Posts

Showing posts from November, 2019

மூன்று தரை சோழ முத்தரையர்கள் (26முதல் 28வரை)

Image
நாடாண்ட முத்தரைய மன்னர்கள்: _____________________________________ சோழ முத்தரையர்(கள்): __________________________ 26.கம்பன் அரையன் ஸ்வஸ்திக் கிணறு. -------------------------------------------------------------------- மாற்பிடுகு பெருங்கிணறு (விசைய நல்லூழான், கம்பன் அரையன், அரையன் தாழி) விசைய நல்லூழான் என்ற முத்தரையனின் ஒரு கல்வெட்டு, தென் ஆற்காடு மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் கீளூரில் உள்ளது. இதில் இவன் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் ஆலம்பாக்கம் என்ற ஊரைச் சேர்ந்தவன் என்கிறது. இவனும் இவனது தம்பியுமான கம்பன் அரையனும், ஆலம்பாக்கத்தில் புகழ்பெற்ற மாற்பிடுகு ஏரியையும், திருச்சி திருவெள்ளறையில் ஸ்வஸ்திக் வடிவில் புகழ்பெற்ற பெருங் கிணற்றையும் அமைத்துள்ளார்கள். இவர்கள் தனது அரசியல் செல்வாக்கு காரணமாக, தென் ஆற்காடு மாவட்டம் கீளூரிலுள்ள திரு.வீரட்டனேஸ்வரர் கோவிலுக்கு நந்தவனம் அமைத்து, நடுவில் பூ மரம் வைத்து, திருத்தவும் தண்ணீர் இறைக்கவும். இந் நகரத்தார் வழியாக, இந்த விசைய நல்லூழான் வழியினர் பொன் கொடையளித்துள்ளனர். பொன் 30 கழஞ்சும், விடேல் விடுகு துளை

வேங்கையின் மைந்தன் புதினம் கதையில் முத்தரையர்

Image
வேங்கையின் மைந்தன் (புதினம்) கதையிலிருந்து “சோழர்களுடைய வாழ்வு நம்முடைய வாழ்விலிருந்துதானே தொடங்கியது" : திலகவதி, வீரமல்லன்(MUTHARAIYAR KULA KATHAAPATHIRAM) அருகில் மிகவும் நெருங்கி வந்து அவன் காதோடு கூறினாள். “பாண்டியர்களுடைய மணிமுடி ரோகணத்தில்(ILANGAI THESAM) இருக்கிறதல்லவா? அதை எடுத்துக் கொண்டுவந்து, தமது புதல்வர்களில் ஒருவனைப் பாண்டிய நாட்டின் அரசனாக்கி, அவனுக்கு அதைச் சூட்டிவிடப் பார்க்கிறார். சக்கரவர்த்தியால்(RAJENDRA CHOLA-I) முடியை ரோகணத்திலிருந்து கொண்டுவரவும் முடியாது. அப்படியே கொண்டு வந்தாலும், அது இவர்கள் எழுப்பும் புது மாளிகைக்குள் போய்ச் சேரவும் சேராது." “ஏன் சேராது? மாளிகையின் நுழைவாயிலுக்குள் போக முடியாத அத்தனை பெரிய மணிமுடியா அது?” “தலையிலே சூட்டிக்கொள்கிற முடி எங்கேயாவது அத்தனை பெரியதாக இருக்கமுடியுமா? ஏன் உங்கள் [MUTHARAIYAR], பரம்பரையில் யாருமே முடிசூடி நாடாண்டதில்லையோ?” “நம்முடைய பரம்பரை என்று சொல். நானும் முத்தரையன்” என்றான் கொதிப்புடன் வீரமல்லன். “சோழர்களுடைய வாழ்வு நம்முடைய வாழ்விலிருந்துதானே தொடங்கியது. சந்திரலேகையிலும், தஞ்சையிலும், இன்னு

முத்தரையர் குலம் உதித்த நாயன்மார்...

Image
முத்தரையர் குலம் உதித்த நாயன்மார்கள்.... இந்த அண்டத்தை ஆக்கவும் ,காக்கவும்,அழிக்கவும் ஆன தொழில்களைச் செய்யும் முழுமுதற் கடவுளாவார் .அவரை வெவ்வேறு வழிகளில் மகிழ்வித்து சிவபதவியை அடைந்த சிவபக்தர்கள் நாயன்மார்கள் ஆவார்கள்.அவர்கள் அறுபத்து மூவர் என சேக்கிழார் பெருமான் தனது பெரியபுராணத்தில் கூறுகிறார்.அவர்களில் முத்தரையர் குலம் உதித்தவர்கள் . 1 ) புகழ்ச்சோழ நாயனார் என்கிற குவாவன் 2 ) மங்கையர்க்கரசியார் 3 ) நரசிங்க முனையரைய நாயனார் 4 ) மெய்ப்பொருள் நாயனார் 5 ) கண்ணப்ப நாயனார் (  நாம் அனைவரும் அறிந்த ஒருவர் ) 1 ) புகழ்ச்சோழ நாயனார் என்கிற குவாவன் இவர் இரண்டாம் பெரும்பிடுகு என்று அழைக்கப்பட்ட சுவரன் மாறனின் பாட்டன் குவாவன் மாறனின் தந்தை. 2 ) மங்கையர்க்கரசியார் இவர் குவாவனின் மகளும். சுவரன் மாறனின் பாட்டன் குவாவன் மாறனின் தங்கையும் ஆவார். இவர் நின்ற சீர் நெடுமாற நாயனார் என அழைக்கப்பட்ட கூன் பாண்டியனின் மனைவி. 3 ) நரசிங்க முனையரைய நாயனார் இவர் திருமுனைப்பாடி நாட்டை திருநாவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். இவர் தந்தை வாணகோ அரையர் எனப்படும் தெய்வீகன் ஆவார். இவர் திருக