Posts

Showing posts from October, 2023

முத்தரையர் கல்வெட்டுகள்

Image
1.முத்தரையர் மன்னர்களில் தன்னாட்சி புரிந்த பெரும் வேந்தன், தென்னவன் இளங்கோ முத்தரையர், இவர் எடுப்பித்த புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பிரகதம்பாள் உடனுறை உத்தமநாத சுவாமி சிவன் கோயில் கல்வெட்டுகள். 2.முதலாம் பராந்த சோழனின் மகன் அரிகுல கேசரி முத்தரையர் கல்வெட்டு | மகள் அனுபமா கொடும்பாளூர் முத்தரையரை மணந்திருக்கிறார். 3.குவாவன் சாத்தன் என்கிற விடேல் விடுகு முத்தரையர் தன் பெயரிலேயே, விடேல் விடுகு மங்கலம் என்கிற ஊரையும், விடேல் விடுகுக் கல் என்கிற பொன்னை அளக்கும் கல்லையும் நிறுவியிருக்கிறார் | இதேபோல முத்தரையர்களின் நில அளவை முறையே முந்திரிகை என வழங்கப்பட்டுள்ளது.

வேட்டை எங்கள் மரபுரிமை

Image
பழந்தமிழர் மரபு என்பதே வேட்டையில் இருந்து தான் தொடங்குகிறது, அதை தொன்றுதொட்டு பின்பற்றிவரும் வேட்டுவ வலையர்கள் தமிழகம் முழுக்கவே பரவி வாழும் இனக்குழு ஆவார்கள்... என்னுடைய சிறுவயதில் என் தந்தையரோடு ஒருசில முறை வேட்டையாட செல்வதுண்டு, பெரும்பாலும் கூட்டிச்செல்ல மாட்டார். இவைகளை அடுத்த தலைமுறைக்கு கடத்த கூடாது என்பது அவரது என்னம்... வேட்டையாட பின்னாலில் இளைஞர்களோடு போவதுண்டு, அப்போதெல்லாம் நம்முடைய வேட்டை நாய்கள் குறுக்கும் நெடுக்கும், முன்னும் பின்னுமாக ஓடும், சிலநேரம் காலுக்கடியில் ஓடி நம்மை சாய்த்துவிடவும் கூடும் அப்படி ஒரு நேரற்ற தன்மையுடையது நாய்கள்... இதை முத்தரையப் பாவலர் சேக்கிழார் பெருமான் எத்தனை உன்னிப்பாக கவனித்து அழகுற ஆய்ந்து பாடல் புனைந்திருக்கிறார் என்று என்னும் போது தமிழாய்ந்த சான்றோர் கண்ணில் நீர் ததும்புதல் இயல்பேயாகும்... மண்ணையும் மரபையும் காப்பதும், வேட்டையாடி வீரம் சொறிவதும் மலையரான வேட்டுவர் மரபு என்பதை தெள்ளத் தெளிவாக சொல்லியிருக்கிறார் சேக்கிழார் பெருமான், மேலும் வேட்டுவர்களை மறவர் என்றும் மள்ளர் என்றும் குறிப்பிடுகிறார். அதாவது மறவர் என்பதும் மள்ளர் என

சேடப்பட்டி செப்பேடு

Image
மதுரை மாவட்டம் சேடப்பட்டி  மடத்தில் கண்டறியப்பட்ட  அம்பலக்காரர் செப்பேடு...

வலையர் குல சேர்வைக்காரர்கள்

Image
| வலையர் குல சேர்வைக்காரகள் | வருடம் 1831 வெளியான Missionary Register எனும் ஆங்கிலேயர் புத்தகத்தில்  .. "வலையர்கள் துப்பாக்கி சுடுவதில் சிறந்தவர்கள். போர் காலத்தில் இவர்கள் பாளையக்காரர்களின் நம்பிக்கைரிய வீரர்களாக இருந்தார்கள். இவர்களில் பலர் சேர்வைக்காரர் பட்டம் உடையவர்கள், அதாவது 100 இல் இருந்து 50 நபர்களை வழி நடத்தும் ஒரு தலைவன் தான் சேர்வைக்காரன் " என்று குறிப்பிட்டு உள்ளது குறிப்பு: சேர்வைக்காரர் குல பட்டம் வலையர்க்கு 1831 காலம் மற்றும் முந்திய காலத்திலும் இருந்தது தெரிய வருகிறது. மேலும் சோழ மண்டலத்தில் வலையர்கள் தங்களை சேர்வை சாதி என்றே குறிப்பிட்டு உள்ளார்கள். நன்றி நவீன்குமார்பிள்ளை அம்பலக்காரர்

கள்வர் கள்வன்

Image
கள்வர் என்ற சொல்லாடல் சங்க இலக்கியப் பாக்களிலேயே பல இடங்களில் பதியப்பட்டுள்ளதை நாம் அறிவோம், சங்க இலக்கியங்கள் அக்காலத்திய வேந்தர்களைக் குறிக்குமிடத்து சிறப்புடன் இந்த சொல்லாட்சியைக் கையாண்டுள்ளன ! மேலும் இதன் தொடர்ச்சியாகத்தான் பிற்கால பாண்டிய, சோழ வேந்தர்களும் கூட தம்மை " கள்ள வேந்தன்" , "கள்ளப் பெருமான்" , " கள்வன் " என்றெல்லாம் பலவாராக தத்தமது கல்வெட்டுகளில் பதிந்து கொண்டுள்ளனர் என்பதும் நமக்கு சொல்லாமலேயே விளங்கும் ! இவ்வாறாக கள்வர் என்ற வார்த்தையை தமிழ் இலக்கியங்களும், கல்வெட்டுகளும் உயரிய பொருளில் கையாண்டுள்ளன...   ஆனால் 'வார்த்தைகளின் பொருளை ' அந்தந்தக் காலகட்ட அரசியல் நிலையோடு ஒப்புமைப்படுத்தி முறையான ஆய்வியல் அணுகுமுறையைக் கையாளாமல்  சிலர் பழங்காலத்திய கள்வரை இந்நாளைய 'கள்ளர்' சாதியினரோடு தொடர்புபடுத்தி எழுதி வருகின்றனர். அந்த வகையில் சோழ, பாண்டிய மன்னர்களைப் போலவே " கள்வர் கள்வன்" என்ற பெயரால் செந்தலைக் கல்வெட்டுகளில் குறிக்கப்பெற்றுள்ள முத்தரையர் மரபுவழி மன்னரான "சுவரன் மாறனாகிய இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்&qu