கண்ணப்ப நாயனார் புராணம்
கண்ணப்ப நாயனார் புராணம் 🙏 (பெரியபுராணம் - இலைமலிந்த சருக்கம்) 650 மேலவர் புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மைக் காவலர் திருக் காளத்திக் கண்ணப்பர் திரு நாடு என்பர் நாவலர் புகழ்ந்து போற்றும் நல் வளம் பெருகி நின்ற பூவலர் வாவி சோலை சூழ்ந்த பொத்தப்பி நாடு 3.3.1 651 இத் திரு நாடு தன்னில் இவர் திருப் பதியாதென்னில் நித்தில அருவிச் சாரல் நீள் வரை சூழ்ந்த பாங்கர் மத்த வெம் களிற்றுக் கோட்டு வன் தொடர் வேலி கோலி ஒத்த பேர் அரணம் சூழ்ந்த முது பதி உடுப்பூர் ஆகும் 3.3.2 652 குன்றவர் அதனில் வாழ்வார் கொடுஞ் செவி ஞமலி யாத்த வன்றிரள் விளவின் கோட்டு வார்வலை மருங்கு தூங்கப் பன்றியும் புலியும் எண்கும் கடமையும் மானின் பார்வை அன்றியும் பாறை முன்றில் ஐவனம் உணங்கும் எங்கும் 3.3.3 653 வன் புலிக் குருளையோடும் வயக் கரி கன்றினோடும் புன்றலைச் சிறு மகார்கள் புரிந்து உடன் ஆடல் அன்றி அன்புறு காதல் கூற அணையும் மான் பிணைகளோடும் இன்புற மருவி ஆடும் எயிற்றியர் மகளிர் எங்கும் 3.3.4 654 வெல் படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டம் தோறும் கொல் எறி குத்து என்று ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச் சில