Posts

Showing posts from October, 2025

புதுக்கோட்டையில் மெய்வழி நூல்கள்

Image
உலகில் எத்தனையோ சமயங்கள் தோன்றி மறைந்தாலும் இன்றைக்கும் புதுக்கோட்டையில் சாகாவரம் பெற்ற சமயம் ஒன்று உள்ளதென்றால், அஃது ‘மெய்வழி’ ஒன்றேயாகும். இதில், இன்று பல்வகைச் சமயங்களைச் சார்ந்த மக்கள் வாழ் கின்றனர். இச்சமயத்திற்கு வேரான அடிப்படைச் சமயம் ஒன்று உண்டெனில் அது பௌத்த சமயமே யாகும். இஃது உலகோருக்கு அன்பைப் போதிக்கும் தம்ம நெறியைக் கொண்ட சமயமாகும். இன்றுள்ள எல்லாச் சமயங்களுக்கும் முந்தையதும் காலச் சக்கரத்தின் முதற்கடையாணி எனப் போற்றப்படுவதுமாகிய பௌத்தம் சிறிது நாளில் சமணமாகிய உட்பிரிவைக் கொண்டு திகழ்ந்தது. சமணமும் பௌத்தமும் தழைத்தோங்கிய இப் புதுக்கோட்டை பூமியில் அறநூல்கள் பல முகிழ்த்தன. மிதிலைப்பட்டியில் சிலப்பதிகாரம் முதல் சிறு காசாவயல் முனைவர் சு.மாதவனின் பௌத்தத் திறனாய்வு நூல்கள் வரை இந்த மண்ணிலேயே தமிழுக்குக் கிடைத்த அரிய பொக்கிஷங்கள் ஆகும். சுருக்கமாய்ச் சொன்னால் பௌத்தமும் சமணமும் இல்லையென்றால் தமிழில் அறநூல்களே இல்லை எனலாம். அறத்தைப் போதிக்காத எவையும் நூல் களாக இருக்கமுடியாது. புதுக்கோட்டையைச் சேர்ந்த குடுமியான் மலை, சித்தன்ன வாசல், விராலிமலை, புத்தாம்பூர், அண்ணல்வாயில்...