Posts

Showing posts from February, 2021

வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி!

Image
வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி!  குடியாத்தம் - சித்தூர் சாலையில் குடியாத்தத்தில் இருந்து 10கிமீ தொலைவில் அமைந்துள்ள ஊர் கல்லப்பாடி அவ்வூரின் அருகே வெங்கட்டூரில் ஒரு தனியார் வயலில் மூன்று நடுகற்கள் தற்போது பாதி புதைந்துள்ள நிலையில் காணப்படுகிறது. அவை மூன்றும் ஒரே காலக்கட்டத்தை சேர்ந்ததாக தெரிகிறது. அவை வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரியான ஆதித்த கரிகாலனின் மூன்றாவது (கிபி 958) ஆட்சியாண்டை சேர்ந்தது. மூன்று கல்வெட்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. இவ்வூரில் இருந்து தொறு (பசுக்கள்) கொள்வதற்காக வணிகர்கள் சிலர் அவர்தம் அடியாட்களுடன் திருவூரல் சென்று தொறு மீட்டு திரும்பும்போது கோட்டுபூசலில் சோளனூர் எனும் ஊரழிஞ்சி இறந்திருக்கிறார்கள்.  விக்ரமாதித்தனாகிய தன்ம செட்டி மகன் சாத்தயன் என்பவருக்கு அடியானாக முத்தரை(ய)ன் காரி என்பவரும் உடன்சென்று கோட்டுபூசலில் உயிர்விட்டிருக்கிறார். அவருக்கும் நடுகல் எடுக்கப்பட்டுள்ளது.  கல்வெட்டில் சேங்குன்றத்து 'தூமடைப்பூர்' என குறிப்பிடப்பட்டுள்ளது. சேங்குன்றம் எனும் ஊரானது குடியாத்தத்தில் இருந்து பலமநேர் செல்லும் சாலைய