இராஜ ராஜ சோழன் படத்துக்கு கீழே "அரசி பஞ்சவன் மாதேவி கணவர் - அரையன் மகிமாலயன் ஆயின பராந்தக முத்தரையன்". அரையன் மஹிமாலயன் ஆயின பராந்தக முத்தரையன் என்பது ராஜராஜ சோழனின் இளவரச பருவ வழங்கு பெயராகும். சகோதரனின் கொலைக்கு பிறகு, அவர் சோழ அரச பதவி வேண்டாம் என்று விலகி இருந்த காலம் ஆகும். அந்த பெயர் இயற் பெயர் கிடையாது, வழங்கு பெயராகும். அரையன் - அரசன் மஹிமாலயன் - மஹிமை வாய்ந்த உயர்ந்தவன் பராந்தக - பெரும்பாட்டனார் மதுரை கொண்ட பரகேசரி பராந்தக சோழனின் பெயர் முத்தரையன் - இளவரசனின் இளையவன் கல்வெட்டு வெளியிடப்பட்ட காலம் உத்தமசோழன் (கி.பி.970-985) இராஜ ராஜ சோழனின் மூத்த சகோதரன் ஆதித்ய சோழனின் கொலைக்கு பிறகு, உத்தம சோழன் மன்னராக பதவி ஏற்பார். அந்த கால கட்டத்தில் வெளியிடப்பட்ட இக்கல்வெட்டில் அரசி #பஞ்சவன்_மாதேவி கணவர் அரையன் (அரசர்) மஹிமாலயன் ஆயின பராந்தக முத்தரையன் என்று உள்ளது. பஞ்சவன் மாதேவியின் கணவர் இராஜராஜ சோழன் ஆவார். ஆதித்த கரிகாலன் கொலைக்கு பிறகு அவர் 15 ஆண்டுகள் அரச பதவி வேண்டாம் என்று விலகியிருப்பார். இராஜராஜன் என்ற வழங்கு பெயறா...