்ளையம்மாளுக்கும் மகனாய் 1873 ஆம் ஆண்டு அவதரித்தார்.திருப்பதி சுவாமிகளை பெற்றதால் அரவக்குறிச்சி ,ஆன்மீக வரலாற்றில் புகழ் பெற்றது. சுவாமிகள் தொடக்கக் கல்வி முடிந்ததும் அரவக்குறிச்சி அருகில் உள்ள நல்லமாகாளிபட்டியில் உயர் கல்வியைத்  தொடர்ந்தார்.குருக்கள் பரம்பரையில் உதித்த தெய்வசிகாமணி குருக்கள் என்பார் இவரது நல்லாசிரியராக திகழ்ந்தார் .தமிழ் ,வடமொழி இலக்கியங்களைக் கற்றுத்  தேர்ந்தார். துறவு வாழ்க்கையில் நாட்டம் கொண்ட சுவாமிகள் தந்தையாரின் தோட்டத்திலுள்ள விநாயகர் கோவிலில் தியானத்தில் ஆழ்ந்திருப்பார்.தமது குருவைத் தேடிப் பல இடங்களுக்கும் சென்ற சுவாமிகள் தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் பிரம்மாஸ்ரீ சுயம்பிரகாச சிவானந்த சுவாமிகளை நேரில் கண்டு அவரது சீடரானார் அரவக்குறிச்சி கோவில் மடத்தில் தங்கி கணேசருக்கு ஆராதனை செய்துவரும் காலத்தில் தம்மை வந்தடைந்தவர்களுக்கு நல்லுபஹ்தேசம் செய்யும் வழக்கத்தை கொண்டார்.சில சமயங்களில் அண்மையிலுள்ள திருவெஞ்

கள்வர் கள்வன் - வரலாற்று ஆசிரியர்கள் பார்வையில்

Image
  கள்வர் கள்வன்; சில விளக்கங்கள் ________________________________________ ‘கள்வர் கள்வன்’ என்ற பட்டப் பெயர் பலராலும் பல விதமாகப் பொருள் காணப்பட்டது. டி.ஏ. கோபிநாதராவ் முதலான சில வரலாற்று ஆசிரியர்கள் இச்சொல்லுக்கு களப்பிரர்களின் தைலவன் என்றே பொருள் கண்டனர். அவ்வாறு பொருள் கண்டதன் விைளவாக சுவரன்மாறன் என்ற முத்தைரயர் மன்னனும் களப்பிரர் இனத்தவன் என்ற முடிவுக்கு வந்தனர். இரா. இராகைவய்யங்கார் போன்றோர் களப்பிரர்களும் முத்தைரயர்களும் வெவ்வேறு இனத்தவர் என்றே கூறினர். முத்தைரயர் என்னும் நூலில் நூலாசிரியர் கள்வர் கள்வன் என்பதற்கு கள்வர்களுக்கு கள்வன், கள்வர்களின் எதிரி என்று பொருள்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அைத மறுக்கும் வைகயில் ‘கள்வர் கள்வன்’ எனும் சொல்லை களப்பிரர்களுக்கெல்லாம் களப்பிரனாக விளங்கினான் எனப் பொருள் காணேவண்டும் என்றும், மன்னாதி மன்னன் சூராதி சூரன், வில்லாதி வில்லன் ஆகிய சொற்களுடன் இைத ஒப்பிட்டு பார்த்திடல் வேண்டுமன்றும் இராசேசகர தங்கமணி எழுதியுள்ளார். (ம. இராசேசகர தங்கமணி, பாண்டியர் வரலாறு, பக்கம்-194) இவர் எடுத்துக் கூறியுள்ள ஒப்பீட்டுச் சொற்கள் மன்னாதி

முத்தரையர் கட்டுரை-குமுதம் இதழ்

Image
  முத்தரையர் சமூகம் குமுதம் இதழில் நான் தமிழன் என்ற தொடர் (தமிழர்களின் பழமை, பெருமை, பாரம்பரியம் பற்றியது) எழுத்தாளர் திரு. இரா. மணிகண்டன் அவர்களால் எழுதப்பட்டது அதில் 30.09.2009 தேதி இட்ட இதழில் "முத்தரையர்" பற்றிய கட்டுரை. போர்! பெரும்போர்! பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனுக்கும் பாண்டிய மன்னனுக்கும் கடும்போர். ஏறத்தாழ பல்லவ மன்னன் தோற்றுப்போகும் நிலை, பல்லவ நாட்டின் பெரும் நகரங்கள், கிராமங்கள், ஆறுகள், குளங்கள் என்று ஒவ்வொன்றாக வீழ்ந்து கொண்டே வந்தன. நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே பல்லவ மன்னன், மாமன்னன் பெரும்பிடுகு முத்தரையரிடம் உதவி கேட்கிறான். நட்பு நாடி வந்தவருக்கு நம்பிக்கையுடன் பெரும்பிடுகு உறுதியளிக்கிறார் அதற்க்குப் பின் நடந்தது வரலாற்று உண்மைகள். பாண்டிய மன்னனை வென்று, சோழ மன்னனை வென்று தொடர்ந்து பல போரில் வெற்றிவாகை சூடினார் பெரும்பிடுகு முத்தரையர். சத்துருகேசரி, அபிமானதீரன், நெடுமாறன் உள்ளிட்ட 16 விருதுகள் அவர் பெற்ற வெற்றிக்காக சூட்டப்பட்டன! முத்தரையர் சமுதாயத்தை காலம் காலமாக வரலாற்றில் இடம்பெறச் செய்த சரித்திர நிகழ்ச்சி இது தமிழகத்து வரலாற்று கதாபாத்திரங்களில்

கோத்திரம் என்றால் என்ன..??

Image
  கோத்திரம் ( Gotram) கோத்திரம் என்றால் என்ன ? அகராதியில் இந்தச் சொல்லுக்கு வம்சம் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இந்த வம்சத்தைச் சார்ந்தவர் என்பதைச் சொல்லுவதுதான் கோத்திரம். இந்தக் கோத்திரங்களின் முக்கியமானவர்களாக ஏழு ரிஷிகள் கூறப்பட்டுள்ளனர். இவர்களைக் கோத்திர பிரவர்த்தகர்கள் என்று சொல்லுவர். இந்த ரிஷிகளின் பெயர்கள் பின்வருமாறு 1.  பிருகு  2.  அங்க்ரஸர்  3.  அத்ரி  4.  விச்வாமித்ரர்  5.  வஸிஷ்டர்  6.  கச்யபர்     7.  அகஸ்த்யர் பிரவர்த்தகர்கள் ஒரு சில கோத்திரங்கள் ஒரு ரிஷியையும் சில இரண்டு ரிஷிகளையும் சில மூன்று ரிஷிகளையும் சில ஐந்து ரிஷிகளையும் சில ஏழு ரிஷிகளையும் பிரவரமாகக் கொண்டவை. கோத்ரம் பிராமணாளுக்கு மட்டுமே உரியது என்பதே நடைமுறையாக உள்ளது. அவர்களே ரிஷிகளின் வம்சாவளிகள் என்பது அவர்களால் தீர்மானிக்கப்பட்ட விஷயம். இந்தக் கோத்திரங்கள் எல்லா இனத்தவருக்கும் உண்டு. குறிப்பாகப் பிராம்மணர்கள் இடையே இது அதிகமாகப் பழக்கத்தில் உள்ளது. கோத்திரம் தெரியாதவர்கள் சிவ கோத்திரம் ,  விஷ்ணு கோத்திரம் என்று தங்களைச் சொல்லிக் கொள்வதும் நடைமுறையில் உள்ளது. ஆண்களுக்கு மட்டும்தான் கோத்திரம் என்பது இல்லை.

சூரிய குலம்

Image
  சூரிய குலம்   என்று காசியப முனிவருக்கும் அதிதீ தேவிக்கும் பிறந்த விவஸ்வான் என்ற பெயர் கொண்ட சூரியனின் வம்சாவளிகளை குறிப்பிடுகின்றனர் .   இந்து தொன்மவியலின்   அடிப்படையில்   சூரியனுக்கும்  சந்தியா தேவிக்கும்   வைவஸ்தமனு   என்ற மகன் பிறந்தார் இவர் தான் மனுஸ்மிதிரியை இயற்றியவர். விவஸ்வான் என்கிற சூரியன் முதல் மனிதனாக அறியப்பெறுகிறார். இவருடைய பெயரனான   இச்வாகுவின்   வழி வந்த அரச வம்சம் சூரிய குலமாக அறியப்பெறுகிறது. இந்த வம்சத்தில் பிறந்தவராக  பகீரதனும் ,  ராமரும்  புகழ்பெற்றவர்கள். மகாபாரதப் போரில்  பிரகதபாலன்  என்பவரை  அபிமன்யு  கொல்ல இவ்வம்சம் அழிந்ததாக கூறுகின்றனர். சிலர் இவ்வம்சத்தில்  மருத்  என்பவர் பிழைத்து அவரால் வம்சம் தளைத்ததாகவும் நம்புவதுண்டு. ரகு வம்சம் தொகு சூரியனின் மறுபெயரான ரகு என்பதிலிருந்து ரகு வம்சம் என்று இந்த வம்சம் அழைக்கப்பட்டிருக்கலாம் எனவும், தசரதனின் தாத்தாவான ரகு என்பவரின் வம்சம் என அடையாளம் செய்ய ரகு வம்சம் என்று அழைக்கப்படுக்கலாமெனவும் நம்பப்படுகிறது. வம்ச பட்டியல் தொகு சூரியன் வைவஸ்தமனு இச்வாகு விகுட்சன் புரஞ்சயன் அனநேசு பிருது சாவஷ்தி குவலயாசுவன் யுவனாசுவன

வேட்டுவச் சமூகமான வலையர் சாதியில், சருகுவலையர்

Image
  இயற்கை அறிவோம்: புள்ளி எலிமானா? சருகுமானா? புள்ளி எலிமான்' என்றொரு உயிரினம் பற்றிச் சமீபத்தில் பல செய்திகள் வெளிவந்தன. இந்தப் பெயருடன் ஓர் உயிரினம், நம் பகுதிகளில் இருக்கிறதா என்ற ஆச்சரியம் ஏற்பட்டது. தேடிப் பார்த்ததில், ஆங்கிலத்தில் ஸ்பாட்டட் மவுஸ்டீர் என்று அழைக்கப்படுவதால், ‘புள்ளி எலிமான்‘ என அப்படியே மொழிபெயர்த்துவிட்டார்கள். சங்கக் கால உயிரினங்கள் பற்றி பல நூல்களை எழுதியுள்ள பி.எல்.சாமி, தன்னுடைய கட்டுரை ஒன்றில் இந்த உயிரினத்தைப் புள்ளி எலிமான் எனக் குறிப்பிட்டுள்ளார். என்றாலும், அது பழைய பதிவு. நம் மரபையே அறியாமல், ஆங்கிலத்தில் உள்ளதை அர்த்தம் புரியாமல் மொழிபெயர்ப்பதால் ஏற்படும் பிரச்சினை இதுவென்று, சூழலியல் அறிஞர் சு. தியடோர் பாஸ்கரன் உள்ளிட்டோர் தொடர்ந்து சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். சருகு மான் ---------------------- இந்த உயிரினத்தின் தமிழ்ப் பெயர் ‘சருகு' மான் என்னும் சொல், தமிழில் இரட்டைக்குளம்பிகளுக்கான பொதுச்சொல்; அதனால் இந்த உயிரினம் மக்கள் வழக்கில் சருகுமான் எனப்பட்டது. இலைச்சருகுகள் இடையே மறைந்து வாழும் தன்மையைக் கொண்டிருப்பதால், இதற்குச் சருகு என்னும