நெய்தல் மீனவர் வாழ்வு முறைமைகள்
உறவுகளே உங்கள் பொன்னான நேரத்தை, கொஞ்சம் வாசிப்புகளில் செலவிடுங்கள், நாம் அறிந்துகொள்ளப்படாத வரலாற்று பக்கங்கள் இன்னும் ஏராளம் உண்டு... கடலைப் பற்றிப் பேச நிறைய இருக்கிறது. கடலை சந்தித்ததிலிருந்து ஓயாமல் அலைகள் கரைபுரண்டு திரும்புகின்றன. கடலின் பேச்சை அருகாமையில் இருந்து கேட்கக் கேட்க பேராவல் பொங்குகிறது. எந்தவிதமான அயர்ச்சியிலிருந்தும் கடல் நம்மை மீட்டுக் கொண்டு வந்துவிடுகிறது. வறீதையாவும் தொடர்ந்து கடலைப்பற்றிப் பேசுகிறார். நெய்தல் சுவடுகள் துவங்கி சோழகக் காத்தின் சுழற்சியையும், நீரோட்ட அலைச்சுழிகளின் ஆர்ப்பரிப்பையும் நம்முள் கடத்திக் கொண்டுவரும் அற்புதம் அவரின் எழுத்தில் மிளிர்கிறது. வர்ளக்கெட்டில் தேர்ந்ததொரு கதையாளராக உருப்பெற்ற வறீதையா கூஜாநகரத்தில் கவிஞராக வெளிப்பட்டிருந்தார். அதற்கு முன்னரே வறீதையாவின் எழுத்துலகம் கடல்மக்களின் வாழ்வில் மையம் கொண்டிருந்தது. இடைவெளியற்று இயங்கும் அவரால் எழுதப்பட்ட ஆய்வுகள் களப்பணி நடத்திப் பெற்ற அனுபவங்களிலிருந்து நூல்களாக மலர்ந்தன. நீண்டதொரு ஆய்வுப் பாரம்பர்யத்தின் வேர்களில் புதுப்புது வாசிப்புகள் காய்த்து கனிந்து கிடக்கின்றன. இந்த ந