நார்த்தாமலை கல்வெட்டு / திருச்சிராப்பள்ளி முத்துராஜாமகாஜன தண்ணீர்பந்தல் செ.தம்புராண்முத்துராஜா வரகநேரி பிள்ளையார்கோயில் தெரு என்பவரால் 1909ம் ஆண்டு தொடங்கப்பட்டு முப்பதாவது ஆண்டில் இந்த கல்வெட்டு நிறுவப்பட்டுள்ளது.
புருசவர்மனின் பத்தாம் ஆட்சியாண்டில் பெரும்பாண முத்தரைசர் என்பவர் கங்க நாட்டை ஆண்டுவர, பாகற்றூர் என்ற ஊரில் கள்வர்கள் ஆநிரைகளை கவர்ந்தனர். நொச்சி சாத்தன் என்பவர் ஆநிரைகளை மீட்டபோது இறந்துபட்டான், அந்த வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் கல்வெட்டு.
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சோற்றுத்துறை மகாதேவர்க்கு உத்தமதானி என்னும் பெயர் கொண்ட திருவிளக்கு ஒன்றினை இரவும் பகலும் எரிப்பதற்க்காக -தென்னவன் இளங்கோ முத்தரையர்- இருபத்தைந்து கழஞ்சு பொன் கொடுத்ததை தெரிவிக்கும் கல்வெட்டு.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், மதியநல்லூர் பெரியகுளத்து மேலமடைத்தூண் முத்தரையர் மன்னன் கல்வெட்டு | சாத்தன் மாறன் முத்தரையர் குமிழி அமைத்ததை சொல்கிறது.