புகழ் வணக்கம் --------------------------------------- புரட்சித் தலைவர் மக்கள் திலகம் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களால் கொள்கை வேந்தன் என்று கொண்டாடப்பட்டவர். விடாமுயற்சியும் அதற்கான உழைப்பும் தன்னம்பிக்கையும் இருந்தால் சாதாரண மனிதனும் சக்கரவர்த்தியாக முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் . ஏழ்மையும், வறுமையும் சாதிப்பதற்கு ஒரு தடையில்லை என்பதை எங்களுக்கு பாடமாக போதித்து விட்டு சென்றவர் . ஊராட்சி மன்ற உறுப்பினர் , ஊராட்சி மன்ற தலைவர் , ஒன்றிய துணை பெருந்தலைவர், மூன்று முறை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் ஏழு ஆண்டுகள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் .என்று ஏற்றுக் கொண்ட பணிகளை சிறப்பாக செய்து முடித்தவர் . செல்வாக்கிலும் பதவியிலும் கோலோச்சி இருந்த காலத்தில் ,தன் சொந்த ஊரான முடச்சிக்காட்டில் தனக்கென்று ஒரு வீடு கூட கட்டிக் கொள்ளாமல் பேராவூரணியை கட்டியெழுப்புவதிலும் பேராவூரணி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதிலும் முழு கவனம் செலுத்தியவர் . பேராவூரணி தொகுதியில் மருத்துவமனை விரிவாக்கம் ,புதிய பேருந்து வழித்தடம், ப...