Posts

Showing posts from December, 2025

சாத்தன் பழியிலி இளங்கோ முத்தரையரின் அண்ணன் சாத்தன் பூதி இளங்கோ அதியரையன்

Image
முத்துராஜா (முத்தரையன்) என்ற பட்டம் மன்னனின் இளைய மகனுக்கு உரிய பட்டம் ஆகும். மேலும், முத்தரையன் என்பது முத்துராஜா என்ற பட்டத்தின் தமிழ் வடிவம்.  (ஆதாரம்: எபி இண்டிகா பகுதி 27) சாத்தன் பழியிலி இளங்கோ முத்தரையரின் அண்ணன் சாத்தன் பூதி இளங்கோ அதியரையன் ஆவார் . இளங்கோ முத்தரையரிடமிருந்து எவ்வித எதிர்ப்பும் இன்றி விஜயாலய சோழன் தஞ்சையை கைப்பற்றி நிசும்பசூதனி ஆலயத்தை தஞ்சையில் எடுப்பித்தான். நார்த்தா மலைமேல் பழியிலீஸ்வரம் கோயிலை தம்பி சாத்தன் பழியிலி இளங்கோ முத்தரையன் குடைவித்துள்ளான். அருகே, விஜயாலய சோழீஸ்வரம் கோயிலை அண்ணன் கட்டியுள்ளான்.  இளங்கோ முத்தரையரிடமிருந்து தஞ்சையை எவ்வித எதிர்ப்பும் இன்றி கைப்பற்றிய விஜயாலய சோழன் யார்? குவாவன் சாத்தன் முத்தரையரின் மூத்தமகனான சாத்தன் பூதி இளங்கோ அதியரையன் தான் பிற்கால சோழ சாம்ராஜ்யத்தை நிறுவியவர் ஆவார். தஞ்சையை எவ்வித எதிர்ப்பும் இன்றி இளைய சகோதரர் இளங்கோ முத்தரையரிடமிருந்து கைப்பற்றி, பிறகு நிசும்பசூதனிக்கு ஆலயம் எடுப்பித்தவரும் அவரே! -ஜெகன்

சோழரும் நாங்கதான்! முத்தரையரும் நாங்கதான்!

Image
#முத்தரையன் என்ற பட்டம் #சோழ_இளவரசன் பட்டம் என்றும், மன்னரின் இளையவனுக்கு உரியது என்பதனை முதன் முதல் கூறியது நான். அதன்மூலம்தான் #இளங்கோ_முத்தரையனிடமிருந்து தஞ்சையை கைப்பற்றியவன் அவனுடைய மூத்த சகோதரனும் விஜயாலய சோழீஸ்வரத்தை எடுப்பித்தவனும் ஆன விடேல் விடுகு சாத்தன் பூதி இளங்கோ வதியரையன் என்பதனை என்னால் முதலில் உலகுக்கு கூற முடிந்தது. ஆனால், #முத்துராஜா என்பதன் தமிழ் வடிவம் முத்தரையர் என்று கூறிய #நீலகண்ட_சாஸ்திரி போன்ற வரலாற்று ஆசிரியர்கள் "முத்துராஜா" என்பது #சோழஇளவரசனின் பட்டம் என்று இரண்டு செப்புப்பட்டயம் மற்றும் 12க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் மூலம் முன்னரே உறுதியாக ஆவணப்படுத்தியுள்ளனர். சோழரும் நாங்கதான்! முத்தரையரும் நாங்கதான்! பழைய தமிழக எல்லைப்பகுதியில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் வாழும் #மீனவர்களின்_பாதிபேர் முத்துராஜாக்கள் ஆவர். நன்னீரில் #மீன்பிடித்தல் மற்றும் #வேட்டையாடுதல் அவர்களின் குலத்தொழில் என நெல்லூர் சாசனம் தெரிவிக்கிறது. தமிழகத்தில் வாழும் முத்துராஜா, வலையர், பாளையக்காரர், அம்பலக்காரர் மற்றும் இன்னபிற உட்பிரிவுகளை கொண்ட முத்தரையர் மக்களை #நாட்டு...

சமரசமில்லா முத்தரையர் குல சேர்வைக்காரர்கள்

Image
சமரசமில்லா முத்தரையர் குல சேர்வைக்காரர்கள்  மதுரை மாநகர் முனுசுபாளையம் பகுதியில் குறிப்பிடும்படியான அளவு முத்தரையர் சமுதாயத்தைச் சார்ந்த மக்கள் வசிக்கின்றனர். இந்த முனுசுபாளையம் பகுதி முத்தரையர் மக்களுக்கு பிரதான பட்டம் சேர்வை ஆகும். இவர்கள் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்ட பகுதியிலிருந்து குறிப்பாக தானமநாடு என்று அழைக்கப்படும் பகுதியில் இருந்து வந்ததாக கருதுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் கடந்த காலங்களில் தானம நாட்டில் இருந்து தென் மாவட்ட பகுதியில் குடியேறிய மற்ற தானம நாட்டு முத்தரையர் மக்களுடன் தான் அதிக மனஉறவு வைத்திருந்தனர். மிக முக்கியமாக இந்த முனுசுபாளையம் முத்தரையர் சமூக மக்கள் சுதந்திரத்திற்கு முற்பட்ட காலகட்டத்தில் இருந்தே  'இந்து சேர்வை' என்ற பெயரிலே சாதி சான்றிதழ் உட்பட அனைத்து விதமான அரசு சான்றிதழ்களையும் பெற்று வந்துள்ளனர். ஆனால் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு காலம் காலமாக இந்து சேர்வை என்ற பெயரில் கொடுக்கப்பட்ட சாதி சான்றிதழ் இனி அந்தப் பெயரில் வழங்கப்படமாட்டாது என்று அப்போதைய அரசு அலுவலர்கள் கூறியுள்ளனர். அப்படி என்றால் எங...

ஒற்றியூரில் சோழர்கள் — முத்தரையர்களின் பழம்பெரும் வரலாறு

Image
#ரேனாட்டு_சோழர்களின் தலைநகரமாக #ஒற்றியூர் இருந்தது. தற்போதைய வடசென்னையில் #திருஒற்றியூர் என்ற பகுதியாக உள்ளது. அன்பில் செப்பேட்டில் ஒற்றியூரான் வம்சத்தில் #விஜயாலய_சோழன் தோன்றினான் என்றுள்ளது. கடற்கரை ஒட்டிய அப்பகுதியில் #முத்தரையர்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர். பெருபாலோனோர் முன்பு மீனவர்களாக இருந்தனர். திரு. G. K. J. பாரதி என்பவர் ஒற்றியூர் MLAஆக இருந்த முத்தரையர் ஆவார்(காங்கிரஸ் கட்சி). இவர் 1996 பாராளுமன்ற தேர்தலில் முரசொலி மாறனை எதிர்த்து மத்திய சென்னையில் போட்டியிட்டார். பிறகு 1998 பாராளுமன்ற தேர்தலில் வடசென்னையில் போட்டியிட்டார். பதிவு: ஜெகன் சுந்தர்ராஜன்