முத்தரையர் புகழ் நார்த்தாமலை


முத்தரையர் புகழ் : நார்த்தாமலை

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்தில் அமைத்திருக்கிறது புகழ்பெற்ற நார்த்தாமலை திருத்தலம்

அதாவது திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவிலும் புதுக்கோட்டையில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவிலும் எழிலோடு அழகுற அமைந்த சிற்றூர் இது

கோவிலை சுற்றியுள்ள சுமார் நாற்பது கிலோமீட்டர் தூரம் வரையிலானா ஊர்களுக்கு காவலாகவும் எல்லையம்மனாகவும் வேப்பிலைக்காரியாகவும் சித்துக்கள் பல புரிவதில் மகமாயியாகவும் அருள் பாளிக்கிறாள் தேவி பராசக்தியின் அம்சமான முத்துமாரி...

கோவிலை சுற்றியுள்ள நாற்பது கிலோமீட்டர் தூரம் வரையிலும் பெரும்பான்மை சமூகமாக வசிப்பது ஆதி அரையர்களான முத்தரையர்களே என்பது தின்னம்

லட்சக்கணக்கான பேர் வழிபாடு செய்தாலும் அதிக அளவில் பக்தியின் உச்சத்திற்கே சென்று உடலை வருத்தி வேண்டுதல் நிறைவேற்றுவதும் முத்தரையர்களே

அதாவது மாற்று சமூகத்தவர்கள் தன் குழந்தைகளுக்கு தொட்டில் கட்டுவார்கள் பால்குடம் எடுப்பார்கள் மேலும் சில முடி இறக்குவார்கள் அவ்வளவே அவர்கள் வழிபாடு...

ஆனால் இவைகள் மட்டுமல்லாது பறவை காவடி, அலகு குத்துதல், சுத்து காவடி, சிலாகுத்து ஆடுதல், சிலம்பம், இன்னும் பிற கடினமான வேண்டுதல்களும் உடலை எந்த அளவிற்கு வருத்த முடியுமோ அந்த அளவிற்கு வருத்தி அம்மனை வழிபடுவது முத்தரையர்கள் மட்டுமே என்பது பக்தியின் உச்சம்

மட்டுமல்லாது நார்த்தாமலையில் பெரும்பான்மை சமூகமும் முத்தரையர்களே என்பதும் குறிப்பிடத்தக்கது

பொதுவாக நார்த்தாமலைக்கும் நமக்கும் உள்ள தொடர்பு யாவரும் அறிந்ததே என்றாலும் தன் உச்சமான பக்தியை அதிகம் வெளிப்படுத்தும் இவர்களை இங்கே அதிகம் காணலாம் 

அதுமட்டுமல்லாது முத்தரையர் மன்னர்கள் அமைத்த குடைவரை கோயில்களும், கற்றளி கோயில்களும் இங்கே ஏராளம் உள்ளன....

என்னை பொருத்த வரையில் இவையெல்லாம் மூடநம்பிக்கை என்றாலும் பக்தி மார்க்கத்தில் இவர்களின் பக்தி போற்றுதலுக்குறியது

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் என்றாலும் இதுவே போதும் மேலும் பலவற்றை பிறகு பார்ப்போம்

படிப்பதோடு மட்டுமல்லாமல் பகிர்ந்தும் நம் புகழை உலகறிய செய்வோம்....

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்