திண்டுக்கல் நத்தம் கணவாய் போர் - கண்ணப்ப குல அம்பலக்காரர்களின் இரத்த சரித்திரம்

#திண்டுக்கல்
#நத்தம்_கணவாய்_போர்

குலதெய்வத்திற்காகவும் தங்கள் பெண்ணுக்காகவும் உயிர்தியாகம் செய்த அம்பலக்காரர்களின் #ரத்த_சரித்திரம்...

திருச்சிக்கு வடக்கே கொல்லி மலையில் தொட்டியம் பகுதியைச் சேர்ந்த அய்யலூரில் அய்யனார், பெரிய கருப்பு, சின்னக் கருப்பு அதோடு சேர்ந்த 27 பாளையப்பட்டு தெய்வங்கள் அம்பல இனத்தாரால் வழிபாடு செய்யப்பட்டு வந்தன. இத்தெய்வங்களுக்கு வழிபடு பூசாரிகளாக அமைந்தவர்கள் கண்ணப்பக் கோத்திரத்தைச் சேர்ந்த அம்பலங்கள். மாலிக்காபூர் படையெடுப்பை ஒட்டி இந்நிலப்பகுதி இஸ்லாமிய ராஜாக்களின் கைகளில் சென்றது. அதில் ஒரு இஸ்லாமிய ராஜா அம்பல இனத்தைச் சேர்ந்த பெண்ணை மணக்க விரும்பிப் பெண் கேட்க அவர்களோ புற சமயத்தார் எனக் கூறித் தர மறுக்கின்றனர். இதனால் இஸ்லாமிய ராஜாவின் கோபத்துக்கு இரையாகிப் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். துன்புறுத்தல் தாங்காமல் தங்கள் குலப் பெண்ணை மணம் முடித்துத் தர சம்மதம் தெரிவிக்கின்றனர். அதையொட்டி திருமண விருந்தும் சிறப்பாக நடைபெற அம்பல இன மக்கள் மணப்பெண்ணுடன் கலந்து கொள்கின்றனர். விருந்தில் உணவோடு சிறப்பாக கறியும் பரிமாறப்படுகிறது. அம்பல இனமக்கள் இது மாட்டுக்கறி என்று தெரிந்து உண்ணாது, மாட்டுக் கறி உண்ணும் இனத்தார்க்குப் பெண் கொடுப்பதா என்று நினைத்து மணப் பெண்ணை அழைத்துக் கொண்டும், அவர்கள் வணங்கும் தெய்வங்களையும் எடுத்துக் கொண்டு வேறு ஊர் செல்ல முடிவு செய்தனர். அன்று இரவே செல்கின்றனர். திருமண நேரம் நெருங்கி வரும் போது மணப்பெண்ணை அழைத்து வரச் சென்ற இஸ்லாமிய படைவீரர்கள் மணப்பெண்ணிற்கு பதில் நாய் அமர்ந்து இருப்பதைப் பார்த்து ஏமாற்றப்பட்டதை அறிகின்றனர். அவர்களைப் பழிவாங்க குதிரைகளில் ஏறி விரட்டுகின்றனர். விருந்து மண்டபத்தில் இருந்து தப்பித்த அம்பலங்கள் தங்களுடைய குலத்தெய்வங்களான அய்யனாரையும் பெருமாளையும், பில்லுக் கோட்டையில் (வைக்கோல் கட்டு) சுற்றித் தூக்கிக் கொண்டு தெற்கு திசை நோக்கி தப்பிச் செல்கின்றனர். இடையில் இஸ்லாமியப் படைவீரர்களிடம் மாட்டிக் கொண்டு மணப்பெண் உட்பட பலர் போர் புரிந்து மடிகின்றனர். அவர்களிடம் இருந்து தப்பிய 9 பேர் மட்டும் மழை பெய்யும் இரவுப் பொழுதில் காவிரிக்கரையில் வந்து நிற்கின்றனர். காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது. முதுகுக்கு பின்புறம் இஸ்லாமிய படைவீரர்களின் ஆவேச விரட்டல் சிக்கி தவிக்கின்றனர். அப்போது அந்த ஒன்பது பேரும் கொல்லிமலை அய்யனார், பெரியண்ணன். சின்னக் கருப்பு. பெருமாள் மூவரையும் கும்பிட்டு காவிரி வெள்ளத்தைக் கடத்திவிட வேண்டும் என்று வேண்டுதல் வைக்கின்றனர். வேண்டுதலின் அற்புதமாக வடகரையில் இருந்த புங்க மரமும், தென்கரையில் இருந்து மூங்கில் மரமும் பாலமாக மாறி வளைந்து கொடுக்க அதன் மேல் ஏறி தென்கரைக்குத் தப்பி விடுகின்றனர். ஒன்பது பேரில் சாமி சிலைகளைத் தூக்கி வந்த கோட்டை கட்டி என்பவன் இறுதியாகத் தென்கரையில் கால் வைக்க வளைந்த மரங்கள் மீண்டும் பழையபடிக்கு நிமிர்ந்து நின்றன. விரட்டி வந்த இஸ்லாமியப் படைவீரர்கள் அவர்களைத் தொடர முடியாமல் தேங்கிப் போய் வடகரையிலே நின்று விடுகின்றனர்.

தப்பி வந்த ஒன்பது பேரும் கால்நடையாகத் தென்திசை நோக்கி நடந்து வரும் போது எதிர்பட்ட கணவாய்க்கு அருகில் பில்லுக்கோட்டையில் இருந்து சின்னக் கருப்பு மட்டும் தப்பி கீழே விழுந்துவிடுகின்றது. சுமந்து வந்த கோட்டை கட்டி தூக்கிப் பார்த்தும் எழுப்ப முடியவில்லை. ஒன்பது பேரும் சேர்ந்து முயற்சி பண்ணித் தூக்க முயன்றும் முடியவில்லை. அப்போது அவர்களில் ஒருவருக்குச் சாமி வந்து எனக்கு இந்த இடமே சரியானது இனி நான் எங்கும் வரமாட்டேன். நீங்கள் அருகில் உள்ள ஊரில் சென்று குடியேறவும் என அருள் வாக்கு கொடுக்கின்றார். அதுபடியே ஒன்பது பேரும் தங்கள் குடியிருப்புக்கு அய்யலூர் எனப் பெயர்வைத்துக் குடியேறுகின்றனர்

வெள்ளைக்காரர்கள் வடதிசையில் இருந்து தென்மார்க்கமாக இரும்புப் பாதை அமைக்க சர்வே எடுக்கின்றனர். அவர்களின் சர்வே குறியீடு சின்னக்கருப்பின் சிலையை ஒட்டி வந்தது. அந்த இடத்தில் சர்வே செய்ய வந்த வெள்ளைக்காரனை சின்னக் கருப்பு துள்ளி விழச் செய்தது. அதன்பின் சர்வே அவ்விடத்தை விட்டுச் சிறிது தொலைவில் அமைந்து உள்ளது. இதன்பின் புகை வண்டி முதன் முதலாக விடும் பொழுது அந்த வண்டியைத் தடுத்து நிறுத்தியதால் அக்கோவிலில் உள்ள சின்னக் கருப்பை வணங்கி சென்றனர். அக்கோவில் இருக்கும் சாமிக்கு வண்டிக் கருப்பு எனவும் வெள்ளையர்கள் பெயர் இட்டனர் அதன்பின் இப்பெயரே தற்போது இருந்து வருகின்றது.

#முத்தரையர்_ரத்த_சரித்திரம்

பதிவு: 3 Lion studios முகநூல் பக்கம்

Comments

Popular posts from this blog

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

DNT என்றால் என்ன..??