பெரும்பிடுகு முத்தரையர் பேசுகிறேன்...

பேரக்குழந்தைகள் அனைவருக்கும் வணக்கம் 🙏 நான் உங்கள் முப்பாட்டன் பெரும்பிடுகு முத்தரையர் பேசுகிறேன்...

தமிழகம் மட்டுமல்லாது இந்த தரணி முழுக்கவே எனது வாரிகளாகிய நீங்கள் பரவி  வாழுகிறீர்கள் என்பதே எனக்கு பெருமை தான்....

சூரியனில் தொடங்கி நான் வரைக்கும் நமது பரம்பரையினர் இந்த சமூகத்திற்கு மாபெரும் புகழை சேர்த்துள்ளோம், அதையெல்லாம் நீங்கள் அழித்துவிடாமல் பாதுகாக்க வேண்டும்...

ஒரு காலத்தில் மிகப்பெரிய பேரரசர்களாகவும், பெருநிலக்கிழார்களாகவும், வணிகர்களாகவும், சிற்றரசர்களாகவும், பாளையக்காரர்களாகவும் இருந்த இந்த சமூகத்தில் இன்றைக்கு மிகவும் பின்தங்கிய பொருளாதாரம் மற்றும் வாழ்வியலை கொண்டுள்ளீர்கள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை....

உங்கள் முப்பாட்டன் பெரும்பிடுகு முத்தரையர் ஆகிய நான் உங்களுக்கு கட்டளையிடுகிறேன்...

கல்வியில் சிறந்து விளங்க, தெரியாதோர்க்கு வழிகாட்டுங்கள், தெரிந்தவர்கள் பொருளீட்டும் கலையை கற்றுக்கொடுங்கள். அரசியலில் என் வாரிசு அல்லாதோர்க்கு ஓட்டுப் போடாதீர்கள். எதிரிக்கு ஓட்டுப் போடுவது நீங்கள் என்னை அவமதிக்கும் செயலாகும்...

மேலும்.... இந்த சமூகத்தின் பல மன்னர்களில் முதன்மையானவன் நானே, நானே உங்களுக்கு தலைவனும் ஆவேன். எத்தனை அமைப்புகள் இருந்தாலும் இனி வந்தாலும் அதற்கும் மூலம் நானே, நானே இங்கே பிரதானம். என் பார்வையில் தலைவனோ தொண்டனோ அனைவரும் எனக்கு சமமானவர்களே, அனைவரும் எனது பேரக்குழந்தைகளே....

ஏற்றத்தாழ்வுகள் நமக்குள் இல்லை, இருக்கவும் கூடாது. எனது பேரக்குழந்தைகள் அனைவரும் ஒரே மாதிரியான மனநிலை கொண்டவர்கள் இல்லை, ஒவ்வொருவரும் தனித்துவம் கொண்டவர்கள் தான்.

அந்த தனித்துவம் ஒருவருக்கு பிடிக்கலாம் பிடிக்காமலும் போகலாம், அதற்க்காக அந்த குழந்தையை ஒதுக்குவதோ இழிவுபடுத்துவதோ கூடாது. அது என்னையே இழிவு படுத்துவதற்கு சமம்...

உங்களுடைய என்னம் உங்களின் முன்னேற்றம் குறித்து மட்டுமே இருக்க வேண்டும், அதைவிடுத்து உன் சகோதரனை இழிவுபடுத்துவதாக நினைத்து நீங்கள் என்னையே இழிவு செய்கிறீர்கள், அது உங்கள் பாட்டனான பெரும்பிடுகு முத்தரையர் எனக்கு மிகுந்த வேதனை தருகிறது...

ஆயிரம் குற்றங்கள் செய்தாலும் என் பேரப்பிள்ளைகளை நான் ஒதுக்கவோ தண்டிக்கவோ மாட்டேன், ஆனால் என்வழி வந்த உங்களுக்கு மட்டும் எப்படி அந்த தீய குணம் வந்தது..?? வேண்டாம் குழந்தைகளே அது மோசமான குணம். அதனால் பேரிழப்பு நமக்கு தான்...

இனிமேலாவது நமது உண்மையான வம்சாவளி எதிரிகள் யார் யார் என்பதை உணர்ந்து செயலாற்றுங்கள். அப்படி செய்தால் மட்டுமே நான் உங்களோடு இருந்து உங்கள் வெற்றிக்கு துணை நிற்பேன், அரசியலை பலப்படுத்துங்கள்,

உங்கள் பாட்டனான பெரும்பிடுகு முத்தரையர் என்னைப்போல் கம்பீரமாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயலுங்கள். இனி ஒருபோதும் உங்களுக்குள் அடித்துக்கொள்ளாதீர்கள்.

இந்த முறை போல எல்லா நேரமும் நான் உங்களுக்கு என்னை மானசீக குருவாக ஏற்றுக்கொண்ட எனது பேரன் #சித்தன்_சிவமாரி மூலமாக அறிவுரை வழங்கிக்கொண்டே இருக்க முடியாது...

எனது பேரக்குழந்தைகளே! நீங்கள் எல்லோரும், எல்லாமும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன். தெய்நிலை எய்திய காரணத்தால் மேலுலகத்தில் இருந்து உங்களை நான் என்றும் வழிநடத்துவேன். மீண்டும் சந்திப்போம் பேரக்குழந்தைகள்! 😍

பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் என்கிற பேரரசர் சுவரன் மாறன் முத்தரையர் குரலாக நான் உங்கள்... 👇

சித்தன் சிவமாரி (எ)
சிவ.அ.மாரிமுத்து அம்பலக்காரர்
பெரும்பிடுகு பெருஞ்சேனை குழுமம்.

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்