இராஜ இராஜ சோழன் முத்தரையர் அமைத்த குமிழி

நீர் மேலாண்மையின் முன்னோடி சமூகமான முத்தரையர் குலத்தில் உதித்த இராசராச சோழன்  அமைத்த குமிழி :

பிற்கால  முத்தரையர் குல அரச மரபில் இராசராசன் சோழ முத்தரையர் !!!
 மும்முடிச்_சோழன் ,சிங்களாந்தக_முத்தரையன் எனும் முதலாம் ராஜராஜ_சோழன் குளம் ஒன்றிர்க்கு குமிழி அமைத்து கல்வெட்டு வைத்திருந்ததாகவும் குமிழி பாழ்பட்டு போனதால் என் முன்னோரின் கடனை நான் செய்ய. வேண்டி குமிழியை புதுப்பித்து உள்ளேன் என்று குலோத்துங்க_சோழன் தனது கல்வெட்டில் தெளிவுபடுத்தியுள்ளார்..

முதலாம் ராஜராஜ_சோழன் ஈழத்தை வென்றதால் சிங்களாந்தகன் எனும் பட்டத்தை பெற்ற கையோடு கொட்டியூர் எனுமிடத்தில் குளம் ஒன்றை புதுப்பித்து நீர் வரத்துக்காய் குமிழி அமைத்து கல்வெட்டொன்றையும் பதித்துள்ளார்..அதில் தன்னை மும்முடிச்_சோழ சிங்களாந்தக_முத்தரையர் என்று தெளிவாக கூறியிருக்கிறார்
 அக்கல்வெட்டு பாழ்பட்டதால் குலோத்துங்கன் புதுப்பித்துள்ளார்

இதை எவராலும் மறுத்து கூற முடியாது காரணம் இந்த கல்வெட்டை அமைத்தவர் ராஜராஜ_சோழரின் தங்கை வழி பெயரனான குலோத்துங்க_சோழன்.. இன்னும் வலு சேர்க்கும் விதத்தில் மும்முடி_சோழன் சிங்களாந்தக_முத்தரையர் என்றுள்ளது மும்முடிச்_சோழன் என்பது ராஜராஜனுக்கு உரிய சிறப்பு பெயர்

சூரிய_குலச்_சத்திரியர் இனமான முத்தரையர் இனமே சோழர்கள் என்பதற்கு உரிய கல்வெட்டு ஆதாரம் இதுவே ஆகும்.ஆகவே வரலாற்று ஆசிரியர்கள் பிற்க்கால சோழர்கள் என்று இராசராச சோழனை குறிப்பிடுவதை தவிர்த்து இனி பிற்க்கால முத்தரையர் அரச மரபில் இராசராசன் என்றே குறிப்பிட வேண்டும்.

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்